Published:Updated:

அழகான அக்கா... அருவருப்பான தம்பி!

மெய்யழகி சீக்ரெட்

அழகான அக்கா... அருவருப்பான தம்பி!

மெய்யழகி சீக்ரெட்

Published:Updated:

''என் பேர நானே மறந்தேன்டி...

 உன்னை நினைச்சு நினைச்சு

வானத்துல ஜோரா பறந்தேன்டி!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

- குரலில் உற்சாகம் கொப்பளிக்க பெருங்குரலெடுத்துப் பாடுகிறார் ஆர்.டி.ஜெயவேல். கோடம்பாக்கத்து சினிமாக்களில் அசோஸியேட் இயக்குநராகக் கடந்த 15 ஆண்டுகளாகப் பல முன்னணி இயக்குநர்களிடம் பணிபுரிந்தவர். தற்போது 'மெய்யழகி’ என்ற தன் கனவுப் படத்தை 34 நாட் களில் முழு மூச்சில் ஒரே ஷெட்யூலில் இயக்கி முடித்து, மற்ற இயக்குநர்களைப் புருவம் உயர்த்த வைத்திருக்கிறார்.

''அகத்தியன், பிரபு சாலமன் எனப் பல முக்கிய இயக்குநர்களிடமும் பல தெலுங்கு இயக்குநர்களிடமும் இணை இயக்குநராக வேலை பார்த்தவன் நான். ரொம்பவே கஷ்டப்பட்ட குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்த நான், படிப்படியா உழைச்சு,  இன்னைக்கு இயக்குநரா உயர்ந்திருக்கிறேன். இந்த இடத்துக்கு வருவதற்கு நான் பட்ட கஷ்டம் எனக்கு மட்டும்தான் தெரியும்.

அழகான அக்கா... அருவருப்பான தம்பி!

இப்பவும் பல முன்னணி இயக்குநர்கள் பட டிஸ்கஷனுக்கு என்னைத் தவறாமல் கூப்பிடுவாங்க. ரொம்ப நாளாவே தனியா சினிமா பண்றதுக்கான வாய்ப்புகள் தள்ளிப் போய்க்கிட்டே இருந்தது. இப்போதான் நேரம் கூடி வந்திருக்கு. 3,000 அடி களில் மிகக் குறைந்த அளவில் மட்டும் ஃபிலிம் ரோல்களைச் செலவு செஞ்சு, 34 நாட்களுக்குள் முழுப் படத்தையும் ஐந்து பாடல்களோடு தேனிப் பகுதியில் ஷூட் செஞ்சு முடிச்சிருக்கேன்'' என்று உற்சாகமாகப் பேசுகிறார் ஜெயவேல்.

''இதைப் பெரிய சாதனையா இப்போ

அழகான அக்கா... அருவருப்பான தம்பி!

எல்லோரும் பேசுறாங்க. பல முன்னணி இயக்குநர்களும் உதவி இயக்குநர்களும் வாழ்த்துச் சொல்றாங்க. மக்கள் பெரிய அளவில் இந்த 'மெய்யழகி’யைக் கொண்டாடுகிற வரைக்கும் எனக்குப் பதற்ற மாதான் இருக்கும். முதல் காட்சிக்கு மக்களின் கைத்தட்டல் கேட்கும் அந்த நாளுக்காகக் காத்திருக்கிறேன்'' என்றவரிடம், ''படத்தோட கதையைச் சொல்லுங்க'' என்றேன்.

''இந்தக் கதை உங்களை நெகிழவைக்கும் வழக்கமான காதல் கதை கிடையாது. கதையே உங்களை ஆச்சர்யப்படுத்தும். வழக்கமான ஃபார்முலாவுக்குள் கதை சொல்லாம, ஒரு அழகான தோற்றம்கொண்ட அக்காவுக்கும் அருவருப்பான தோற்றம்கொண்ட தம்பிக் கும் இடையில் நடக்கிற அன்பை அழகாப் பேசும். அன்பை வெச்சுக்கிட்டு எதுவும் செய்ய முடியாதுனு சிலர் சொல்வாங்க. ஆனால், அன்புக்கு முன்னால இந்த உலகத்துல வேற எதுவும் பெருசு கிடையாதுனு என் படம் சொல்லும்.

'ஆரோகணம்’ படத்துல நடிச்ச 'ஜெய்குயேனி’ங்கிற பொண்ணுதான் அக்காவா நடிச்சிருக்காங்க. தம்பியா 'பட்டாளம்’ படத் துல நடிச்ச 'பாலாஜி’ நடிச்சிருக்கார். 'காதல் சொல்ல வந்தேன்’ படத்துல நாயகனா நடிச்ச 'பாலாஜி’ பெரிய பிரேக்குக்காகக் காத்திருந்தார். இந்தக் கதையைக் கேட்டுட்டு உடனே நடிக்க ஒப்புக்கிட்டாரு.

பாலாஜி நடிப்பைப் பார்த்துட்டு ஷூட்டிங்குல வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்த மக்கள், நிஜமாகவே அருவருப்பான தோற்றம் உள்ள ஒருத்தரை வெச்சு டாக்குமென்டரி எடுக்குறாங்களோனு நினைச்சிட் டாங்க. அந்த அளவுக்குத் தத்ரூபமா நடிச்சிருக்காரு. நிச்சயம் இந்தப் படம் அவ ருக்குப் பல விருதுகளை வாங்கித் தரும். அதே போல எஸ்.பி.பி. சாரோட சகோதரர் மகன் அபிஷேக்குங்கிற 20 வயசுப் பையனை இளம் இசையமைப்பாளரா அறிமுகப்படுத்தி இருக்கேன்.

இப்படி ஒரு கதையைக் கேட்டதும் 'நானே படத்தைத் தயாரிக்கிறேன்’னு சொன்னார் சினிமாவுக்குச் சம்பந்தமே இல்லாத ரிஃபான்ஜிங்கிற பிஸினஸ்மேன். கதைக்காகவே படம் எடுக்க வந்த அவர் இல்லைன்னா, இந்த 'மெய்யழகி’ இல்லை'' என்று உருகுகிறார் ஆர்.டி.ஜெயவேல்!

அழகான அக்கா... அருவருப்பான தம்பி!

- ஆர்.சரண்  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism