Published:Updated:

தடை தாண்டிய ஜூலை 8

தடை தாண்டிய ஜூலை 8

தடை தாண்டிய ஜூலை 8

தடை தாண்டிய ஜூலை 8

Published:Updated:
தடை தாண்டிய ஜூலை 8
##~##

மதுரையில் கடந்த வாரம் கூட்டம் கூட்டமாக மாணவர்களும் பொது மக்களும் கலந்துகொண்ட ஆலயப் பிரவேச நிகழ்ச்சி நடைபெற்றது. கோயிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டபோது, அதனை எதிர்த்து முன்பு நடந்த போராட்டம்தானே அது? இப்போது எதற்குப் புதிதாக ஆலயப் பிரவேசம் செய்ய வேண்டும் என்று குழம்ப வேண்டாம். இது ஒரு நினைவு நாள்  நிகழ்ச்சி. அதைப் பற்றி வாய்ஸ் ஸ்நாப்பில் தகவல் தெரிவித்து இருந்தார் என் விகடன் வாசகர் சத்தியமூர்த்தி. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தாழ்த்தப்பட்ட மக்கள் முதன் முதலில் தங்கள் உரிமைகளை வென்றெடுக்க 1939-ம் ஆண்டு ஜூலை 8-ம் தேதி ஆலயப் பிரவேசம் செய்தார்கள். அன்று வைத்தியநாத அய்யர் அந்தப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கினார். அதை மறக்காமல் ஆண்டு தோறும் அதேநாளில் ஆலயப் பிரவேச தினத்தை நடத்திவரு கிறார்கள் மதுரையைச் சேர்ந்த சிதம்பர பாரதி உள்ளிட்டவர்கள். இந்த ஆண்டு நடந்த விழாவில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்

தடை தாண்டிய ஜூலை 8

தன் உட்பட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலரும் கலந்துகொண் டார்கள்.  இந்த நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்பு பற்றிக் குமரி அனந்தனி டம் கேட்டோம்.

'தாழ்த்தப்பட்ட  மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் உரிமை களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவந்த மகாத்மா காந்தி, தலித் மக்க ளுக்கு ஆலயப் பிரவேச உரிமையும் வேண்டும் என்று வலியுறுத்தினார். அவருடைய  கொள்கையைக் காங்கிரஸும்ஏற்றுக் கொண்டது. உயர் சாதியினரின் எதிர்ப்பையும் மீறி மதுரையில், 'ஆலயப் பிரவேசத்தை நடத் திக் காட்டுவோம்’ என்று வைத்தியநாத அய்யர், என்.எம்.ஆர்.சுப்புராமன் ஆகியோர் முன் நின் றார்கள். வைத்தியநாத அய்யரின் சீனியர் வழக் கறிஞரான ராவ் பகதூர் நடேச அய்யர் இதைக்  கடுமையாக எதிர்த்தார். ஆலயப் பிரவேசத்துக்கு எதிராக சனாதனிகள் (பழமை விரும்பிகள்) மாநாட்டைக் கூட்டினார் நடேச அய்யர்.

தடை தாண்டிய ஜூலை 8

பூரி சங்கராச்சாரியார் தலைவராகவும் நடேச அய்யர் செயலாளராகவும் இருந்த அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், தாழ்த்தப்பட்ட மக்களின் ஆலயப் பிரவேசத்தைக் கடுமையாக எதிர்த்தார்கள்.

கேரளாவில்கூட தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலுக்குள் செல்ல அப்போதைய திருவிதாங் கூர் மன்னர் அனுமதி அளித்து இருந்தார். ஆனால், தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டவர்களும் நாடார்களும் கோயிலுக்குள் போக அனுமதிக்கப் படவில்லை.  அனுமதி கேட்டு உச்சநீதிமன்றம் வரை போனார்கள் நாடார்கள். அங்கும் அவர் களுடைய கோரிக்கை ஏற்கப்படாததால், லண் டனில் உள்ள பிரிவியு கவுன்சிலில் மேல்முறையீடு செய்தார்கள். ஆனால், நீதிமன்றமோ, 'இந்தியா வில் ஆங்கில அரசாங்கத்தின் நிர்வாகத்தில் நாங்கள் தலையிட முடியாது’ என்று சொல்லி விட்டது.  இந்தச் சூழ்நிலையில்தான் வைத்திய நாத அய்யர்,  ஜூலை 8-ம் தேதி கக்கன் உள் பட ஐந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், விருது நகர் எஸ்.எஸ்.சண்முக நாடாருக்கும் பூணூல் அணிவித்து கோயிலுக்குள் அழைத்துச் சென்றார்.

ஆலய நிர்வாகி ஆர்.எஸ்.நாயுடு ஆதரவோடு வெற்றிகரமாக ஆலயப் பிரவேசத்தை நடத்தி முடித்தார் வைத்தியநாத அய்யர். தெற்கு வாசல் வழியாக உள்ளே போய், கிழக்கு வாசல் வழி யாக வெளியே வந்தார்கள் அவர்கள். ஆலயப் பிரவேசத்தின் வெற்றியையும் அறிவித்தார்கள்.

உடனே நடேச அய்யர் தலைமையிலான சனாதனிகள், 'தாழ்த்தப்பட்டவர்களும், நாடார்களும் உள்ளே போனதால்  தீட்டுப்பட்டு விட்டது என்று சொல்லிக் கோபித்துக்கொண்டு மீனாட்சி தெய்வம் வெளியேறிவிட்டாள்' என்று செய்தி பரப்பியதோடு, அன்றைய சென்னை மாகாண முதல்வர் ராஜாஜிக்கும் புகார் அனுப்பி னார்கள். இதுபற்றி விசாரித்து அறிக்கை தந்த சத்தியமூர்த்தி, 'மீனாட்சி இப்போதும் கோயி லில்தான் இருக்கிறாள். முன்பைவிட ஆயிரம் கோடி தேஜஸோடு  (சூரியஒளியின் பிரகாசத் தோடு) இருக்கிறாள்’ என்று ராஜாஜியிடம் சொன்னார். அடுத்த மூன்று நாட்களுக்குள் அனைத்து ஆலயங்களையும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் திறந்துவிடும்படி அவசரச் சட்டம் போட்டார் ராஜாஜி. அந்த நினைவு நாள்தான் இன்று' என்றார்!

தடை தாண்டிய ஜூலை 8

- கே.கே.மகேஷ்

படங்கள்: பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism