Published:Updated:

வலையோசை

வலையோசை

வலையோசை

வலையோசை

Published:Updated:
வலையோசை

நீ யார்?

வலையோசை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஓர் இளைஞன்  தன் சிறு வயதில் படித்த பள்ளிக்கூடத்தின் ஆசிரியரை நெடுநாட் கள் கழித்துச் சந்தித்தான். ''ஐயா, என் வாழ்க்கையில் எதுவுமே சரியா நடக்கவில்லை. நான் எந்த முயற்சி எடுத்தாலும் அதில் ஏதாவது தடங்கல் வருகிறது. பல நேரங்களில், என்னடா வாழ்க்கை இது என்று தோன்றுகிறது''  என்றான்.

ஆசிரியர் அவனைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு மூன்று குடுவைகளில் நீரை நிறைத்து, ஒன்றில் ஒரு கேரட்டையும்,  இரண்டாவதில் ஒரு முட்டையையும், மூன்றாவதில் சில காபிக் கொட்டைகளையும் போட்டு மூன்று குடுவைகளையும் அடுப்பில்வைத்து கொதிக்கவைத்தார். 20 நிமிடங்களுக்குப் பின், மூன்றையும் எடுத்து தனித் தனித் தட்டுகளில்வைத்து, அவனை கேரட்டைத் தொட்டுப் பார்க்கக் கூறினார். மிகவும் மிருதுவாக இருந்தது. முட்டையை உடைக்கச் சொன்னார். மேல் ஓடு உடைந்ததும் உள்ளே உறுதியாக இருந்தது. காபியைக் குடிக்கக் கொடுத்தார். நறுமணத்துடன் சுவையாக இருந்தது. ஆசிரியரைப் புரியாமல் பார்த்தான்.

அவர், 'மூன்று பொருட்களும் ஒரே விதமான பிரச்னையைத்தான் எதிர்கொண்டன. கொதிக்கும் நீரில் 20 நிமிடங்கள் இருந்தன. ஆனால், மூன்றும் வெவ்வேறு வகை யில் எதிர்வினை ஆற்றின. கேரட் தனது உறுதித் தன்மையை இழந்து, மிகவும் மிருதுவானதாக ஆகிவிட்டது. உடைத்தால் நொறுங்கிப் போகும் நிலையில் இருந்த முட்டை, உறுதியாகிவிட்டது. காபிக் கொட்டையோ கொதிக்கும் நீரில் இருந்த பின்பு, நீரின் தன்மையையே மாற்றிவிட்டது. இவற்றில் நீ எதுவாக இருக்கப் போகிறாய்?’ என்றார்.

நாம் எத்தகையவராக இருக்கப் போகிறோம் என்று உணர்ந்து செயல்பட்டோ மானால், வெற்றி நமதே!

வலையோசை

அர்த்தமுள்ள சாஸ்திரம்!

அது என்ன சாம, தான, பேத, தண்டம் என்று யோசித்திருக்கிறேன். சமீபத்தில் விடை கிடைத்தது. அவை சாணக்கியரின் அர்த்த சாஸ்திரத்தில் உள்ளனவாம். சாம, தான, பேத, தண்டம்...  இவை நான்கும் ஒரு பிரச்னையையோ, இருவருக்கு இடையிலான  வாக்குவாதத்தையோ எதிர்கொள்வதற்கான முறைகளாம்.

சாமம்(conciliation):  இருவருக்கும் பொதுவான நன்மைகளை எடுத்துக் கூறியோ, எதிராளியின் மனம் குளிர அவரைப் பாராட்டியோ, ஒரே இயல்புகளைக் கருத்தில்கொண்டோ சமரசம் செய்தல்.

தானம் (placating with gifts):பணம், சலுகைகள் அளித்து எதிர்ப்பை அடக்கிவிடுதல்.

பேதம் (sowing dissension): இருவருக்குள் பிளவுகளை ஏற்படுத்தி, பிரச் னையை வளர்த்தல்.

தண்ட (use of force): ஆதிக்கத்தையும், அதிகாரத்தையும், வலிமையையும் பயன்படுத்தி பிரச்னையை அடக்குதல்!

தண்ணீர்...  தண்ணீர்!

சமீபத்தில் ஒரு வீடியோ பார்த்தேன். அதில் கீர்த்திகா என்ற பெண்மணி, டெல்லியின் வீதிகளில் நடந்தபடி ஒவ்வொருவரிடமும், இரண்டே இரண்டு கேள்வி களைக் கேட்டவாறு செல்கிறார். 'உங்களின் குடி நீர் எங்கிருந்து வருகிறது? உங்களுடைய மலக் கழிவுகள் எங்கு செல்கின்றன?’ இது யமுனை நதியின் மரணத்தைப் பற்றிய ஆவணப்படத்துக்காக. அதிகம் பேருக்குப் பதில் தெரிய வில்லை. சொன்ன பதிலிலும் குழப்பம் அதிகம்.  'குடிநீர்... யமுனையில் இருந்து என்று நினைக்கிறேன்’. 'உங்கள் கழிவு?’ 'ம்ம்ம்ம்... அதுவும் அங்கேதான்’ 'தெரியவில்லை’, 'பூமிக்கு அடியில்?’ இப்படிப் பல விதமான பதில்கள். ஆனால், உண்மை என்ன?

வலையோசை

கழிவுகளில் பெரும்பான்மை, நிலத்தின் நீர் ஆதாரங்களில் கலக்கின்றன. நதி கள், குளங்கள், ஏரிகள், நிலத்தடி நீரில் நாள் ஒன்றுக்கு 38,000 மில்லியன் லிட்டர் கழிவுகள் கலக்கின்றன. ஆனால், இந்தியாவில் 12,000 மில்லியன்

லிட்டர் கழிவுகளைச் சுத்திகரிப்பு செய்வதற்கு மட்டுமே வசதிகள் உள்ளன. நாம் உருவாக்குவதில் மூன்றில் ஒரு பங்கை விடக் குறைவு. தேசியக் குடும்ப நல மூன்றாம் ஆய்வின் படி, கிராமப்புறங்களில் 26 சதவிகிதத்தினருக்கு மட்டுமே சுகாதார வசதி உள்ளது. தேசிய சராசரி 44 சதவிகிதம் மட்டுமே. இதில் இருந்து ஒன்று புரிகிறது. நம் அருகில் இருக்கும் நீர் நிலைகளை மாசு படுத்திவிட்டு, நமக்குத் தேவையான சுத்தமான நீரைத் தேடி தொலைவில் செல்கிறோம்!

வலையோசை

அறிவுக்கும் மனதுக்கும்!

நாங்கள் கொடைக்கானலுக்குச் சுற்றுலா சென்று இருந்தபோது, பேரிஜம் லேக் அருகில் காலணிகளுக்கு பாலிஷ் போடுபவர் ஒருவர் அமர்ந்து இருந்தார். பேரிஜம் லேக் என்பது கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் செல்லும் இடம் அல்ல. மிகச் சிலரே அங்குச் செல்வார்கள். இப்படிப் பட்ட இடத்தில் தொழில் செய்யும் அவருடைய வியாபாரத் திறமையை நான் எடை போட்டுக்கொண்டு இருக்கும்போதே, என்னுடன் வந்த  நண்பர்  தன்னுடைய புத்தம் புதிய காலணிகளை பாலிஷ் செய்யக் கொடுத்தார். 'எவ்வளவாம்?’ என் றேன். 'அவர் எவ்வளவு சொல்வார் என்று எனக்குத் தெரியாது. ஆனால், நான் பத்து ரூபாய் கொடுப்பேன்’ என்றார் என் நண்பர். எனக்கு சுருக் என்றது. எனக்கு ஏன் அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று தோன்றவில்லை. அறிவால் அவ ரைப் பார்த்த என்னை யோசிக்கச் செய்தார், மனதால் அவரைப் பார்த்த என் நண்பர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism