Published:Updated:

தூத்துக்குடி 25

தூத்துக்குடி 25

தூத்துக்குடி 25

தூத்துக்குடி 25

Published:Updated:

'எங்கள் ஊர் இது, எங்கள் உறவிது, முத்துநகர் என்னும் பேர் இது

எங்கள் ஊர் இது, எங்கள் உறவிது, முத்துநகர்  என்னும் பேர் இது

தேசத்துக்காகப் பாடுபட்ட தலைவர்கள் பிறந்த ஊர் இது

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தமிழகத்தின் நுழைவு வாயிலாம் துறைமுகத்தைக்கொண்டது இது

பல அறிஞர்கள், கலைஞர்கள், கவிஞர்கள்,      

தலைவர்கள் வாழ்ந்த  புண்ணிய பூமி இது

எங்கள் ஊர் இது, எங்கள் உறவிது...

தூத்துக்குடி என்னும் பேர் இது!’

தூத்துக்குடி மாவட்டம் உருவாகி 25 ஆண்டுகள் ஆனதை ஒட்டி விழாக் கொண்டாட்டத்துக்கான பாடல் அது. இந்தப் பாடலைத்தான் தற்போது தூத்துக்குடி மாவட்ட இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முணு முணுத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்தப் பாடலை எழுதி மெட்டுப் போட்டு இசை அமைத்து இருப் பது எல்லாமே தூத்துக்குடியைச் சேர்ந்த இசைக் கலைஞர்கள் என்பதுதான் இதில் விசேஷமே.  

தூத்துக்குடி 25

இந்தப் பாடலை எழுதி இசை அமைத்த இசக்கியப்பன் பி.ஏ. மியூஸிக் படித்திருக்கிறார். தூத்துக்குடி அருகே உள்ள கடம்பூரில் மாணவர்களுக்கு  இசைக் கருவி இசைக் கக் கற்றுக்கொடுக்கிறார். அவரிடம் பேசியபோது, ''தூத்துக்குடி மாவட் டம் வெள்ளி விழாக் கொண் டாட்டத்துக்காக  தூத்துக்குடி தொடர்பான கவிதை, பாட்டு வரவேற்கப்படுகிறது’னு ஆட் சியர் அலுவலகத்தில் இருந்து வந்த விளம்பரத் தைப் பாத்தேன்.வேலைக் குப்போன நேரம்போக,  யோசிச்சு யோசிச்சுக் கவிதை நடையில எழுதி, மெட்டுப் போட்டு, பாடி, ரெகார்ட் பண்ணி சி.டி போட்டு கலெக்டர் ஆபீஸ்ல கொடுத்தேன். பாட்டைக் கேட்டுட்டு 'பாட்டு நல்லா இருக்கு. ஏதாவது ஒரு பெரிய ஆர்டிஸ்ட்டைப் பாடவெச்சு கிராண்டா பண்ணிக் கொடுங்க’னு சொன்னாங்க. பாடகி அனுராதா ஸ்ரீராம் மேடத்தின் கணவர் ஸ்ரீராம் பரசுராமனை ஏற்கெனவே எனக்குத் தெரியும். அவர் மூலமா அனுராதா மேடத்தைப் பாடவெச்சோம். இசை அமைச்சது எங்க ஊரைச் சேர்ந்த பாக்யராஜ் என்பவர். பாட்டைக் கேட்டுட்டு கலெக்டர் ஆஷிஷ் குமார் சார் 'ரொம்ப சூப்பரா இருக்கு’ன்னு கூப்பிட்டுப் பாராட்டினார். இந்தப் பாடல் வரிகளை ரெண்டே நாட்களில் எழுதினேன். தூத்துக்குடி மாவட்டத்துல பிறந்து தேசத்துக்காகப் பாடுபட்ட வ.உ.சி, பாரதி போன்ற தலைவர்கள், தூத்துக்குடி மாவட்ட கிராமியக் கலைகள், கடல் வளங்கள், முக்கியத் தலங்கள், உணவுபண்டங்கள்’னு எல்லாத்தையும் இந்தப் பாட்டுல சொல்லி இருக்கேன். முதல்ல இவை எல்லாத்தையும் வரிசைப்படுத்திக்கிட்டதால பாட்டு ரொம்ப ஈஸியா வந்திருச்சு. நான் பிறந்த ஊருக்காக என்னோட சிறிய  பங்களிப்பு இது. இந்த ஆடியோ ரிலீஸ் அமைச்சர் செல்லப் பாண்டியன் தலைமையில நடந்தது.'' என்றார்  

தூத்துக்குடி 25

பாட்டுக்கு இசை அமைத்த பாக்யராஜ், ''நான் 'மேகராகம்’ங்கிற பெயர்ல இசைப் பள்ளி வெச்சிருக்கேன். எனக்குச் சின்ன வயசுலேர்ந்தே இசையில் ஆர்வம் உண்டு. ஆனா, சரியான வழிகாட்டி இல்லை. இசை யைக் கத்துகிட்டே, மாணவர்களுக்கும் அதைச் சொல் லிக் கொடுத்தேன். தூத்துக்குடியில பிறந்ததுக்கு ஏதா வது செய்யணும்னு நினைச்சேன். இந்த வாய்ப்புக் கிடைச்சது. எல்லாரும் எல்லா நேரமும் கேக்குறமாதிரி வெஸ்டர்ன், ஃபோக், கிளாசிகல், மெலடி எல்லாத்தையும் ஒண்ணுசேர்த்து உருவாக்கினோம். இப்போ பட்டி தொட்டி எல்லாம் என் இசை கேட்குது'' என்கிறார் பரவசக் குரலோடு!  

தூத்துக்குடி 25

-ஆ.கோமதிநாயகம், படங்கள்: ஏ.சிதம்பரம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism