Published:Updated:

எடைக்கு எடை வெத்தலை!

எடைக்கு எடை வெத்தலை!

எடைக்கு எடை வெத்தலை!

எடைக்கு எடை வெத்தலை!

Published:Updated:
##~##

காது குத்தோ, கல்யாணமோ எதுவாக இருந்தாலும் தாம்பூலத் தட்டில் இருந்து வெற்றிலை எடுத்து வாய் மணக்க, நாக்குச் சிவக்க வெற்றிலை போடாவிட்டால் தமிழர் களின் மனம் திருப்தி அடையாது.  தமிழ்நாட்டில்  பல மாவட்டங்களில் வெற்றிலையைப் பயிரிட்டாலும் தூத்துக்குடி மாவட்டம் 'ஆத்தூர் வெற்றிலை’ என்றாலே தனி மவுசுதான்.  தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் இருக்கிறது ஆத்தூர். அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான மேல ஆத்தூர், வடக்கு ஆத்தூர், சுகந்தலை, சேதுக்குவாய்த்தான், ஆத்தூர் கஸ்பா, மரத்தலை, கொழுவைநல்லூர் உள்ளிட்ட 30 கிராமங்களில் சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில் வெற்றிலை பயிரிடுகிறார் கள். இந்த வெற்றிலை விவசாயத்தை நம்பி சுமார் 10 ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் வாழ்ந்து வருகிறார்கள். அந்தக் காலத்தில் இருந்து இந்தக் காலம்வரை பழமையான பாசன முறையை மாற்றா மல் வெற்றிலையை உற்பத்தி செய்வது தான் ஆத்தூரின் ஸ்பெஷல். தமிழ் நாட்டின் மற்ற மாவட்டங்களில் நடை பெறும் வெற்றிலை விவசாயத்தில்  குறிப்பிட்ட பருவகாலம் வரைதான் மகசூல் கிடைக்கும் ஆனால், ஆத்தூர் வெற்றிலைதான் வருடம் முழுவதும் தட்டுப்பாடு இல்லாமல்  கிடைக்கும்.

எடைக்கு எடை வெத்தலை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'' 'கார்த்திகையில் நட்டு வைகாசியில் இலை பறிச்சு’ என்கிற முறையில வெற் றிலை பயிரிடுறோம். அதாவது, கார்த் திகை மாசம் வெத்தலைக் கொடிக்காலை நட்டு வைகாசியில இருந்து வருடம் முழுக்க இலை பறிப்போம். பயிர், கொடிக்கால், முதுகால் கொடிக் கால், சடைக்கால், கொழுந்துன்னு மொத்தம் அஞ்சு பருவங்கள் உண்டு. வெத்த லையை  மாத்து, சக்கை, ராசி, சன்னரகம்னு நாலு வகையாகப் பிரிக்கலாம். மாத்து வெத்த லைனா பெருசா இருக்கும்.  சக்கைனா கரும் பச்சை நிறத்துல சிறுசா இருக்கும். ராசினா மீடியம் சைஸ். சன்னரகம்னா கொழுந்து வெத் தலை. 'கொழுந்தனுக்கு கொழுந்து வெத்தலை, மாமனுக்கு மாத்து வெத்தலை’னு கிராமத்துலப் பழ மொழியே சொல்லுவாங்க. இதுல சக்கையும், மாத்தும்  காரமா இருக்கும். இது பதினஞ்சு நாள் வரைக்கும் வாடாம இருக்கும்.  

எல்லா ஊர்களிலும் வெத்தலையைக்'கட்டு’க் கணக்கில் விற்பனை செய்வாங்க. ஆனா, ஆத் தூர்ல மட்டும் பல நூறு வருஷங்களுக்கு முன் னாடியே எடைக்கு விற்பனை செஞ்சாங்க. இன்னைக்கு வரைக்கும் வெத்தலையை மொத்தமா எடைபோட்டு அப்புறமாக் கட்டுக் கட்டி ரகத்துக்கு ஏத்த மாதிரி விலை வெச்சு விக்கிறோம்'' என்கிறார் வெற்றிலை விவசாயி கணேசன்.

எடைக்கு எடை வெத்தலை!

வட்டார வெற்றிலை வியாபார சங்கத் தலைவர் சதீஷ்குமார் பேசும்போது, ''சின்னக் கட்டுல 100, பெரிய கட்டுல 500, ஒரு பண்டலில் 1,000, பெரிய பண்டலில் 5,000 வெற்றிலையும் இருக்கும். மாத்து வெற்றிலைக் கட்டு 60ரூபாய்க் கும்,  சக்கை 80 ரூபாய்க்கும் ராசி 50 ரூபாய்க் கும், சன்னரகம் 40 ரூபாய்க்கும் விற்பனை ஆகுது. சடங்கு, புதுமனை புகுவிழா, கோயில் திருவிழா மற்றும் சுபமுகூர்த்த நாட்களில் விலை ஏத்திடுவோம். பொதுவா வெத்தலைப் பறிப்புக் குறைஞ்சா விலை ஏத்துவோம். பறிப் புக் கூடினா விலையைக் குறைப்போம்.  ஆத் தூர்ல இருந்து தினமும் ஏழு டன் வெத்தலை  வெளி மாநிலம், வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகுது. 'சீஸன் டைம்’னு சொல்ற டிசம்பர் மாதம் முதல் மார்ச் வரைக்கும் எக்ஸ்போர்ட் ரெண்டு மடங்காக உயரும். சக்கை, மாத்து ரக வெற்றிலைகள் வடமாநிலங்களுக்கும், மற்ற ரக வெற்றிலைகள் தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களுக்கும் போகுது. வெற்றிலையைக் கட்டுக்கட்டாக் கட்டி, வாழை மடலில் சுற்றி வைத்து பஸ், லாரி, ரயில், கப்பல் மூலமா அனுப்புறோம். தூத்துக்குடியில இருந்து திருச் செந்தூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி செல்லும் எந்தப் பேருந்தில் ஏறினாலும் வெற் றிலை மணம் வீசும். ஏன்னா, அந்த பஸ்ல ஒண்ணு பண்டல் இருக்கும். இல்லைனா ஆத்தூர் வெத்தலை போடுற யாராவது இருப்பாங்க'' என்றார்!

- இ.கார்த்திகேயன்

படங்கள்: ஏ.சிதம்பரம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism