Published:Updated:

ஆபரேஷன் பத்மநாபா!

ஆபரேஷன் பத்மநாபா!

ஆபரேஷன் பத்மநாபா!

ஆபரேஷன் பத்மநாபா!

Published:Updated:

'மில்லியன், பில்லியன், ட்ரில்லியன்’ புகழ் பத்மநாப சுவாமி கோயில் பொக்கிஷங்கள் மீண்டும் பரபரப்பு வெளிச்சத்தில். கோயிலின் சொத்துகளை மதிப் பிடும் பணி, மீண்டும் சர்வதேசச் செய்தி ஊட கங்களைக் கேரளம் நோக்கிப் படையெடுக்க வைத்துள்ளது. வைரம், பவழம், சொர்ணம் என்று கணிக்க முடியாத மதிப்பில் குவிந்து இருக்கும் பொக்கிஷங்களை மதிப்பீடு செய்யும் பணியில் களம் இறங்கி இருப்பது... இஸ்ரோ.  

ஆபரேஷன் பத்மநாபா!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தட்டுத் தட்டாக தங்கக் காசுகள், வைரக் கிரீ டங்கள், 12, 18 அடி நீள தங்க ஆரங்கள், மரகதக் கற்களால் வேயப்பட்ட சிம்மாசனம் என்று பொக்கிஷங்கள் நிரம்பி இருக்கும் ஆறு அறை களுக்கு 'ஏ முதல் எஃப்’ வரை பெயரிட்டு இருக் கிறார்கள். இவற்றை மதிப்பீடு செய்ய வேலா யுதன் நாயர் தலைமையில் உயர்நிலைக் குழுவும் நீதிபதி கிருஷ்ணன் தலைமையில் கண்காணிப்புக் குழுவும் அமைக்கப்பட்டன.

சர்வதேசக் கவனம் குவிந்து இருக்கும் சங்கதி என்பதால், மதிப்பீடு விஷயத்திலும் பாதுகாப்பிலும் அதீதக் கவனத்துடன் செயல்படுகிறார்கள். பொக்கிஷ மதிப்பீட்டை அறிவியல்ரீதியாகப் பாதுகாப்பாக மேற்கொள்ள இஸ்ரோவின் உத வியை நாடி இருக்கிறது கண்காணிப்புக் குழு. ஒவ்வொரு நகையின் மதிப்பையும் அது தொடர்பான தகவல் மற்றும் படங்களையும் சேமித்து வைப்பதற்காக, பிரத்யேக வசதிகளுடன் கூடிய இரண்டு கணினிகளைக் கோயில் நிர்வாகத்திடம் இஸ்ரோ வழங்கி இருக்கிறது. இந்தக் கணினிகளை உயிர்ப்பித்து ஹோம்பேஜுக்குச் செல்வதற்கே, பல கட்டச் சோதனைகளைத் தாண்ட வேண்டும். மிகவும் சிக்கலான பாஸ்வேர்டுகளை கீபோர்டில் உள்ளீடு செய்வது மட்டும் அல்லாமல், ஒலி வடிவிலும் பிரத்யேக வாசகத்தைப் பதிவுசெய்ய வேண்டி இருக்கும். ('மிஷன் இம்பாசிபிள்’, 'சிவாஜி’ படங்கள் நினைவுக்கு வருகின்றனவா?) இந்தக் குரல் பதிவு அதிகாரம் குழுவின் மூத்த அதிகாரிகள் சிலருக்கு மட்டுமே உண்டு. சம்பந்தப்பட்ட நபரே குறிப்பிட்ட எண்ணிக்கையிலான முயற்சிகளுக்கு மேல் தவறாகக் குரலைப் பதிவுசெய்தால், அவருடைய பிரத்யேக பாஸ்வேர்டு செயல் இழந்துவிடுமாம். எந்த வகை வைரஸாலும் பாதிப்புக்கு உள்ளா காதபடி, செயற்கைக்கோள் கணினிகளில் உப யோகிக்கப்படும் ஆன்ட்டி வைரஸ் சாஃப்ட் வேர்கள் மூலம் இந்தக் கணினிகளின் தகவல்கள் பாதுகாக்கப்படுகின்றன. நகை மதிப்பீடு தொடர்பான தகவல் பரிமாற்றங்களுக்கு என இரண்டு பிரத்யேக சேட்டிலைட் போன்களை அளித்து உள்ளது இஸ்ரோ. இந்த போன்களின் உரையாடல்களை எவராலும் குறுக்கிடவோ, பின் தொடரவோ முடியாதபடி ரகசிய அலைவரிசை ஒதுக்கப்பட்டு இருக்கிறது. வைரம், பவழம் போன்ற கற்களை மதிப்பீடு செய்ய ஜெர்மனியில் இருந்து விசேஷ மதிப்பீட்டுச் சாதனம் வரவழைக்கப்பட்டு இருக்கிறது. இந்த மதிப்பீட்டு நடைமுறைகள் அனைத்தும் துல்லி யமாக வீடியோவில் பதிவுசெய்யப்பட்டு சர் வரில் பதிவேற்றப்படுகின்றன. சில குறிப்பிட்ட ரக நகைகளை '3டி’ வடிவில் படம் எடுத்துப் பதிகிறார்கள்.

ஆபரேஷன் பத்மநாபா!

இது கண்காணிப்புக் குழுவினரின் அறிவியல் முன்னேற்பாடுகள். கோயில் நிர்வாகக் குழு வினர் தங்கள் பங்குக்குச் சில கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள். பொக்கிஷ மதிப்பீடு செய்யும் அத்தனை பேரும் ஆசாரமாக இருக்க வேண்டும் என்பது கடுமையான வாய்மொழி உத்தரவு. அனைவரின் ஜாதகங்களும் அலசலுக்கு உட் படுத்தப்பட்டு, நல்ல சகுனங்கள் உணர்த்தும் நபர்களை மட்டுமே மதிப்பீட்டுப் பணியில் ஈடுபடுத்துகிறார்கள்.  

நம்ப முடியாத விதங்களில் எல்லாம் கோயிலைச் சுற்றிப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள் போலீஸார். தோள் துண்டில் ஸ்டென் கன்னை மறைத்தபடி கோயிலைச் சுற்றி வலம்வருகிறார்கள். மதிப்பிடும் பணியில் ஈடுபட்டு இருக்கும் நபர்களை 'ஒன் டு ஒன்’ பாணியில் கண்காணிக்கிறார்கள். அவர்கள் எங்கு செல்கிறார்கள், என்ன செய்கிறார்கள், யாரிடம் என்னவெல்லாம் பேசுகிறார்கள் என்று கண் காணிப்பு வளையத்தில் வைத்திருக்கிறார்களாம். கோயிலுக்கு மிக அருகில் அமைந்திருக்கும் கடை கள் சிலவற்றில் பாதுகாப்புப் படையினர் பணியாளர்களாகவே சேர்ந்துள்ளார்களாம்.    

ஆபரேஷன் பத்மநாபா!

உள்ளே ஒரு நாட்டையே சுபிட்சமாக்கும் அள வுக்குப் பொக்கிஷங்கள் நிறைந்து இருக்கின்றன. கோயிலுக்கு வெளியே நின்றபடி 'ஏட்டா... சாயா குடிக்கணும். ரண்டு ரூபா கொடு’ என்று இன்ன மும் சிலர் பிச்சை எடுத்துக்கொண்டு இருக் கிறார்கள்.  

எல்லாம் அவன் செயல்!
 

ஆபரேஷன் பத்மநாபா!

- எஸ்.ஷக்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism