Published:Updated:

மாணவர்கள் குறை தீர்க்கும் கலெக்டர்!

மாவட்ட ஆட்சியர்கள் நடத்தும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், முன்னாள் ராணுவத்தினர் குறை தீர்க்கும் கூட்டம் போன்றவற்றைக் கேள்விப்பட்டு இருப்போம். இந்த வரிசையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதியதாக உருவாகி இருக்கிறது மாணவர் குறை தீர்க்கும் கூட்டம்.

மாணவர்கள் குறை தீர்க்கும் கலெக்டர்!

சமீபத்தில் கிருஷ்ணகிரியின் அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் சுகாதார விழிப்பு உணர்வை வலியுறுத்தும் வகையில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரன் வெளியிட்ட அறிவிப்பு தான்  மாணவர் குறை தீர்க்கும் கூட்டம்.

##~##

ஆட்சியர் மகேஸ்வரன், ''மாநில அரசு எவ் வளவு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் குறைவாகவே இருக்கிறது. 100 சதவிகித தேர்ச்சி விகிதம் என்பது மாணக்கர் கையில் மட்டும் அல்ல, ஆசிரியர்களின் கையிலும் இருக்கிறது. அதனால், இனி மாணவர்கள் குறை தீர்க்கும் கூட்டம் என் தலைமையில் நடத்தப்படும். கூட்டத்தில் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு பள்ளியில் இருக்கும் குறைபாடுகளையும் ஆசிரியர் பாடம் எடுப்பது தொடர்பான நிறை, குறைகளையும் என்னிடம் தெரிவிக்கலாம். இதன் படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.'' என்றார்.

சபாஷ் நல்ல முயற்சி!

- எஸ்.எம்.காவியபாரதி