Published:Updated:

”என்னை பட்டினி போடாத எடப்பாடி மண்ணு!”

”என்னை பட்டினி போடாத எடப்பாடி மண்ணு!”

”என்னை பட்டினி போடாத எடப்பாடி மண்ணு!”

”என்னை பட்டினி போடாத எடப்பாடி மண்ணு!”

Published:Updated:
”என்னை பட்டினி போடாத எடப்பாடி மண்ணு!”

லங்கையில் உள்ள  மன்னார்  பகுதியில் பிறந்தவர் நடிகர் 'போண்டா’ மணி. அங்கு இருந்து தமிழகத்துக்கு வந்த போது இவருடைய அம்மா, அக்கா, இரண்டு அண்ணன்கள், அக்கா குழந்தைகள் என எட்டு பேரைச் சுட்டுக் கொன்றது இலங்கைக் கடற்படை. தன்னுடைய சோகங்களைப் புதைத்துவிட்டு நம்மைச் சிரிக்க வைத்துக் கொண்டு இருப்பவர். 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தன்னை வளர்த்த சேலம் மாவட்டம், எடப்பாடி பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்.

”என்னை பட்டினி போடாத எடப்பாடி மண்ணு!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

''எங்கெங்கோ அலைஞ்சு திரிஞ்சு உயிர் தப்பிச்சு, குண்டு பட்ட  காயங்களோட 90-ம் வருஷம் நான் வந்து சேர்ந்த இடம் எடப்பாடி முகாம். படுகாயத்தோட வந்த என்னை வீரப் பன் என்கிற அண்ணன்தான் ஆஸ்பத்திரியில சேர்த்து உசிரைக் காப்பாத்தினார். அப்புறம் டீக் கடையில வேலை பார்த்தேன். எடப்பாடி மக்கள் என்கிட்ட சொந்தக்காரங்க மாதிரி பழகு வாங்க.  எப்பவுமே பிரிச்சுப் பார்த்ததே இல்லை. உதாரணத்துக்கு என் குழந்தைகள் படிக்க வசதி இல்லாம இருந்தாங்க. சம்பத் அண்ணன், மகா லிங்கம் அண்ணன் உட்பட ஊர்ப் பெரிய மனு ஷங்க சேர்ந்து உள்ளூர் அரசுப் பள்ளியில எங்க முகாம் குழந்தைகளைச் சேர்த்து படிப்புக்கு ஏற்பாடு செஞ்சாங்க.

இன்னொரு விஷயம் தெரியுமா? சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து எடப்பாடிக்குப் போக நிறைய டவுன் பஸ்கள் வரும். நாங்கசேலத் துக்குப் போகும்போது பஸ் நடத்துனர்கள் யாருமே எங்ககிட்ட காசு வாங்க மாட்டாங்க. இந்தப் பகுதியில மில்கள் அதிகம். அப்பப்ப முகாம் பக்கம் எட்டிப் பார்க்கிற மில் முதலாளிங்க அரிசி மூட்டை, பருப்பு மூட்டைனு கொடுத்துட்டுப் போவாங்க. மனசு விட்டு சொல்றேங்க. இலங்கையில வயித்துக்குச் சாப்பாடு இல்லாம பலநேரம் கொலைப் பட்டினி கிடந்து இருக்கேன்.  ஆனா, இங்க வந்தபின்னாடி நானும் சரி,  என்னை சேர்ந்த மக்களும் சரி, ஒருவேளைகூடப்  பட்டினி கிடந்தது கிடையாதுங்க.

டீக்கடை பாலு அண்ணன், முகாமில் இருந்து வெளியே கூலி வேலைக்குப் போறவங்களுக்குத் தினமும் காலையில 25 போண்டா இலவசமா கொடுப்பார். ஒருமுறை என் அண்ணன் இலங்கையில குண்டடிபட்டு ராமேஸ்வரம் கடற்கரைப் பக்கமா  ஒதுங்கி இருக்கிறதாத் தகவல் கிடைச்சுது. கையில காசு இல்லாம தவிச்சப்ப, நடுராத்திரி எடப்பாடியில் உள்ள அன்புமதி அண்ணன் செலவுக்குப் பணம் கொடுத்து, கூடவே ராமேஸ்வரம் வரைக்கும் வந்தார். நாங்க போறதுக்குள்ள அண்ணன் உசிரு போயிடுச்சு. எடப் பாடிக்குத் தகவல் கொடுத்து, ஊர்க் காரங்களை வரவழைச்சு, இறுதிச் சடங் கைச்  செஞ்சாங்க.

”என்னை பட்டினி போடாத எடப்பாடி மண்ணு!”

எடப்பாடியில முத்துமாரி அம்மன் கோயில் பங்குனி உத்திரத் திருவிழா ரொம்பவும் பிரபலம். திருவிழாவுல டான்ஸ் கச்சேரி நடத்துறது என் பொறுப்பு. கலைக் குழுவினை ஏற்பாடு செய்ற தோட, நானும் எங்கப் பசங்களும் சேர்ந்து வேஷம் கட்டிக்கிட்டு காமெடி நாடகங்கள் போடுவோம். ஒருமுறை பக்கத்துல இருக்கிற பூலாம்பட்டி காவிரி ஆத்துல பாக்யராஜ் சார் படப்பிடிப்பு நடந்துச்சு. ஓடோடிப்போய் அவரைப் பார்த்து வாய்ப்புக் கேட் டேன். ஏற்கெனவே நான் சிங்கப்பூர்ல அகதியாக இருந்தப்ப அவரோட அறிமுகம் இருந்ததால, என்னை நடிக்க வைக்கச் சம்மதிச்சார். தினமும் பேன்ட் - சர்ட் போட்டுக்கிட்டு படப்பிடிப்புக்குப் போய் வேடிக்கை பார்ப்பேன். 20 நாள் கழிச்சு பாக்யராஜ் சார், 'இங்க டிப்-டாப்பா வந்து சும்மா நிக்கக் கூடாது. லுங்கி பனி யன் போட்டுட்டு வந்து வேலை பார்க்கணும்’னு சொன்னார். உடனே லுங்கிக்கு மாறி வேலை பார்க்க ஆரம்பிச்சிட்டேன். சொன்ன மாதிரியே அடுத்த படமான 'பவுனு பவுனுதான்’ல  ஒரு பாட்டுல கல்யாண மாப்பிள்ளையா நடிக்கவெச்சார். இன்னைக்கு சினிமாவுல பிஸியா இருந்தாலும் எடப்பாடிக்கு அடிக்கடி வந்துடுவேன். ஏன்னா என் ஊர் இலங்கை இல்லை... எடப்பாடி!''

”என்னை பட்டினி போடாத எடப்பாடி மண்ணு!”
”என்னை பட்டினி போடாத எடப்பாடி மண்ணு!”

- ஆ.கோமதிநாயகம்
படங்கள்: க.தனசேகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism