Published:Updated:

இது வெளிச்ச விழா!

இது நம்ம ஊரு ஸ்பெஷல் -புதுச்சேரி

இது வெளிச்ச விழா!
##~##
சு
தந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் - இந்த மகத்தான முழக்கத்தை மனித சமூகத்துக்கு அளித்தது பிரெஞ்சுப் புரட்சி. அந்தப் புரட்சியை நினைவுகூறும் விதமாகவும் புதுவைக்கும் ஃபிரான்ஸுக்குமான நெருக்கத்தைக் கொண்டாடும் விதமாகவும் நடந்ததுதான் 'வெளிச்ச விழா'.

ஜூலை 14-ல் புதுவையின் பிரதான வீதிகளில் அத்தனைப் பிரகாசம். விளக்குகளை ஏந்தி நடந்த ஊர்வலத்தில் முன்னூறுபேர் வரை கலந்துகொண்டார்கள். முன்னாள் பிரெஞ்சு ராணுவ வீரர்கள், பிரெஞ்சுக் குடியுரிமைப் பெற்றவர்கள், சுற்றுலாப் பயணிகள் ஆகியோர் இதில் உண்டு. இந்த ஊர்வலத்தின் முக்கியத்துவம் குறித்து முன்னாள்  ராணுவ வீரரும், ஊர்வலத்தின் ஒருங்கிணைப்பாளருமான ஜோசப்பிடம் பேசினேன்.

''1789-ல் பிரெஞ்சு மன்னரின் சர்வதிகார ஆட்சியை எதிர்த்து மக்கள் புரட்சி வெடித்தது. கிளர்ச்சிக்காரர்களைச் சிறையில் அடைத்தார் மன்னர். அவர்களை மீட்க புரட்சிக்குழு கையில் தீப்பந்தத்துடன் சிறைச்சாலைக்குச் சென்று விடுவித்தது. அதன் பிறகுதான் ஃபிரான்ஸில் மக்களாட்சி மலர்ந்தது. இந்த தினத்தைத்தான் ஃபிரான்ஸில் குடியரசு தினமாகக் கொண்டாடுகின்றனர். தீப்பந்தத்தை ஏந்தி சிறைக்குச் சென்ற புரட்சியாளர்களின் நினைவாகத்தான் நாங்களும் இன்று தீப ஒளியை ஏந்தி ஊர்வலம் செல்கிறோம். 1975-க்குப் பிறகு இந்த நாள், பல ஆண்டுகளாகப் புதுவையில் கொண்டாடப்படவில்லை. கடந்த முன்று ஆண்டுகளாகத்தான் நாங்கள் பிரெஞ்சுக் குடியரசு தினத்தைக் கொண்டாடுகிறோம்'' என்கிறார்!

- ஆ.நந்தகுமார்

இது வெளிச்ச விழா!