Published:Updated:

ஒரு கோடி வாய்ப்பாடு!

இது நம்ம ஊரு ஸ்பெஷல் - தலையாம்பள்ளம்

ஒரு கோடி வாய்ப்பாடு!
##~##
''நா
லு பெருக்கல் நாலு எவ்வளவு?'' என்று கேட்டால்கூட கால்குலேட்டரைத் தேடும் இந்தக் காலத்தில் ஒரு கோடி வாய்ப்பாடுகள் வரை மனப்பாடமாகச் சொல்லி அசத்துகிறார், திருவண்ணாமலை மாவட்டம், தலையாம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி.

'' என்னோட அப்பா, கணக்கு வாத்தியார்.  எனக்கு ஆரம்பத்துல  கணக்கு சரியா வரலை. ஒரு நாள் என்னோட அப்பா, பெருக்கல் வாய்ப்பாட்டில் 16 வாய்ப்பாடுகள் வரை மனப்பாடமாகச் சொன்னார். அதுக்குப்பிறகுதான் எனக்கு வாய்ப்பாடுகள் மேல்  ஈர்ப்பு வந்தது.

ஒரு கோடி வாய்ப்பாடு!

தனியாக இருக்கும்போதெல்லாம், என்னோட மனசுக்குள்ளேயே வாய்ப்பாடுகளின் மடங்குகளைக் கூட்டிப் பழகிட்டேன். 12-ம் வகுப்புல ஃபெயில் ஆனதால... திருப்பூருக்கு வேலைக்குப் போய்ட்டேன். வேலை பார்க்கும்போது, எதுவும் கணக்குக் கேட்டா உடனே பெருக்கிச் சொல்லிடுவேன். அப்ப எல்லோரும் பாராட்டினாங்க. அதுக்குப் பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமா வாய்ப்பாடுகளைப் பெருக்கிப் பழகினதுல இன்னைக்கு ஒரு கோடி வாய்ப்பாடுகள் வரைச் சொல்ற அளவுக்கு வந்து இருக்கிறேன்.

2008-ல அப்துல்கலாம் முன்னாடி வாய்ப்பாடு சொன்னப்போ அவர் பாராட்டினது மறக்கவே முடியாதது. இந்தச் சாதனையை கின்னஸ் சாதனையா மாத்துறதுக்கு முயற்சி செஞ்சுக்கிட்டு இருக்கேன். முடியும்னு நம்புறேன்'' என்கிறார்!

- கட்டுரை, படம்: காசி.வேம்பையன்.