Published:Updated:

கம்மங்காடுகளும்... கல் வீடுகளும்!

கம்மங்காடுகளும்... கல் வீடுகளும்!

கம்மங்காடுகளும்... கல் வீடுகளும்!

கம்மங்காடுகளும்... கல் வீடுகளும்!

Published:Updated:
கம்மங்காடுகளும்... கல் வீடுகளும்!
கம்மங்காடுகளும்... கல் வீடுகளும்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரும்பு விவசாயிகள் சங்கத்தின் விழுப்புரம் மாவட்டச் செயலாளர் ஸ்டாலின் மணி, தன்னுடைய ஊரான வடதொரசலூர் பற்றிய நினைவுகளை இங்கே பகிர்ந்து கொள்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''தாயின் பெருமையைப் பேசுவதற்கு நிகரானதுதான் பிறந்த ஊரைப் பற்றிப் பேசுவதும். கள்ளக்குறிச்சி தாலுகாவில் உள்ள  கிராமங்களில் ஒன்றான வடதொரசலூர்தான் என் ஊர். ஊருக்கு வடக்கே பதினைந்தாவது கிலோ மீட்டரில் மணிமுத்தானை அணையையும் தெற்கே முப்பது கிலோ மீட்டரில் கோமுகி அணையையும் கொண்டதுதான் எங்கள் கிராமம். பெரும்பாலும் குடிசை வீடுகள் நிரம்பியது. ஆனால், இப்போது கல் வீடுகள் மட்டும் அல்லாது அரசாங்கத்தின் தொகுப்பு வீடுகளாலும் உருமாறி இருக்கிறது வடதொரசலூர்.

##~##
மணிலாப் பயிறுக்குப் பெயர் போனது எங்கள் ஊர். கிட்டத்தட்ட எங்கள் கிராமத்தின் முக்கிய விவசாயமே மணிலா, கம்பு, கேழ்வரகுப் பயிரிடுவதுதான். பக்கத்து கிராமத்து மக்கள் வந்து இரண்டு நாட்கள் இங்கேயேத் தங்கி மணிலாவை அறுவடை செய்து அதற்குக் கூலியாக மணிலாவையே வாங்கிச் செல்வது வழக்கம். அப்பாவின் பணி காரணமாக ஆறாம் வகுப்பு வரை நாகலூரில் என் பள்ளிக்காலம் சென்றது. விடு முறை நாட்களில் ஊருக்கு  வந்து போகும்போது ஒரு மாற்றத்தை என்னால் காண முடிந்தது. மணிலா, கம்புக்குப் பதில் கரும்பு அதிகமாகப் பயிரிடப்பட்டு இருந்தது. காரணம், எங்கள் ஊருக்கு அருகில் மூன்று சர்க்கரை ஆலைகள் அமைந்துவிட்ட காரணத்தினால் அனைவருமே கரும்புக்கு மாறிவிட்டார்கள். நாங்கள் ஓடி ஆடிய அந்தப் பிரமாண்டமான கம்பங்காடுகளை இன்று எங்கு தேடியும் காண முடியவில்லை. அதேபோல விடுமுறை நாட்களில் நண்பர்களோடு சென்று பனை மரத்தில் ஏறி நுங்குகளைப் பறித்து விரல்களாலேயே எடுத்து உறிஞ்சிச் சாப்பிட்டும் பனம்பழங்களைச் சுட்டுச் சாப்பிட்டும் மகிழ்ந்த பனைமரங்களையும் இன்று பார்ப்பது அரிதாகிவிட்டது. ஒன்றுபட்ட தென்னாற்காடு விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய விவசாயமாக இருந்த மணிலா, கம்பு, பனை என யாவும் தற்போது காணாமல் போய்விட்டன.
கம்மங்காடுகளும்... கல் வீடுகளும்!
கம்மங்காடுகளும்... கல் வீடுகளும்!

அப்போது எல்லாம் எங்கள் ஊருக்குப் பேருந்து வசதிக் கிடையாது. அருகில் இருக்கும் பெரிய ஊரான தியாகதுருகத்துக்குப் போக வேண்டுமானால் நடந்தேதான் செல்ல வேண்டும். இரண்டு பக்கமும் அடர்த்தியான கம்பங்காடுகள். போதாதற்கு மின்சாரமும் இருக்காது என்பதால் இரவு நேரத்தில் அந்த வழியில் நடந்து வர முடியாது. சைக்கிள் வைத்திருப்பவர்கள் மட்டுமே வருவார்கள். அப்போது மிகவும் வசதியானவர்கள் மட்டுமே சைக்கிள் வைத்து இருப்பார்கள். பாண்டிச்சேரிக்கு வந்து சைக்கிள் வாங்குவதற்கு

கம்மங்காடுகளும்... கல் வீடுகளும்!

2,500 ஆகும் என்பதால் மிகக் குறைவான சைக்கிள்களே எங்கள் ஊரில் இருக்கும். ஆனால், இப்போது கணக்கில் அடங்க முடியாத அளவுக்கு இரு சக்கர வாகனங்கள், ஏன் கார்களே கூட எங்கள் ஊரில் இருக்கின்றன.

அப்போது மின் விளக்குகள் இல்லாமல், வெறும் கம்பங்காடுகளாக இருந்த தியாகதுருகம் சாலை  இப்போது விவசாயத்தை வீழ்த்திவிட்டு வீடுகளாக மாறி, மின் விளக்குகளால் ஒளிர்கின்றது. இப்போது எங்கள் ஊரில் பேருந்து, மின்சாரம், கல்வீடுகள் அனைத்தும் இருக்கின்றன. ஆனால், மண் வாசனையோடு சேர்ந்துவரும் மணிலா வாசனையையும், பனம்பழ வாசனை யையும், சோலை வனங்களாகக் காட்சி அளித்த கம்மங்காடுகளையும்தான் தேடிக் கொண்டு இருக்கிறோம்!''

- ஜெ.முருகன்
படங்கள்: எஸ்.தேவராஜன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism