

புதுவையில் இருந்து இருபதாவது கிலோமீட்டரில் தமிழகப் பகுதியான வானூர் தொகுதியில் இருக்கிறது கழுப்பெரும்பாக்கம் கிராமம். இங்கு ஊரின் மத்தியில் அமைந்து உள்ள பெரிய அரச மரத்துக்குப் பெயர் 'வெளவால் மரம்’. காரணம், இந்த ஒரே மரத்தில் நானூறு முதல் ஐநூறு வெளவால்கள் இருக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
''எனக்கு இப்போ எழுபது வயசு ஆகுது. நான் சின்னப் பையனா இருந்தப்பவே இந்த வெளவால்களைப் பார்த்திருக்கிறேன். என் அப்பா காலம், தாத்தா காலம்னு காலங்காலமா இருநூறு வருஷங்களுக்கு மேல இங்க வெளவால்கள் இருக்கு.
ஆனால், சில வருஷங்களுக்கு முன்னால வரைக்கும் இந்த வெளவால்கள் அக்ரஹாரத் தெருவுக்குப் பக்கத்தில இருந்த புளியமரத்திலதான் இருந்துச்சு.

பலத்த மழை பேஞ்சு அந்த மரம் சாய்ஞ்சுட்டதால இந்த மரத்துக்கு வந்துடுச்சுங்க. தீபாவளிக்குக்கூட இந்த மரம் இருக்கும் பகுதியில பட்டாசு வெடிக்க மாட்டோம். ஒருமுறை ஊரில் கடுமையான தண்ணீர்ப் பஞ்சம். ஏரியில தண்ணி வத்திப்போச்சு. அப்போ இந்த ஊர் மக்கள்தான் பாத்திரங்கள்ல தண்ணீர் புடிச்சி வெச்சி வெளவால்களைக் காப்பாத்துனாங்க'' என்கிறார் ஊர்ப் பெரியவர் பாலகிருஷ்ணன்.
''நாங்க இதைக் கடவுளோட பரிசாகத்தான் பார்க்கிறோம். எல்லா ஊர் லேயும் சேவல் கூவிப் பொழுது விடியும். ஆனா எங்க ஊர்ல வெளவால் கள் சத்தத்திலதான் பொழுது விடியும்'' என்கிறார்!
- ஜெ.முருகன்