
##~## |

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
''எங்க சதுரங்கக் கழகம் ஆரம்பிச்சு 15 வருஷமா செஸ் விளையாட்டைச் சொல்லிக்கொடுக்கிறோம். தொடர்ச்சியாக ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மாவட்ட அளவில் செஸ் விளையாட்டுப் போட்டிகளை நடத்திக்கிட்டுவர்றோம். எங்க கழகத்துக்குன்னு தனியாக இடம் எதுவும் கிடையாது. அதனால, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி வளாகத்தை

செஸ் விளையாட்டு கத்துக்கொடுக்கிறதுக்கும் போட்டிகள் நடத்துறதுக்கும் பயன்படுத்திக்கிறோம். ஒவ்வொரு வாரமும், 20 முதல் 25 பேர் செஸ் விளையாடவர்றாங்க.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடக்கிற செஸ் போட்டிகளில் கலந்துக்கக் கட்டணம் 30 ரூபாய். அதை வசூல் செய்தே முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசுன்னு கொடுக்கிறோம். அடுத்தகட்டமா பள்ளி மாணவர்களுக்கு இலவசமா செஸ் கத்துக்கொடுக்கப் போறோம்'' என்கிறார் சங்கத்தின் தலைவர் ரமணன் உற்சாகமாக!
-கட்டுரை, படங்கள்: காசி.வேம்பையன்