எண்ணங்கள் இனியவை

பெங்களூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறார் ஐயப்பன் கிருஷ்ணன். இவர் தன்னுடைய www.kaladi.blogspot.in என்ற வலைப்பக்கத்தில் கதைகளும் ஆன்மிகம் தொடர்பான பதிவுகளும் எழுதிவருகிறார். அவருடைய வலைப்பூவில் இருந்து...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கடவுளுக்காகக் காத்திருக்கவில்லை!

ஒரு சலவைத் தொழிலாளி ஆற்றங்கரையில் துணி காயவைத்துக்கொண்டு இருந்தார். அந்தப் பக்கமாகச் சென்ற ஒரு ரிஷி தெரியாமல் துணியை மிதித்து விட்டார். சலவைத் தொழிலாளிக்கு வந்ததே கோபம். ஆத்திரத்தில் திட்டியபடி கையில் கம்பினை எடுத்துக்கொண்டு துரத்தினார். அந்த ரிஷியோ ''அய்யோ கேசவா, மாதவா, நாராயணா'' என்று அலறினார். மேலே இருந்தபடி இதெல்லாம் பார்த்த நாராயணன் அவசர அவசரமாக கீழே வந்தவர் சற்று நேரத்தில் திரும்ப வைகுந்தம் சென்று விட்டாராம். அதைப் பார்த்த லட்சுமி ''அவ்ளோ அவசரமா போனீங்க. அதே வேகத்துல திரும்ப வந்துட்டீங்களே''னு கேட்டாராம். அதுக்கு நாராயணன் சொன்னாராம், ' என்னை நம்பி ஒரு பக்தன் காப்பாத்துனு கூப்பிட்டான். நானும் போனேன்.''
'ஓ அவ்ளோ சீக்கிரம் காப்பாத்திட்டு வந்துட்டீங்களா?... யூ ஆர் தி க்ரேட்''
'அட நீ வேற... அவன் அதுக்குள்ள என்னை நம்பாம கல்லெடுத்து சண்டை போடப் போயிட்டான். இனிமே நமக்கென்ன வேலைனு திரும்பி வந்துட்டேன்' அப்படின்னாராம்.
ஜென் கதை!

##~## |
'படுக்கை கரடுமுரடு'' அவ்வளவுதான். மீண்டும் பாடசாலைக்குத் திரும்ப அனுப்பப்பட்டான். அடுத்து ஆறு மாதம் கழித்து மீண்டும் பேச வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. சீடன் சொன்னான். 'சாப்பாடு பிடிக்கலை' சொல்லி முடித்ததும் மீண்டும் பாடசாலைக்குத் திரும்பச் சென்றான். அடுத்த ஆறு மாதம் முடிந்தது. குருவிடம் வேக வேகமாகச் சென்றான். இந்தத் தடவை அவன் பேச வேண்டிய இரண்டு வார்த்தைகளை வேகமாக உதிர்த்தான். 'நான் போகிறேன்''.
இப்படியாக கற்கவேண்டியதை விடுத்து மாதம் முழுதும் என்ன பேசவேண்டும் என்று யோசித்துக்கொண்டு இருந்த மாணவன் எதைக் கற்க முடியும்? குரு 'போய்வா தம்பி. நீ இங்கு இருந்த காலம் முழுதும் குறை சொல்வதை மட்டுமே உன் குறிக்கோளாகக்கொண்டு இருந்தாய். உன்னால் இங்கே மேலும் பயில்வது என்பது இயலாது'' என்றார்!
நாயும் கழுதையும்!

ஒரு கழுதையையும் ஒரு நாயையும் பற்றிய கதை இது.
'உள்ள யாரோ போறாங்க. நீ குரைச்சு நம்ம முதலாளியை எழுப்பு'' என்றது கழுதை.
' அது பழக்கப்பட்ட வாசனைதான். நீ ஒண்ணும் கவலைப்படவேண்டாம். எனக்குத் தெரியும். எப்ப குரைக்கணும்னு'' இது நாய்.
' அவன் கையிலப் பாரு. எவ்ளோ பெரிய கம்பி வெச்சிருக்கான். நம்ம வீட்டை உடைச்சு உள்ள என்னமோ திருடப் போறான்னு நினைக்கிறேன்''
கழுதை இடைவிடாது பொருமியது. நாய் அது பற்றிக் கொஞ்சமும் கவலை இல்லாமல் இருக்கவே கழுதைக்குக் கோபம் வந்துவிட்டது

'நீ இப்ப குரைக்கப் போறியா இல்லையா?''
' முடியவே முடியாது. உள்ளே முதலாளியோட சின்னக் குழந்தை தூங்குது. நான் குரைச்சு குழந்தை முழிச்சுட்டா ராத்திரி முழுக்க அழுதுக்கிட்டே இருக்கும். பாவம். நான் மாட்டேன்பா''
நாய் சோம்பல் முறித்தபடி வசதியாகப் படுத்துக்கொண்டது. கழுதைக்குக் கோபம் தலைக்கு ஏறியது. உள்ளே நுழைந்த மனிதர் கதவுப் பக்கம் போகவே தன் எஜமானரை எழுப்பக் கழுதை தன் வழக்கமான குரலில் கத்தத் தொடங்கியது. கழுதை போட்ட சத்தத்தினால் குழந்தை விழித்து அழத்தொடங்கியது
கழுதை கத்துவதைக் கேட்டு வெளியே வந்த அந்த வீட்டு எஜமானன் தன் வீட்டுக்கு வந்த அந்த மனிதரை வீட்டுக்குள் அனுப்பி விட்டு 'நேரம் கெட்ட நேரத்தில் கத்தியதற்காக’ கழுதையை நாலு சாத்து சாத்தினார். அவர் உள்ளே போனதும் நாய் சொன்னது, 'அவங்க அவங்க வேலையை அவங்க அவங்க செஞ்சாப் போதும். மத்தவங்க வேலையில தலையிட்டுக் குழப்பம் விளைவிச்சா தனக்கே கேடு விளையும்!''