'நான் ஈ’ படத்தில் வருவது போல... 'நீங்கள் அடுத்த பிறவியில் எதுவாகப் பிறக்க ஆசை?’ என்று இவர்களிடம் கேட்டபோது...
##~## |


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பிரவீணா, கல்லூரிப் பேராசிரியை, ஆரணி: ''நான் மறு ஜென்மம் எடுத்தால் அன்னப் பறவையாகப் பிறக்க விரும்புறேன். அது எப்படி பாலையும் தண்ணீரையும் பிரித்து உண்ணுமோ அதேமாதிரி வாழ்க்கையில் உள்ள நல்லது கெட்டதைப் பிரித்து நல்லதை மட்டும் எடுத்துக்கிட்டு நல்லதுக்காகவே வாழ விரும்புறேன்!''
காசிவேல், வக்கீல் குமாஸ்தா, திருவண்ணாமலை: ''எனக்கு மறு ஜென்மம்னா நிச்சயமா என் சாய்ஸ் பசுமாடுதான். அது ரொம்ப சாது. தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாத் தூய்மையானது, புனிதமானது பசும்பால்தானே?''
திவ்யா, கல்லூரி மாணவி, திருவண்ணாமலை: ''அடுத்த ஜென்மத்தில் நான் மயிலாகப் பிறக்க ஆசைப்படுறேன். அது அவ்வளவு அழகு. மயில் நம் நாட்டின் தேசியப் பறவை. அதுமட்டும் இல்லாமல் மயில் தோகையை விரித்து ஆடுற அழகுக்கு மயங்காதவங்க யாரு இருக்கா, சொல்லுங்க!''
செல்வம், மெக்கானிக், திருவண்ணாமலை: ''நான் அடுத்த ஜென்மத்தில சிங்கமா பிறக்க ஆசைப்படறேன். இந்த ஜென்மத்தில்தான் நாட்டுக்கு ராஜா ஆக முடியலை. அடுத்த ஜென்மத்தில் அட்லீஸ்ட் காட்டுக்காவது ராஜா ஆகலாம் இல்லையா?''
- கோ.செந்தில்குமார்
படங்கள்: பா.கந்தகுமார்
