Published:Updated:

ஐ ஸ்டைலிங் !

கண்களை அழகுபடுத்தும் மேக்கப் மேஜிக்! சா.வடிவரசு, படங்கள்: ந.வசந்தகுமார்

ஐ ஸ்டைலிங் !

கண்களை அழகுபடுத்தும் மேக்கப் மேஜிக்! சா.வடிவரசு, படங்கள்: ந.வசந்தகுமார்

Published:Updated:

மாடல்கள்: ஸ்வேதா, ஐஸ்வர்யா

##~##

''முகத்தின் அழகை ஹைலைட் செய்து காட்டும் முக்கிய அம்சம், கண்கள். சிலருக்கு பெரியதாகவும், சிலருக்கு சிறியதாகவும் கண்கள் அமைந்திருக்கும். எந்த வகை கண் என்றாலும், முடிந்தவரை அழகுபடுத்திக் காட்டவே பெண்கள் விரும்புவார்கள். எல்லா வகை கண்களுக்கும், நாம் செல்லும் சூழலுக்கும் ஏற்றவாறு செய்துகொள்ளும் 'ஐ மேக்கப்’ நிறைய வகைகள் வந்துவிட்டன!'' என்று சொல்லும் சென்னை, '7 ட்ரிக்ஸ் யூனிசெக்ஸ் சலூன் - ஸ்பா’ அழகுக் கலை நிபுணர் சுதா ராஜா, அவற்றை இங்கே அறிமுகப்படுத்துகிறார்!

ஐ ஸ்டைலிங் !

அர்ஜென்ட் லுக்

''பெயரிலேயே புரிந்திருக்கும். சீக்கிரமாக, சிம்பிளாகச் செய்து கொள்ளும் ஐ மேக்கப் இது. பேஸிக் ஐ மேக்கப்பான இதை அதிகம் உபயோகிப்பது, காலை அவசரத்தில் பரபரவென கிளம்பிச் செல்லும் கல்லூரிப் பெண்கள். காஜல் பயன் படுத்தி, கண்களின் அளவுக்கு ஏற்ப தின் அல்லது திக்காக ஐ லைனர் போட்டு, கண் இமை மீது பிரவுன் கலர் ஐ ஷேடோ லேசாக அப்ளை செய்ய வேண்டும். அவ்வளவுதான்... ஐ மேக்கப் ஓவர். மேக்கப் போட்டதை முன்னிறுத்திக் காட்டாமல் பாந்தமாகக் காட்டும் இதை 'ஜென்டில் லுக் ஐ மேக்கப்' என்றும் சொல்லலாம். வீட்டிலேயே, மற்றவர்களின் உதவி இல்லாமல் இதை செய்து கொள்ளலாம். 10 நிமிடங்களே போதுமானது. பியூட்டி பார்லரில் இதற்கு 250 ரூபாய் வசூலிப்பார்கள்!

ஐ ஸ்டைலிங் !

ஸ்டைலிஷ் லுக்

இது பகலில் போடக்கூடிய மேக்கப். முதலில் பேஸிக் மேக்கப் போட்டுக்கொண்டு, உடுத்தும் டிரெஸ்ஸுக்கு மேட்சான கலரில் ஐ லைனர், ஐ ஷேடோ போட வேண்டும். இதன் சிறப்பு, டிரெஸ்ஸைவிட தூக்கலாக ஐ ஷேடோ போடுவது. இந்த ஐ மேக்கப் சுடி தவிர மற்ற எல்லா வகை ஆடைகளுக்கும் பொருந்தும். தேவைப்பட்டால், செயற்கை ஐ லேஷஸ் பயன்படுத்தி இன்னும் ஹைலைட் செய்யலாம். இந்த மேக்கப் 30 நிமிடங்களுக்குள் முடியும். பியூட்டி பார்லரில் இதற்காகும் செலவு... 350 ரூபாய்!

ஐ ஸ்டைலிங் !

ஈவினிங் லுக்

மாலை நேர நிகழ்ச்சி களுக்குச் செல்லும்போது, இந்த ஐ மேக்கப் அழகு கூட்டும். ஐ லைனர் திக்காகவும், டார்க் கலரில் ஐ ஷேடோவும் அப்ளை செய்து, கண்களின் ஓரம் இருபுறமும் முத்துக்கள் ஒட்டி, அதுக்கு ஏற்றாற்போல் பொட்டும் வைத்தால்... கலக்கல்தான். கிராண்ட் லுக் தரும், பார்ட்டிகளுக்கான இந்த மேக்கப், ரெகுலர் பயன்பாட்டுக்கு சூட் ஆகாது. இந்த ஐ ஸ்டைலுக்கு 40 நிமிடங்கள் ஆகும். பார்லரில் போட்டால்தான் பெர்ஃபெக்ஷன் கிடைக்கும். அதற்கு ஆகும் செலவு... 1,000 ரூபாய் !

ஐ ஸ்டைலிங் !

ஸ்டேஜ் லுக்

மேடை விழாக் களுக்கான பிரத்யேக ஐ மேக்கப் இது. கல்ச்சுரல்ஸ், டான்ஸ் புரொகிராம்ஸ், ஆர்கெஸ்ட்ரா உள்ளிட்ட வற்றுக்கு இதை டிக் செய்யலாம். குறிப்பாக, நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் இந்த ஐ ஸ்டைல் பயன்படுத்தும்போது, கடைசி வரிசை வரை ரீச் ஆகும். 'கதகளி’யில் இருந்து வந்த இந்த ஸ்டைலில், அதிகளவில் பச்சை கலந்த கோல்ட் கலர் ஐ ஷேடோ பயன்படுத்தப்படுகிறது. மாடலிங் துறையில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்த ஐ மேக்கப் செய்துகொள்ள, 45 நிமிடங்கள் ஆகும். பார்லர் செலவு... 1,000 ரூபாய்!

ஐ ஸ்டைலிங் !

கிரியேட்டிவ் லுக்

ஃபேஷன் ஷோக்களில் நடுவர்களை அசத்தி பரிசு வாங்க, இந்த ஐ ஸ்டைல் கை கொடுக்கும். ஐ லைனர், காஜல் அப்ளை செய்து, கண்கள் ஓரமாக கூர்மையாக வரைந்து, உடுத்தும் ஆடைகளில் உள்ள நிறங்களின் ஷேட்களில் ஐ ஷேடோ அப்ளை செய்ய வேண்டும். பிங்க், ப்ளூ மற்றும் கோல்டன் கலர் ஐ ஷேடோக்கள் இதில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும். சுமார் ஒரு மணி நேரம் எடுத்துக் கொள்ளும் இந்த ஐ மேக்கப்புக்கு ஆகும் செலவு... 1,000 ரூபாய்!  

ஐ ஸ்டைலிங் !

சிண்ட்ரெல்லா ஷேடோ            

கோல்டன் கலர் டிரெஸ், ஏஞ்சல் டிரெஸ் போன்ற ஆடைகளுக்கான பிரத்யேக ஐ ஸ்டைல் இது. மயிலிறகு போன்று வரையப்பட்டிருக்கும் அட்ராக்டிவ்வான ஐ ஸ்டைலுடன், முகத்தின் தாடை பகுதியில் கோல்டன் ஸ்டிக்கரும் ஒட்டினால் ('சிவாஜி’ படத்தில் ஸ்ரேயா ஒட்டியிருப்பது போல), சென்டர் ஆஃப் அட்ராக்ஷன்தான். இதற்கு பார்லரில் 1,000 ரூபாய் செலவாகும். கோல்டர் ஸ்டிக்கர் சார்ஜ் தனி!

ஐ ஸ்டைலிங் !
ஐ ஸ்டைலிங் !

இந்த எல்லா வகை ஐ மேக்கப்களும் எட்டு மணி நேரம் வரை தங்கும். ஆனால், தண்ணீர் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சிறிய கண்கள் உள்ளவர்கள் திக்காகவும், பெரிய கண்கள் உள்ளவர்கள் கொஞ்சம் தின்னாகவும் ஐ மேக்கப் செய்துகொள்ளலாம்!'' என்ற சுதா,

''கண்களின் அழகைக் கெடுப்பது, கருவளையம். நந்தியாவட்டை பூவை கண்ணுக்கு மேல் வைத்து, அதன் மீது வெள்ளை நிற காட்டன் துணியை 10 நிமிடங்கள் வைத்து எடுத்தால், கருவளையம் குறையும். அல்லது விளக்கெண்ணையை ஒரு துளி கண் இமை மேல் விட்டு, கண்களை சிமிட்டினால் எண்ணெய் கண்களுக்குள் இறங்கி, கண்கள் சுத்தமாவதுடன் கருவளையத்தையும் தவிர்க்கலாம்!'' என்று டிப்ஸுடன் முடித்தார் சுதா ராஜா!