Published:Updated:

உலக கோப்பை கபடி: மகளிர் பிரிவில் இந்தியா சாம்பியன்!

Vikatan Correspondent
உலக கோப்பை கபடி: மகளிர் பிரிவில் இந்தியா சாம்பியன்!
உலக கோப்பை கபடி: மகளிர் பிரிவில் இந்தியா சாம்பியன்!
உலக கோப்பை கபடி: மகளிர் பிரிவில் இந்தியா சாம்பியன்!

ஜலந்தர்: பஞ்சாப்பில் நடந்த உலக கோப்பை கபடி போட்டியின் மகளிர் பிரிவில், நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

பஞ்சாப்பில் பல்வேறு இடங்களில் நடந்து வரும் 4வது உலக கோப்பை கபடி போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. மகளிர் பிரிவில் ஜலந்தரில் நேற்றிரவு நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா–நியூசிலாந்து அணிகள் மோதின.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்தியா 49–21 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. உலக பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

##~~##
நியூசிலாந்துக்கு ரூ.51 லட்சம் கிடைத்தது. 3வது இடத்திற்கான ஆட்டத்தில் டென்மார்க் 34–33 என்ற புள்ளி கணக்கில் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்தது.
ஆண்கள் பிரிவில் நடந்த 3வது இடத்திற்கான மோதலில் அமெரிக்கா 62–27 என்ற புள்ளி கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது. ஆண்களில் யாருக்கு பட்டம் என்பதை நிர்ணயிக்கும் இந்தியா–பாகிஸ்தான் இடையிலான இறுதி ஆட்டம் நாளை நடக்கிறது.