Published:Updated:

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

அண்டன் பிரகாஷ்

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

அண்டன் பிரகாஷ்

Published:Updated:
##~##

நுணலும் தன் வாயால் கெடும் என்பதில் வாய்க்குப் பதிலாக ட்விட்டர் என்று எழுதிவிடலாம் என நினைக்கிறேன். இந்த வார நுணலின் பெயர்... வூலா பாப்பாகிருஸ்டோ. பாப்பாவுக்கு ஊர் கிரீஸ். பிரபலமான விளையாட்டு வீராங்கனை. லண்டன் ஒலிம்பிக்ஸில் ட்ரிபிள் ஜம்ப் பிரிவில் வெல்லக்கூடிய சாத்தியம்கொண்டவர். 14 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கும் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் இருக்கும் புகைப்படங்களும் காணொளிகளும் அவரது விளையாட்டுத் திறமையைக் காட்டுகின்றன. ஃபேஸ்புக் பக்க உரலி... https://www.facebook.com/pages/Voula-Papachristou/10150118455640601

 அதிருக்கட்டும். பாப்பாவுக்கு என்ன ஆனது?

ஒலிம்பிக்ஸில் கலந்துகொள்ளத் தயாராகிவரும் இந்த வாரத்தில் இடக்கு மடக்காக ட்வீட் செய்திருந்தார் அவர். ''கிரீஸில் ஏகப்பட்ட ஆப்பிரிக்கர்கள் இருப்பதால், நைல் நதிக் கொசுக்களுக்கு வீட்டுச் சாப்பாடு கிடைத்த மாதிரி'' மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், லேசாகக் கிண்டல்

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

செய்வதுபோலத்தான் இருக்கிறது இந்த ட்வீட். கிரீஸில் வெஸ்ட் நைல் வைரஸ் எனப்படும் வைரஸ்களைக் கொண்டிருக்கும் கொசுக்கள் இருப்பதாகச் சமீபத்தில் வெளியான செய்தியையும் கிரீஸ் நாட்டுக்கு ஆப்பிரிக்க நாட்டவர்கள் சமீப ஆண்டுகளில் குடிபெயர்ந்து இருப்பதையும் இணைத்து எழுதப்பட்ட இந்த ட்வீட், இனவெறிகொண்ட விஷமம் உள்ளதாகக் கருதப்பட,  சில மணி நேரங்களுக்குள் கிடுகிடுவெனப் பரவியது. 'இன வெறி தெறிக்கும் விதத்தில் ட்விட்டரில் எழுதியதால், ஒலிம்பிக்ஸ் குழுவில் இருந்து பாப்பாவை நீக்குகிறோம்’ என கிரீஸ் நாட்டின் ஒலிம்பிக்ஸ் கமிட்டி தெரிவித்திருக்கிறது. 'சும்மா விளையாட்டுக்குத்தானே சொன்னேன்’ என்ற ரீதியில் முதலில் சொன்னவர், பின்னர் நீண்ட மன்னிப்பு வெளியிட்டாலும், கிரீஸ் ஒலிம்பிக்ஸ் கமிட்டி தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. என்ன நோக்கத்தில் அந்த ட்வீட்டை எழுதினாரோ, நமக்குத் தெரியாது. ஆனால், அவரது விளையாட்டு வாழ்க்கை இதோடு முடிந்தது என்று சொல்லலாம். ட்விட்டர் போன்ற சமூகத் தளங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்தச் சம்பவம் மற்றுமோர் எடுத்துக்காட்டு!

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

பாப்பா ட்வீட்டினால் பஞ்சராகிப்போனது ஒருபுறம் இருக்க, தகவல் தொழில்நுட்பத்தைச் சற்று டூமச்சாகவே நேசிக்கும் ஒருவர் பாரீஸில் படாதபாடு பட்டதும் சென்ற வாரம் நடந்தது. ஆசாமியின் பெயர் ஸ்டீவ் மான். நம்மூர் ஐ.ஐ.டி. போலப் பிரபலமான அமெரிக்காவின் எம்.ஐ.டி-யில் ஆராய்ச்சிப் பட்டம் பெற்ற ஸ்டீவுக்குச் சொந்த நாடு கனடா.

ஸ்மார்ட்டான ஸ்டீவ் பல ஆராய்ச்சிகளுக்கும் கண்டுபிடிப்புகளுக்கும் சொந்தக்காரர் என்றாலும், குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது ஐடேப்  எனப்படும் கண்ணாடி (www.eyetap.org/). அணிந்துகொள்ள முடிகிற தொழில்நுட்பம் (Wearable computing)

என்பதையும் தாண்டி தலையில் நிரந்தமாகப் பொருத்தப்பட்டது என்பதால், ஒரு மனித ரோபாட் (Human Cyborg) போல தொழில்நுட்பத்தையும் தன்னையும் இணைத்துக்கொண்டு இயங்கும் அர்ப்பணிப்புகொண்ட ஸ்டீவை 'அணிந்துகொள்ள முடிகிற தொழில்நுட்பத்தின் முன்னோடி’ எனச் சொல்லலாம். அவரது தலையில் அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டு இருக்கும் இந்தக் கண்ணாடியின் இடது பக்கத்தில் இருக்கும் கேமரா, ஸ்டீவ் பார்ப்பதை எல்லாம் தொடர்ந்து பதிவுசெய்தபடியே இருக்கும். பார்¬வயற்றவர்களுக்கு செயற்கைக் கண் ணாகப் பயன்படும் ஆராய்ச்சிக்குத் தேவை யான தகவல் ஸ்டீவுக்குக் கிடைப்பது இந்தக் கண்ணாடியின் மூலமாகவே.

என்ன நடந்தது?

பாரீஸுக்குச் சென்ற வாரம் சென்றபோது உணவு அருந்துவதற்காக மெக்டொனல்ஸுக்குத் தன் மனைவி, குழந்தைகளுடன் சென்றிருக்கிறார் ஸ்டீவ். இப்படி கேமரா பொருத்தப்பட்ட கண்ணாடியை இங்கே அணியக் கூடாது என்று உணவக ஊழியர்கள் சொல்ல, இது ஆராய்ச்சிக்காகப் பயன்படுத் தப்படுவது என்பதை விளக்கும் மருத்துவ அத்தாட்சிக் கடிதத்தைக் காட்டி இருக்கிறார். அதைப் பொருட்படுத்தாமல் கண்ணாடியை இழுத்து எறிய ஊழியர் கள் முயல, அது தலையில் நிரந்தரமாகப் பொருத்தப்பட்டு இருப்பதால் அது வெளியே வரவில்லை. மருத்துவச் சான்றிதழைக் கிழித்து எறிந்திருக்கிறார்கள். ஸ்டீவ் கண்ணாடியின் கேமரா இவை அனைத்தையும் பதிய, அவர் தனது வலைப்பக்கத்தில் இதை எழுத... டெக் உலகில் இருந்து மெக்டொனல்ஸுக்கு எதிரான குரல் எழுந்திருக்கிறது இந்த வாரம். 'இதைப் பற்றி விசாரித்துக்கொண்டு இருக்கிறோம்’ என்று மட்டும் சொல்லி இருக்கிறது 'மெக்டொனல்ஸ்’.

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

இந்தச் சம்பவம்பற்றி, சம்பவம் நடந்தபோதே எடுக்கப்பட்ட புகைப்படங்களுடன், ஸ்டீவ் தனது வலைப்பக்கத்தில் மிகத் தெளிவாக எழுதியிருப்பதைப் படிக்க இந்த உரலியைச் சொடுக்குங்கள் http://eyetap.blogspot.com/2012/07/physical-assault-by-mcdonalds-for.html

இந்தத் தொடரின் தலைப்பே கீகீகீ என்றிருந்தாலும், அலைபேசி, இணையம் என்றே சதா எழுதுவது ஏன் எனக் கேட்கும் டாட் காம் வாசகரின் எரிச்சலுக்கு மதிப்பு அளித்தும், மனித ரோபாட்பற்றி அலசியதாலும், உயிர்ப் பொறியியல் பிரிவில் வெளியாகியிருக்கும் முக்கிய நிகழ்வைப் பதிவுசெய்கிறேன். சிலிக்கான் மற்றும் எலியின் இதயத் தசைகளை இணைத்து செயற்கையான ஜெல்லி ஃபிஷ் ஒன்று ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மனித இதயக் கோளாறுகள்பற்றிய ஆராய்ச்சிகளுக்கு இந்த மீன் ரோபாட் ரொம்பவும் உதவும் என்கிறார்கள். மெடுசாயிட் என்று செல்லமாகப் பெயர்வைத்துஇருக்கும் மேற்படி ரோபாட் அழகாகத் தண்ணீரில் நீந்துகிறது. மெடுசாயிட்பற்றி மேலதிக விவரங்களுக்கு இங்கே செல்லவும். www.huffingtonpost.com/2012/07/23/artificial-jellyfish-medusoid-rat-heart-silicone_n_1694417.html

LOG OFF