Published:Updated:

யோகா குரு பாபா ராம்தேவின் கோரிக்கைப் பட்டியல்!

ஜூன் 4,2011

யோகா குரு பாபா ராம்தேவின் கோரிக்கைப் பட்டியல்!

ஊழல் மற்றும் கறுப்பு பணத்துக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ள யோகா குரு பாபா ராம்தேவ் முன்வைக்கும் கோரிக்கைகளில் குறிப்பிடத்தக்கவை: ##~~##

* லோக்பால் மசோதாவை வலுவாக்கி, ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும்.

* வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்பு பணம் மொத்தத்தையும் உடனடியாக மீட்பதுடன், உரிய வரிகளை வசூல் செய்ய வேண்டும்.

* மீட்கப்படும் இந்தியர்களின் கறுப்பு பணம் மொத்தத்தையும் தேசிய சொத்தாக பிரகடனம் செய்ய வேண்டும்.

* ரூ.1,000, ரூ.500 கரன்சி நோட்டுகளை ரத்து செய்து ஒழித்திட வேண்டும்.

* தேர்தல் முறையில் சீர்திருத்தம் செய்து, பிரதமரை வாக்காளர்களே நேரடியாக தேர்ந்தெடுக்க வழிவகுக்க வேண்டும்.

* குடிமக்கள் அனைவரும் தங்கள் ஆண்டு வருமான விவரத்தை சமர்ப்பிப்பதை உறுதிபடுத்த வேண்டும்.

* நாடு தழுவிய அளவில் தொழிலாளர்களின் சம்பள விகிதம் ஒரே சீராக இருக்க வேண்டும்.

* நிலம் கையக்கப்படுத்தும் சட்டத்தைத் திரும்பப் பெற்று, தொழிற்சாலைகளுக்கு விவசாயிகளிடம் இருந்து நிலம் வாங்கக் கூடாது.

* ஊழல் குற்றச்சாட்டுக்களை உடனடியாக விசாரித்து தீர்ப்பளித்திட, எல்லா மாநிலங்களிலும் சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும்.

* ஊழல்வாதிகளுக்கு உடக்குடன் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

* தாய்மொழியிலேயே தொழிற்கல்வி படிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

* பொதுச் சேவை உறுதிச் சட்டத்தை வலுப்படுத்த வேண்டும்.

* ஆங்கிலத்துக்கு பதிலாக இந்தியை முன்னிலைப்படுத்த வேண்டும்.