Published:Updated:

காம்பியரிங் வில்லன்!

காம்பியரிங் வில்லன்!

காம்பியரிங் வில்லன்!
##~##
''இ
ப்போ சினிமாவில அதிகமாக் கால் பதிக்கிறது வி.ஜே, ஆர்.ஜே-க்கள்தானே பாஸ், அதான் நானும் ஒரு அட்டென்டன்ஸைப் போட்டிருக்கேன்'' என்று சிரிக்கிறார் புதுவை ஹலோ எஃப்.எம்-மின் ஆர்.ஜே ஃப்ரான்சிஸ். 'ஜில்லுனு ஒரு காதல்’ நிகழ்ச்சியில் சிரிக்கச் சிரிக்கப் பேசும் இவர் 'ஜெகதலப் பிரதாபன்’ என்ற படத்தில் வில்லன் ஆக நடித்து உள்ளார்.

''பி.காம். முடிச்சு எஃப்.எம்-க்கு இன்டர்வியூ வந்தேன். ஆஸ்கர் தமிழன் ஏ.ஆர்.ரகுமான் பற்றிக் கேள்வி கேட்டாங்க. நானும் அவரைப் பத்தின விஷயங்களைச் சொன்னேன். என்னோட உச்சரிப்பு, வார்த்தைக் கோவை இவை எல் லாம் அவங்களுக்குப் பிடிச்சுப் போக, நானும் ஆர்.ஜே. ஆயிட்டேன். ஆரம்பத்துல மைக்கைப் பார்த்தாலே கை கால் வெலவெலக்கும். இப்போ மைக் என்னோட மூணாவது கை!

இங்க வந்துதான் சவுண்ட் இன்ஜினீயரிங் கத்துக்கிட்டேன். பாடல்கள் கேட்குறதும், பாடுறதும் ரொம்பப் பிடித்தமான விஷயங்கள். சினிமாவுல பாடவும் வாய்ப்பு கிடைச்சிருக்கு. 'தில்லானா தில்லானா’ டான்ஸ் ஷோவிலும் கலந்திருக்கேன். சீரியலில் நடிக்கவும் நிறைய வாய்ப்புகள் வருது. ஆனா, என்னோட கனவு, கவனம் எல்லாமே சினிமாதான். ரெண்டு மாசத்துக்கு முன்னாடிதான் கல்யாணம் ஆயிடுச்சு. பெரியவங்களா பார்த்து செஞ்ச மேரேஜ்தான்!'' என்று சின்ன வெட்கத்தோடு சிரிக்கிறார்.

அதனால என்ன, ஜில்லுனு காதல் பண்ணுங்க பாஸ்!

- நா.இள.அறவாழி
படம்: ஆ.நந்தகுமார்

காம்பியரிங் வில்லன்!
அடுத்த கட்டுரைக்கு