Published:Updated:

காவல் நிலையத்தில் காதல் கோட்டை!

காவல் நிலையத்தில் காதல் கோட்டை!

காவல் நிலையத்தில் காதல் கோட்டை!

காவல் நிலையத்தில் காதல் கோட்டை!

Published:Updated:
காவல் நிலையத்தில் காதல் கோட்டை!
##~##
வே
லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தைக் காதல் திருமண நிலையம் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு வாரத்துக்கு இரண்டு காதல் திருமணங்களாவது நடந்துவிடுகின்றன.

''உண்மைதாங்க, நான் இங்க ஒன்றரை வருஷமா இருக்கேன். காதல், கல்யாணப் புகார்கள்தான் இங்கே அதிகம் வருது'' என்கிறார் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி. ''நிறைய லவ் ஜோடிங்க கோயில்ல தாலியைக் கட்டிக்கிட்டு  வந்துடுவாங்க. சமயத்துல அவங்களோட பெத்தவங்களைச் சமாளிக்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடும். இதுவரைக்கும் நானே நிறையப் பெற்றோர்களைச் சமாதானப்படுத்தி அந்த ஜோடிகளோட அனுப்பி இருக்கேன். இதில் சில பேரு போன் செஞ்சு 'இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கோம் மேடம். நீங்க இல்லைனா எங்க வாழ்க்கையே கேள்விக்குறியாகி இருக்கும்’னு சொல்வாங்க. அப்ப  மனசுக்கு ரொம்ப நிம்மதியா இருக்கும்.

ஆனா, சில நேரங்கள்ல பள்ளிக்கூடப் பெண்களைப் பசங்க இழுத்துக்கிட்டு வந்துடுவாங்க. அந்தச் சமயத்துல பொண்ணைக் கூப்பிட்டு அட்வைஸ் பண்ணி வீட்டுக்கு அனுப்பிவைப்போம்'' என்கிறார்.

காவல் நிலையத்தில் காதல் கோட்டை!

எஸ்.ஐ. வரலட்சுமி ''ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஒரு ஜோடி திருப்பதியில் கல்யாணம் பண்ணிட்டு நேரா இங்க வந்துட்டாங்க. பொண்ணு தஞ்சாவூர் பக்கம். பையன் வேலூர். 'எப்படிம்மா பழக்கம்?’னு கேட்டேன். '' என் ஃப்ரெண்டுக்கு போன் செய்யும்போது ராங்க் காலா இவரோட நம்பருக்கு போயிடுச்சி. அப்ப இருந்து பழக்கம். தினமும் போனில் பேசிக்குவோம். இவரை நேரில் பார்த்தது கிடையாது. ஒருமுறை இவர் 'உங்களைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்’னு சொன்னார். அந்தச் சமயத்துல எங்க அத்தை பையனை எனக்குக் கல்யாணம் செஞ்சு வைக்கப் பார்த்தாங்க. ஆனா, எனக்கு அந்தப் பையனைப் பிடிக்கலை. உடனே இவர்கிட்டச் சொல்லி அழுதேன். என்னை வேலூருக்கு கிளம்பி வரச் சொன்னாரு. அப்போதான் நாங்க முதல்முறையா சந்திச்சோம்.  திருப்பதிக்குப் போய்க் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். இதை எங்க வீட்டுல சொல்லி நீங்கதான் எங்களைக் காப்பாத்தணும் மேடம்’னு சொன்னா. எனக்கு ஒரு பக்கம் அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது.  பொண்ணோட பெற்றோர்களுக்கு விஷயத்தைத் தெரியப்படுத்தி வரவழைச்சோம். வந்தவங்க கோபப்பட்டு சத்தம்போட ஆரம்பிச்சாங்க. அப்புறம்  ஒரு வழியா சமாதானம் ஆனவங்க அந்த வாரத்திலேயே வேலூரில் உள்ள திருமண மண்டபத்தில் வரவேற்பு வெச்சு அசத்திட்டாங்க.

காவல் நிலையத்தில் காதல் கோட்டை!

இப்படி ஒரு காதல்னா நான் பார்த்த இன்னொரு காதல் பத்திச் சொல்றேன் கேளுங்க. வேலூரில் இருக்கும் டாக்டரின் மகளைக் கூட்டிக்கிட்டு ஒரு பையன் வந்துட்டான். அந்தப் பையன் அதே டாக்டர் வீட்டில டிரைவர். பொண்ணுதான் முதலில் லவ்வைச் சொல்லி இருக்கு. இந்த விஷயம் தெரிஞ்சதும் பெண்ணைப் பெத்தவங்க சத்தம் போட்டு இருக்காங்க. ஆனா, அந்தப் பொண்ணு அவளோட காதல்ல உறுதியா இருந்தா. ஸ்டேஷன்லதான் கல்யாணம் நடந்தது. அவங்களைப் போன வாரம் பார்த்தேன். அந்தப் பொண்ணைக் காலேஜில் படிக்க வைக்கிறானாம் அந்தப் பையன். மனசுக்கு நிறைவா இருந்துச்சு.

போன வாரம் ஒரு பொண்ணு 'நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா இவரைத்தான் பண்ணிக்குவேன். அதுவும் எங்க அப்பா, அம்மா சம்மதத்தோடதான்’னு சொல்லி இங்கேயே வந்து உட்கார்ந்துட்டா. ஆனா, பெத்தவங்க 'இனிமே இவ எங்க பொண்ணு இல்லை’னு சொல்லி ஆத்திரப்பட்டாங்க. ரெண்டு பேரும் பிடிவாதமா இருக்கும்போது திடீர்னு பையன் பொண்ணோட அப்பா, அம்மா காலில் விழுந்து கதற ஆரம்பிச்சுட்டான். அப்புறம் ரொம்ப நேரம் கழிச்சுக் கல்யாணத்துக்குச் சம்மதிச்சாங்க. இதுல ஒரு விசேஷம் என்னன்னா வந்தவங்க எங்களை எதுவுமே பேச விடல. அவங்களே வந்தாங்க, சண்டை போட்டாங்க, அழுதாங்க, அப்புறம் ஒண்ணா சேர்ந்துட்டாங்க'' என்கிறார்.

இனி போலீஸ் ஸ்டேஷனில் 'காதலுக்கு ஜே’ என்றும் எழுதிவைக்கலாம்!

- கே.ஏ.சசிகுமார்,
படங்கள்:   கா.முரளி