Published:Updated:

’’விஷ்ணுவுக்குக் கட்டுப்படாத சரஸ்வதி!’’

’’விஷ்ணுவுக்குக் கட்டுப்படாத சரஸ்வதி!’’

’’விஷ்ணுவுக்குக் கட்டுப்படாத சரஸ்வதி!’’

’’விஷ்ணுவுக்குக் கட்டுப்படாத சரஸ்வதி!’’

Published:Updated:
’’விஷ்ணுவுக்குக் கட்டுப்படாத சரஸ்வதி!’’
’’விஷ்ணுவுக்குக் கட்டுப்படாத சரஸ்வதி!’’
’’விஷ்ணுவுக்குக் கட்டுப்படாத சரஸ்வதி!’’

'கர்ப்பிணியைப் போல் தோற்றம் அளிக்கும் சிறு மலை; அதன் உச்சியில் முகம்போல் காணப்படும் சாமுண்டீஸ்வரர் கோயில்; அந்த மலையடிவாரத்தில் அமைந்துள்ள உயர்நிலைப் பள்ளி; நீர் இல்லாவிட்டாலும் மணல் நிறைந்த கடற்கரை போல் காட்சி அளிக் கும் பாலாறு; அதன் கரையில் 'பள்ளிகொண்டா’ என்ற ஊர்ப் பெயர் வரக் காரணமாக இருக்கும் ஸ்ரீ ரங்கநாதர் பள்ளிகொண்டு இருக்கும் திருக் கோயில்...'என்று  தன் ஊரான 'பள்ளிகொண்டா’ பற்றிய சித்திரத்தை வரைந்து செல்கிறார் 'பெரி¢யார்’, 'பாரதி’ போன்ற படங்களின் இயக்கு நரும் எழுத்தாளருமான ஞான.ராஜசேகரன்.

'வேலூரில் இருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், 22-வது கிலோ மீட்டரில் அமைந்து இருக்கும் வளர்ச்சி அடைந்த ஒரு கிராமம்தான் எங்கள் ஊர். எங்களுக்குச் சொந்தமாக வீடும் நிலமும் இந்த ஊரில் இருந்தாலும் வாழ்நாள் முழுமையும் இங்கே வாழ்கிற வாய்ப்பு எனக்கு இல்லாமலேயே போய்விட்டது. பள்ளிப் படிப்பை நான் நிறைவுசெய்தது பள்ளிகொண்டாவில் என்றாலும் சொந்த ஊருக்கே வெளியூரில் இருந்து தினசரி¢ வந்து செல்கின்ற மாணவனாகவே நான் இருந்து வந்தேன். காரணம், என்னுடைய பெற்றோர் இருவரும் சுற்றுப்புற ஊர்களான வளத்தூர், திப்பசமுத்திரம், ஒதியத்தூர் முதலான இடங்களில் ஆசிரியர்களாகப் பணிபுரிந்ததால் எங்கள் குடும் பமும் அந்தந்த ஊர்களிலேயே வசிக்க நேர்ந்தது. பள்ளிப் படிப்பு முடிந்ததும் கல்லூரி வாழ்க்கை, அதன் பின்னர் மும்பை, கேரளா, சென்னை என்று நகரங்களிலேயே என்னுடைய வாழ்க்கை அமைந்துபோனது. எனவே, சிறு வயது முதலே என் சொந்த ஊரைப் பற்றியும் அதில் வாழ்வது பற்றியும் கனவுமயமான எண்ணமே நிலைத்துவிட்டது.

எங்கள் ஊரைப் பற்றி சொல்லத் துவங்கினால், ரெங்கநாதர் கோயிலைப் பற்றித்தான் முதலில் சொல்ல வேண்டும். சரி¢யாகப் பராமரிக்கப்படவில்லை என்றாலும் கம்பீரம் குறையாத கோயில். பிரம்மனிடம் சரஸ்வதி கோபித்துக்கொண்டு ஆறாக ஓடினாராம். அந்த ஆற்றைத் தடுத்து நிறுத்த பிரம்மன் விஷ்ணுவிடம் முறையிட, அவரோ ஸ்ரீ ரெங்க நாதராக பள்ளிகொண்டு அந்த ஆற்றை தடுத்து நிறுத்தப்பார்த்தாராம். ஆனால், ஆறாக இருந்த சரஸ்வதி ரங்கநாதரி¢ன் கால் பகுதியில் வளைந்து ஓடி விட்டாராம். அந்த இடம்தான் பள்ளிகொண்டா என்கிறது ஸ்தல புராணம்.

’’விஷ்ணுவுக்குக் கட்டுப்படாத சரஸ்வதி!’’
##~##
ஒரு சிறிய ஊரில் அதிகப் பள்ளிக்கூடங்கள் இருப்பதாலோ என்னவோ, அருகில் உள்ள கிராமங்களைக் காட்டிலும் கல்வி அறிவில் சிறந்து விளங்குகிறது. எங்கள் ஊர் அதேபோல் ஆசிரியப் பணி செய்வோர் எங்கள் ஊரி¢ல் மிக அதிகம்.

எங்கள் ஊரைப் பற்றி நினைத்தால் என்னால் மறக்க முடியாதது பெங்களூர் சாலையில் இருந்த செட்டியார் கடையைத்தான். நானும் என் நண்பன் இக்பாலும்  கையெழுத்துப் பிரதியில் இதழ் நடத்தியது இங்குதான். சினிமா, இலக்கியம், சமூக வாழ்க்கை எல்லாவற்றையும் பற்றி விவாதித்ததும் இங்கேதான். 'மோகமுள்’ திரைப்படத்தில் தங்கம்மாளை வீட்டில்வைத்துப் பூட்டுகிற கிழவன், ஒரு சிறுவனை அழைத்து பூட்டைப் பிடித்து தொங்கச் செய்து, பூட்டு சரி¢யாகப் பூட்டி இருக்கிறதா என்று பார்ப்பாரே, செட்டியாரும் கடையைப் பூட்டும்போது அப்படித்தான் செய் வார்.

எங்கள் ஊர் தந்த பெருமை மிக்கவரில் முதன்மையானவர் தளபதி பள்ளிகொண்டா கிருஷ்ணசாமி. அவர் ஒரு அப்பழுக்கு

அற்ற தலைவர். தனக்காகவோ குடும்பத்துக் காகவோ ஒன்றும் சம்பாதிக்காமல் கடைசி மூச்சுவரை தலித் மக்களின் மேம்பாட்டுக்காகத் தன் வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்த போராளி. அத்தகைய போராளியின் மண் என்பது எங்கள் ஊருக்கு இன்னும் ஒரு சிறப்பு!''

- அ.அச்சனந்தி
படங்கள்: வீ.நாகமணி, ச.வெங்கடேசன்