Published:Updated:

வலையோசை

வலையோசை

வலையோசை

வலையோசை

Published:Updated:

ஹரணி பக்கங்கள்

வலையோசை


தஞ்சாவூர் ஹரணி  என்ற பெயரில் எழுதும் அன்பழகன் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசியராகப் பணிபுரிபவர். சமூகம்குறித்தும் தமிழ் இலக்கியங்கள்குறித்தும் இவருடைய பார்வைகளை http://thanjavur-harani.blogspot.in/ என்ற வலைப்பூவில் எழுதிவருகிறார். அவருடைய வலைப்பூவில் இருந்து...

         என் அப்பாவின் கவிதைகள்!

##~##
ப்பா பணிபுரிந்தது மருத்துவத் துறையில். அப்பா இறந்த பிறகு அவரு டைய பழைய பேப்பர்களைப் பார்க்கவேண்டிய தருணத்தில் கையடக்க ஒரு நோட்டு கிடைத்தது. அதில் சில கவிதைகளைப் பார்க்கமுடிந்தது. அதில் இருந்த கவிதைகள் எல்லாம் வேடிக்கை ஆனவை. அவற்றில் ஒன்று...

தலைவலிக்கு மருந்து
தலைவலி கண்டதென்று தவிக்கின்ற மனிதர்காள்
தயவுடன் மருந்தைக் கேளீர்
மலைதனில் பெருத்தத்தக்கக் கல்லைத் தூக்கிவந்து
தலைவலி உள்ள பேர் தலையைத் தாங்கி
ஓங்கிப் போட்டால் தலைவலி தீர்ந்து
சொல்லாமலே தூங்குவர்!

திய ஆத்திசூடி

ளவையின் ஆத்திசூடியைத் தொடர்ந்து பாரதி புதிய ஆத்திசூடி எழுதினார். நாமும் எழுதிப் பார்த்தால் என்ன என்ற யோசனை வெகுநாளாகவே மனதின் இருந்தது. அதன் விளைவுதான் இது...

அன்புசார் உலகு செய்
ஆற்றலைப் பெருக்கி நில்
இயன்ற வரை உதவு
ஈடடுவதில் தருமம் நிறுத்து
உண்மை எப்போதும் பேசு
ஊரின் நியாயம் கேள்
என்றும் இறைவன் துணைகொள்
ஏற்றம் பெற உழைப்பு தேடு
ஐம்புலன் செம்மைப் பேண்
ஒவ்வொரு நொடியும் நல்சிந்தை நினை
ஓடி ஓடி உறவுகள் வளர்
ஒளவை, பாரதி வணங்கி வாழ்

எல்லோரும் அவரவர் சிந்தைக்கு ஏற்ற ஆத்திசூடி எழுதுங்கள். நல் உலகு மலரட்டும்!

தமிழும் தனுஷும்!

ரு இனத்தின், பண்பாட்டின், நாகரிகத்தின், மனிதனின் வாழ்வியலின் அடையாளம் மொழி. தமிழ்மொழியின் பண்பாடு உலகளாவியப் பேருண்மைகளுக்கு அடித்தளமானது. அதற்கான வேர் மிகமிக ஊடுருவி ஆழம்கொண்டது. தமிழ் பேசும் யாவரும் பெருமை கொள்ளத்தக்கப் பண்புகளை என்றைக்கும் அழியாமல் கன்னித் தன்மையோடு கொண்டிலங்குவது தமிழ். தொல்காப்பியனும், வள்ளுவனும், கம்பனும், பாரதியும்  தமிழின் பரப்பை ஆண்ட ஏறுகள். தமிழுக்கு என்றைக்கும் குறையா செழுமை இலக்கியங்களைத் தந்தவர்கள். இன்றைக்குத் தமிழ் மொழியை விளையாட்டு மொழிபோலப் பயன்படுத்துவது என்பது சாதாரணமாக உள்ளது.

நமக்கு சோறிடும் தாயைப் புறம் தள்ளும் யாரும் வாழ்ந்ததாக வரலாறு இல்லை. இன்றைக்கு நடிகர் தனுஷ் பாடி ஒரு பாடல் இணையம் முழுக்க ஊடுருவி (புல்லுருவி) இளைய சமுகத்தின் வேதம்போல் அது உச்சரிக்கப்படுவதாக எழுது கிறார்கள். திரை இசைப் பாடல்களில் மொழியின் அருமையும் அமைப்பும் தெரியாத பலரும் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்று எழுதுகிறார்கள். அதற்கு இசை யும் கூட்டுகிறார்கள்.

நீங்கள் ஆயிரம் காரணம் சொல்லலாம் தனுஷ். ஆனால், தமிழ் பேசி தமிழ் நாட்டில் பிறந்த தமிழனின் செயல் இதுவல்ல. இந்தப் பாடலின் வெற்றி உங்களைக் கூசவைக்கவேண்டும்!

அம்மா!

ன்று அன்னையர் தினம்! என் அம்மாவைப் பற்றி சில செய்திகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

• படிப்பறிவு ஒரு சிறிதும் இல்லாதவள் என்னுடைய அம்மா. எனக்குத் தெரிந்து ஒவ்வொரு எழுத்தையும் தள்ளிப்போட்டு தன்னுடைய பெயரை எழுதக் கற்றுக் கொண்டு இருந்த அம்மா அதையும் மறந்துபோனாள் என்பதுதான் உண்மை.

• ஒவ்வொரு வியாழக்கிழமையும் எங்கள் வீட்டில் இருந்து பெரிய கோயிலுக்கு இரண்டு கி.மீ. குறுக்கு ரோட்டில் (பழைய திருவையாறு ரோடு) நடத்தியே அழைத்துக்கொண்டு போவாள். கோயிலைச் சுற்றி ஒவ்வொரு சந்நிதியிலும் வணங்கிவிட்டு புல்வெளியில் சிறிது நேரம் உட்காரவேண்டும். அப்போது சொல்வாள் 'திக்கத்தவங்களுக்குத் தெய்வம்தான் துணைம்பாங்க. நமக்கு எல்லாமும் சாமிதான்’ என்பாள். திரும்பி நடந்துவரும்போது உப்புக் கடலை ஒரு பொட்டலம் வாங்கி, ஆளுக்கு கொஞ்சம் கொடுத்து அதைக் கொறித்துக்கொண்டே கால் வலிக்க வலிக்க வீடு வந்து சேர்வோம்!

• அடிக்கடி அம்மாவின் கிராமத்துக்குப் போகும்போது கிராமத்து எல்லையில் இருக்கும் முனியாண்டவர் அம்மாவின் ஃபேவரைட். அங்குதான் ஒருமுறை திரு வையாறு சப்தஸ்தானம் பார்த்துவிட்டு ஊர் திரும்பும்போது தான் வயசுக்கு வந்த தாகச் சொல்வாள். முனியாண்டவர் அதை எல்லாம் ஒன்றும் கண்டுகொள்ளாமல் காக்கிறவர் என்று ஒவ்வொரு முறையும் ஊருக்குப் போகும்போது எல்லாம் அந்த முனியாண்டவர் கோயில் வாசலில் உட்கார்ந்து ஒரு பாட்டம் அழுதுவிட்டு ''எம்புள்ளங் களப் பாத்துக்கப்பா!'' என்பாள்.

வலையோசை