Published:Updated:

கொடநாட்டின் கொடை வள்ளல் அம்மா!

கொடநாட்டின் கொடை வள்ளல் அம்மா!

கொடநாட்டின் கொடை வள்ளல் அம்மா!

கொடநாட்டின் கொடை வள்ளல் அம்மா!

Published:Updated:

மக்கு போரடித்தால் சுற்றிப் பார்க்க ஊட்டி, கொடைக்கானல், வால்பாறை என எவ்வளவோ இடங்கள் இருக்கின்றன. ஆனால், முதல்வர் அம்மாவுக்கு கொடநாட்டை விட்டால் தமிழ்நாட்டில் வேறு இடம் ஏது?

கொடநாட்டின் கொடை வள்ளல் அம்மா!
##~##

முதல்வர் பதவியேற்றபின் இதோ வருகிறார், அதோ வருகிறார் என்று பல முறை எதிர்பார்க்கப்பட்டு ஒருவழியாக இந்த ஜூனில் கொடநாடு வந்த முதல்வர் நெடுநாள் தன் இருப்பை அங்கே நீட்டித்தது ஆச்சர்யம். கொடநாட்டுக்கு ஜெ. வந்ததன் நோக்கம்  'ஓய்வு எடுக்க’ என்று சொன்னால் குமட்டில் குத்துவார்கள். 'இங்கும் தமிழக மக்களுக்காக 24 மணி நேரமும் அம்மா உழைக்கிறார்’ என்பது ரத்தத்தின் ரத்தங்களின் சத்தமான பதில்.

முதல்வர் சென்னையில் இருந்தால் அவருடைய ஷெட்யூல்கள் அதிகாரிகளால் வகுக்கப்படும். கொடநாட்டிலோ ஜெ-வின் உதவியாளர் பூங்குன்றனுக்கே முதல்வருடைய ஷெட்யூல்கள் தெரியாது. முதல்வரின் பங்களா, எந்த உயரத்தில் இருந்தும் கவனிக்க முடியாத அளவு  உள் அடக்கமாக கட்டப்பட்டு உள்ளது. பெரிய சைஸ் பிளாஸ்மா திரையில் ஜெயா டி.வி. பார்ப்பது ரொம்ப பிடிக்குமாம். காலை மற்றும் மாலை வேளைகளில் எஸ்டேட் பங்களாவின் மொட்டை மாடியில் மிதமான வேகத்தில் நடைப் பயிற்சி செய்வார்.

இங்கு முதல்வருக்குப் பிடித்த இன்னொரு விஷயம், எஸ்டேட் பங்களாவின் சுற்றுவட்டாரத்தில் தென்படும் கிருஷ்ண பருந்து. 'பிராமினி பருந்து’ என்று இதை அழைக்கும் முதல்வர், இதன் தரிசனம் தென்பட்டால் 'ஹரே கிருஷ்ணா’ என்று கன்னத்தில் போட்டுக்கொள்வாராம்.

சில மாதங்களுக்கு முன்புவரை எஸ்டேட்டில் தங்கி இருக்கும்போது முதல்வர் மாலை நேரங்களில் பேட்டரி காரில் சசிகலாவுடன் வலம் வருவாராம். நான்கு புறங்களையும் கண்காணிக் கும் கேமரா, ஆடியோ ரிக்கார்டிங், மைக் என ஹைடெக் வசதிகளுடன் இருக்கும் அந்த கார். சமீப காலமாக முதல்வர் அப்படி வலம் வருவதில்லை. பாதுகாப்பு விஷயமே இதற்குக் காரணம் என்கிறார்கள்.

கொடநாட்டின் கொடை வள்ளல் அம்மா!

கொடநாடு பங்களா மற்றும் எஸ்டேட் உள்ளிட்டவை போலீஸின் மூன்று அடுக்கு பாதுகாப்பில் இருக்கின்றன. எந்த ஒரு அவசர கால நிலையையும் சந்திக்கும் பாதுகாப்பு அம்சங்கள் பங்களாவில் உண்டு. எங்கெங்கு கேமராக்கள் இருக்கின்றன என்பது பாதுகாப்பு பணியில் இருக்கும் காவலர்களுக்கே தெரியாது.

தேயிலைத் தோட்டப் பகுதிகளில் ஸ்பெஷல் டார்கெட் ஃபோர்ஸ் (எஸ்.டி.எஃப்) போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். முதல்வரின் பங்களாவே ஒரு குட்டி தலைமைச் செயலகம்தான். உயர் அதிகாரிகள் தங்கிப் பணிபுரிய பங்களா வளாகத்தினுள் மூன்று கெஸ்ட் ஹவுஸ்கள் கட்டப்பட்டு உள்ளன. பாதுகாப்பு போலீஸார் தங்கவும் ஓய்வு எடுக்கவும் கட்டடங்களும் மெஸ்களும் பங்களா வின் எதிர்புறம் உண்டு. தமிழகத்தில் அவசர நிலை என்றால் அது தொடர்பாக அத்தனை அதிகாரிகளையும் ஒருங்கிணைத்து எமர்ஜன்ஸி கூட்டம் நடத்தும் அளவுக்கு மெகா கான்ஃபிரன்ஸ் ஹால்களும் உள்ளன.

கொடநாடு பங்களாவில் தங்கி இருக்கும் நேரம் பங்களாவில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் எஸ்டேட் தொழிலாளர்களிடம் இன்முகம் காட்டுவது ஜெ-வின் வழக்கம். இந்த முறை அது இரு மடங்காகி இருக்கிறதாம். பணியாளர்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு படபட வென நிறைவேற்றப்பட்டன. பங்களாவில் கட்டடப் பணிகள் செய்யும் மேஸ்திரிக்கு வீடு கட்ட நிதி, வேலைக்காரப் பெண்மணி ஒரு வருக்கு வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்க பணம், இன்னும் பல பணியாளர்கள் கேட்ட உதவிகள் அத்தனையும் அள்ளி வழங்கப்பட்டது. தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகள் பரீட்சையில் தேர்வு ஆனதையும் மனமுவந்து பாராட்டி கைக் கடிகாரங்களைப் பரிசு அளித்தாராம்.

என்னதான் கொடநாட்டில் முதல்வர் ரிலாக்ஸ்டாக இருந்தாலும் தினமும் ஒரு திட்ட அறிவிப்பு, கட்டளை என்று அரசுப் பணி களையும்  தொய்வே இல்லாமல் பார்த்துக் கொள்கிறார். சென்னையில் இருக்கும்போது மிகப் பெரிய தொழிற்சாலைகளையும் பல நூறு கோடி மதிப்பிலான திட்டங்களையும் சர்வ சாதாரணமாக திறந்து வைப்பார். ஆனால், கொடநாடு வியூ பாயின்ட் அருகே கடந்த ஜூலை 25-ம் தேதி அன்று பாங்க் ஆஃப் இண்டியாவின் சாதாரண ஏ.டி.எம்-மை திறந்து வைத்து ஆச்சர்யப் படுத்தினார். கொடநாட்டைப் பொறுத்தவரை.. அவர்  லேடி ஆஃப் சிம்ப்ளி சிட்டி!

கொடநாட்டின் கொடை வள்ளல் அம்மா!

- எஸ்.ஷக்தி
படங்கள்: வி.ராஜேஷ், தி.விஜய்