Published:Updated:

பிரிவொன்றைச் சந்தித்தேன்!

பிரிவொன்றைச் சந்தித்தேன்!

''ஆடி மாதத்தில் உங்கள் துணையைப் பிரிந்து இருந்த சுவாரஸ்யமான அனுபவங்களைச் சொல்லுங்களேன்...'' என்று இவர்களிடம் கேட்டபோது...

பிரிவொன்றைச் சந்தித்தேன்!

 சாய்ராம், நூலகர், திருவண்ணாமலை: ''நாங்கள் ஆடி மாதத்தில் பிரிந்து இருந்த போது போன்லதான் பேசிக்குவோம். ரெண்டு முறை ரிங் அடித்ததும் எடுத்தால் என் மனைவிதான் பேசுகிறாள் என்று புரிந்துகொள்ளவேண்டும். ஒருநாள் அவளுடைய தங்கை எடுத்துவிட, அதை அறியாமல் நான் பாட்டுக்குப் பேசிக்கொண்டே இருந்தேன். திடீர்ன் என எதிர்முனையில் இருந்து ''மாமா நான் உங்க ஒய்ஃப் இல்ல’ என்று குரல் வரவும் கட் செய்துவிட்டேன். அதன் பிறகு  போனில் பேசுவதை நிறுத்திவிட்டேன். அதை இன்றும் என் மனைவி சொல்லிச் சொல்லி சிரிப்பாள்!''

அருண்குமார், பேராசிரியர், திருவண்ணாமலை: ''என் மனைவி ஆடி மாதத்தில் அவள் வீட்டுக்குப் போய் இருந்தபோது அவளைப் பார்க்கணும்னு ஆசைப்பட்டு, 'சினிமாவுக்குப் போகலாம்’னு சொன்னேன். அவளும் சரினு சொன்னா. ஆயிரம் கனவுகளுடன் ரெண்டு டிக்கெட்டுகளை வாங்கிட்டு தியேட்டர் வாசலில் நின்னுட்டு இருந்தேன். அவளோ தன் தங்கையுடன் வர ரொம்ப நல்லவன் மாதிரி அந்த ரெண்டு டிக்கெட்டுகளையும் அவளிடமே கொடுத்துட்டு, வெறுத்துப் போய் வீடு திரும்பினேன்!''

தினகரன், கேபிள் ஆபரேட்டர், திருவண்ணாமலை: ''ஆடி மாதத்தில் நாங்கள் பிரிந்து இருந்தபோது என் மனைவியைப் பார்க்கிற ஆசையில் அவளுக்கு உடம்பு சரி இல்லைனு என் வீட்டில் சொல்லிட்டு அவங்க வீட்டுக்குப் போனேன். அங்கே போய்ப் பார்த்தா எனக்கு முன்னால என் மொத்தக் குடும்பமும் நல்லா இருந்த அவகிட்ட நலம் விசாரிச்சுக்கிட்டு இருக்கு!''

##~##
சசிகுமார்,
ஜெராக்ஸ் கடை உரிமையாளர், ஆரணி:
''அவளோட ஊருக்கு ஒரு விழாவுக்காக என் சித்தப்பாவுடன் போய் இருந்தேன். என் சித்தப்பா பார்ப்பதற்கு அச்சு அசலா என்னை மாதிரியே இருப்பார். நான்தான்னு நினைச்சு அவரை எல்லோரும் மறைமுகமாக் கிண்டல் அடிச்சுட்டிருந்தாங்க. அந்த கேப்பில் நான் என் ஒய்ஃப்கிட்டே பேசிட்டு வந்தேன்!''

பாபு, ரியல் எஸ்டேட் பிசினஸ், திருவண்ணாமலை: ''ஒரு நாள் நில விற்பனை சம்பந்தமா அவ ஊருக்குப் போகவேண்டி இருந்தது. என் வேலையை முடிச்சுட்டு அவளைப் பார்க்க அவள் வீட்டுக்குப் போய் இருந்தேன். அன்னைக்குனு பார்த்து அவங்க வீட்டில எல்லோரும் குடும்பத்துடன் திருப்பதி போய்ட்டாங்க. வெறுத்துப்போய் ஊர் திரும்பினேன்!''

- கோ.செந்தில்குமார்
படங்கள்: பா.கந்தகுமார்

பிரிவொன்றைச் சந்தித்தேன்!
அடுத்த கட்டுரைக்கு