Published:Updated:

நான் ரொம்ப நல்லத் திருடன்!

நான் ரொம்ப நல்லத் திருடன்!

நான் ரொம்ப நல்லத் திருடன்!

நான் ரொம்ப நல்லத் திருடன்!

Published:Updated:
##~##

''அம்மா நான் பெரிய்ய தப்பு பண்ணிட்டேன். இந்த பாவம் என்னைச் சும்மா விடாது. உங்க கையால எத்தனை தடவை சாப்பிட்டு இருப்பேன். நான் இப்படி ஒரு தப்பைச் செஞ்சு இருக்கக் கூடாது. என்னை மன்னிச்சுடுங்க சனா அம்மா'' - இது மகன் அம்மாவுக்கு எழுதிய மன்னிப்பு கடிதம் அல்ல. பிறகு யார் எழுதியது? 

சென்னை சைதாப்பேட்டையில் வசிப் பவர் அசார் ஹூசைன். கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் டாக்டராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இவருடைய மனைவி சனா. அருகில் இருக்கும் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். கடந்த புதன் கிழமை வீட்டில் சனா மட்டுமே இருந்துள்ளார்.  காலிங் பெல் அடிக்க, 'அவரு சாயங்காலம்தானே வர்றேன்னு சொன்னார்’ என்று சனா யோசித்துக்கொண்டு இருக்கும்போதே காலிங் பெல் தொடர்ந்து வீறிட்டது. வியர்த்து விறுவிறுத்துப்போன சனா தனது மொபைலை எடுத்து போன் செய்ய முயற்சிக்க, அந்த நேரம் பார்த்து நெட்வொர்க் ஜாம். விடாமல் காலிங் பெல் அடித்துக்கொண்டு இருந்துள்ளது. சனாவின் வீடு அந்தத் தெருவில் உள் அடங்கிய வீடு. அவச ரத்துக்கு யாரையும் கூப்பிட முடியாது என்பதால் கண் கலங்கி, வீட்டின் அறையினுள் ஒடுங்கி உட்கார்ந்து இருக்கிறார் சனா.

நான் ரொம்ப நல்லத் திருடன்!

சனா இப்படிப் பயப்பட என்ன காரணம்? ஒரு வாரத்துக்கு முன்பு சனாவும் அவருடைய கணவரும் வீட்டைப் பூட்டிவிட்டு ராயபுரத்தில் இருக்கும் உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டார்கள். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டுக்குள் அலமாரிகள் தாறுமாறாக கலைக்கப்பட்டு இருந்தன. அதிர்ச்சியுடன் படுக்கை அறைக்குச் சென்றால், பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 70 பவுன் தங்க நகைகள், கொஞ்சம் பணம் காணாமல் போயிருந்தன. மகன்கள் இருவரும் குருவி சேர்ப்பதுபோல பல ஆண்டுகள் உழைத்துச் சேர்த்துவைத்த சொத்து அது. இடிந்துபோனார்கள் அந்த வயதான தம்பதியர். இந்த நிலையில்தான் இப்படி ஒரு அதிரடி காலிங் பெல் அழைப்பு.

அதன்பின்பு என்ன நடந்தது? போலீஸ் தரப் பில் சொன்ன தகவலின்படி ''ஒருவழியாக மொபைல் போனில் சிக்னல் கிடைக்கவும் கணவரிடம் விஷயத்தைச் சொல்லி இருக்கிறார். அவர் மூலம் எங்களுக்குத் தகவல் வந்தது. நாங்கள் செல்வதற்குள் அவராகவே கொஞ்சம் தைரியம் அடைந்து, கதவின் லென்ஸ் வழியாக வெளியே பார்த்துள்ளார். யாரும் இல்லை.சுமார் பத்து நிமிடங்கள் காத்திருந்தவர், வெளியே சத்தம் இல்லாததைத் தொடர்ந்து மெதுவாகக் கதவைத் திறந்து எட்டிப் பார்த்திருக்கிறார். ஆட்கள் யாரும் இல்லை. ஆனால், வாசலில் பிளாஸ்டிக் கேரி பேக் ஒன்றில் திருட்டுப்போன நகைகள் அப்படியே இருந்தன. கூடவே ஒரு கடிதமும் இருந்தது (அந்தக் கடிதம்தான் மேலே நீங்கள் படித்தது)

தொடர்ந்து நாங்கள் சென்று, அந்த நகைகளை எங்கள் கஸ்டடிக்குக் கொண்டுவந்து ஆய்வு செய்தோம். புகாரில் டாக்டர் கொடுத்த நகை களின் அடையாளமும் பிளாஸ்டிக் பையில் இருந்த நகைகளின் அடையாளமும் ஒரே மாதிரியாக இருந்தன. அவை சனா வீட்டில் திருடப்பட்டவைதான்'' என்றார்கள்.

சரி, ஏன் திருடன் மீண்டும் நகைகளைக்கொண்டுவந்துவைத்தான் என்று போலீஸாரி டமே கேட்டோம். ''இந்தத் தம்பதியரிடம் விசாரணை செய்ததில் கிடைத்த தகவல்களை வைத்து இரண்டு விஷயங்கள் யூகித்து இருக்கி றோம். நகைகள் காணாமல் போனதில் இருந்தே இவர்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வட்டாரத்தில் நேரிலும் போனிலும் பேசி தர்காவுக்குச் சென்று வேண் டிக்கொண்டு முட்டை புதைத்து வைப்பதாகப் பேசி இருக்கிறார்கள். அப்படிப் புதைத்துவைத் தால் திருடன் எங்கு இருந்தாலும் வீட்டின் முன்பு வந்து ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுவான் என்பது இவர்களின் நம்பிக்கை. இவர்கள் வீட்டில் நகைகளைத் திருடியது கட்டாயமாக இவர்களுக்குத் தெரிந்தவர்களாக அல்லது வீட்டில் வேலை செய்ய வந்த வர்களாகத்தான் இருக்க வேண் டும். அதனால், முட்டை புதைத்துவைப்பதாகக் கேட்ட தகவலை அடுத்துப் பயந்துபோய் நகைகளைக் கொண்டுவந்து வைத்துவிட்டார்கள். நாங்கள் கிட்டத்தட்ட திருடனை நெருங்கிவிட்டோம். சீக்கிரமே பிடித்துவிடுவோம். ஆனால், தண் டனை வாங்கித் தரலாமா? அல்லது எச்சரித்து, மன்னித்துவிட்டுவிடலாமா என்றுதான் யோசித்துவருகிறோம்...'' என்றார்கள்!

            - டி.எல்.சஞ்சீவிகுமார்