Published:Updated:

”உசுரு கொடுத்த மண்ணை விட்டுப் போக முடியுமா?”

Coimbatore
Coimbatore

”உசுரு கொடுத்த மண்ணை விட்டுப் போக முடியுமா?”

Coimbatore
Coimbatore

ம்னி பஸ் போக்குவரத்து சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தி கே.பி.நடராஜன். இவருடைய கே.பி.என் பஸ் சக்கரங்கள் பதியாத ஊர்களே தமிழகத்தில் இல்லை எனலாம். இவர் தன்னுடைய சொந்த ஊரான சேலம் மாவட்டம், பெரியபுத்தூர் பற்றிய நினைவுகளை இங்கே பகிர்ந்து கொள்கிறார்.

KP Natarajan
KP Natarajan
##~##

''எங்க தாத்தா காலத்துல இருந்தே  விவசாயம்தான் எங்க தொழில். ஊர் முழுக்க நெல், வாழை, கரும்புனு பசுமையாக இருக் கும். அந்தக் காலத்துல ரேஷன் கடைகளை அரசாங்கம் தனியாருக்குக் குத்தகைக்கு விட்டிருந்தது. எங்க அப்பாவும் அப்படி ஒரு கடையைக் குத்தகைக்கு எடுத்துப் பொருட்களை விநியோகம் செஞ்சார். செவ்வாய்ப்பேட்டை நகராட்சிப் பள்ளியில்தான் படிச்சேன். வீட்டில இருந்து பள்ளிக்கு நடந்தேதான் போவேன். எட்டாவது படிச்சதோடு சரி... அதுக்கு மேல பள்ளிக்கூடத்துக்குப் போகலை. அப்பாகூட கொஞ்ச நாள் ரேஷன் கடைக்குப் போயிட்டு இருந் தேன்.

எங்க கிராமத்துல இருக்கிற மக்கள் வருஷத்துக்கு ஒரு தடவையாவது திருப்பதிக்குக் கிளம்பிடுவாங்க. புரட்டாசி மாசம் முழுவதும் ஊர் மக்கள் பெருமாளுக்கு விரதம் இருப்பாங்க. ஊர்ல கறிக்கடை எதுவும் இருக்காது. யாரும் முட்டைகூட சாப்பிட மாட்டாங்க. அப்பதான் கிராமத்துக்காரங்களை எல்லாம் ஒண்ணா சேர்த்துத் திருப்பதிக்குக் கூட்டிட்டுப் போகலாமேன்னு ஒரு எண்ணம் வந்துச்சு.  வீடு வீடாகப்போய் திருப்பதி ஆன்மீகச் சுற்றுலாவுக்கு ஆள் சேர்ப்பேன். ஒரு பஸ்ஸை வாடகைக்குப் பிடிச்சு, சிவகுமார் பஸ் சர்வீஸ்னு அதுக்குப் பேரும் வெச்சு முதல் வருஷம் சுற்றுலாவை வெற்றிகரமாக நடத்தி முடிச்சேன்.  

”உசுரு கொடுத்த மண்ணை விட்டுப் போக முடியுமா?”

நான் நடிகர் சிவகுமாரோட தீவிர ரசிகன். அந்தக் காலத்துல அவர் நடிச்ச படங்கள் ஒண்ணு  விடாம ரிலீஸ் அன்னைக்கே பார்த்திடுவேன். சேலம் சாந்தி தியேட்டர், ஓரியன்டல் தியேட்டருக்கு ரெண்டாவது ஆட்டம் படம் பார்க்க நண்பர்களோடு கிளம்பிடுவோம். 'ரோசாப்பூ ரவிக்கைக்காரி’, 'பத்ரகாளி’ படங்களை எத்தனை தடவை பார்த்தேன்னு எனக்கே தெரியாது.

குரங்குசாவடியில ஐயப்பன் கோயில் ஒண்ணு இருக்குது. அங்க போனாலே மனசுக்குள்ள இருக்கிற கவலை எல்லாம் பறந்து ஓடிடும். எப்போ ஓய்வு கிடைச்சாலும் நான் அங்க போயிடுவேன்.

கொண்டலாம்பட்டி சுத்து வட்டாரத்துல நிறைய ரோட்டோர பரோட்டாக் கடைகள் இருக்கு. சேலத்தைக் கடந்து போற லாரி டிரைவர்கள் எல்லாருமே அந்தப் பகுதியில்தான் நிறுத்திச் சாப்பிடுவாங்க. அதுவும் கொண்டலாம்பட்டியில உள்ள குமார் கடை பார்க்க சாதாரணமாக இருக்கும். ஆனா, டேஸ்ட் அடிச்சுக்க முடியாது. பல மைல் தூரத்துல இருந்தெல்லாம் அங்க சாப்பிட வருவாங்க.

பொங்கல் திருவிழாதான் எங்க கிராமத்தில் ரொம்ப விசேஷம். போகிப் பண்டிகை அன்னைக்குக் கிராமத்துல இருக்கிற பசங்க எல்லாம் காப்புக் கட்ட பூளப் பூ, ஆவாரம்பூ, வேப்பந்தழை பறிக்கக் காடு மேடு எல்லாம் சுத்துவோம். சாயந்திரம் வீடுகளுக்குக் காப்பு கட்டி முடிச்ச பிறகுதான் எதையோ சாதிச்ச மாதிரி இருக்கும். கரிநாள் அன்னைக்கு ஊர்ல எல்லோரும் சேர்ந்து ஆட்டுக் கிடா வாங்கி வெட்டி, கறியைக் கூறு போடுவோம். அன்னைக்குச் சாயந்திரம் மாரியம்மன் கோயில் திடல்ல 'பொழி எருது ஆட்டம்’ நடக்கும். ஒரு சின்ன எருதுக்கு  அலங்காரம் செஞ்சு கோயிலைச் சுத்த விடுவாங்க. கயிறு போட்டுக் கட்டி வச்சாலும் துள்ளுற எருதை அடக்கச் சின்னப் பசங்க எல்லாம் ஆர்வமா வருவாங்க. இன்னைக்கும் அந்த விழா நடக்குது.

நான் பஸ் ஓட்ட ஆரம்பிச்ச பிறகு போகாத ஊர் கிடையாது. ஆனா லும், இந்தக் கிராமத்துல கிடைக்கிற சந்தோஷம் வேற எங்கும் கிடைக்கல. நாங்க தலைமுறை தலைமுறையா வாழுற மண்ணு இது. உசுரு கொடுத்த மண்ணை விட்டு வேறு எங்கும் போக முடியுமா... சொல்லுங்க?''

”உசுரு கொடுத்த மண்ணை விட்டுப் போக முடியுமா?”

- சந்திப்பு: கே.ராஜாதிருவேங்கடம்
படங்கள்: க.தனசேகரன்

அடுத்த கட்டுரைக்கு