Published:Updated:

வலையோசை

வலையோசை

வலையோசை

பாட்டி!

வலையோசை

எனக்கு குற்ற உணர்ச்சியாக இருந்தது. கடந்த சில நாட் களாக என் பாட்டியைச் சென்று பார்க்கவில்லை. அவர் என்னைப் பார்க்க வேண்டும் என்று சொல்லி அனுப்பியும், நான் போகவில்லை. பொதுவாகத் தலைமுறை இடைவெளி அதிகரிக்க அதிகரிக்க, அன்பும் அதிகரிப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. ஒரு பாட்டி தன் பேரனிடம் வைத்திருக்கும் அன்பு, தன் மகனிடம் வைத்து இருக்கும் அன்பைவிடஅதிகம். இங்கு வேறுபட்ட இரண்டு தலைமுறைகள் தங்களுக்கு இடையே கூட்டணி அமைக்கின்றன. ஒரு தலைமுறையின்கலா சாரமும் பண்பாடும் தாய் தந்தையரைவிட தாத்தா பாட்டி மூலமாகவே அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுகின்றன. ஓய்வு நேரத்தில் தாத்தா பாட்டி சொல்லும் கதைகள், அவர் கள் காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள் மூலம் அவைவெளிப்படுத்தப் படுகின்றன.  இவை எந்த ஒரு முயற்சியும் இன்றித் தானாக நடைபெறுகின்றன. தாத்தா, பாட்டிகள் தங்கள் அடுத்த தலை முறையுடன் மனம் ஒப்பிச் செல்வதைவிட அதற்கும் அடுத்த தலைமுறையுடன் எளிதாக இணைந்துபோகிறார்கள். பாட்டி யைப் பற்றி நிறையப் பேசிவிட்டேன். அதனால் பாட்டியைப் பார்க்க உடனே கிளம்பிவிட்டேன்!

கனவு!

வலையோசை

இன்று பகல்பொழுதில்  நல்ல தூக்கம். ஒரு கெட்ட கனவு கண்டேன். நாங்கள் ஒரு முதலைப் பண்ணைக்குச்செல் வது போலவும், அங்கு இருந்த ஒரு முதலை எங்களுக்கு முன் னால் சென்றவரைக் கடிப்பதுபோலவும் கனவுவந்தது. எனக்கு முதலை என்றாலே பிடிக்காது. அந்தக் கனவின் முடிவில், அது ஒரு கனவுதான் என்ற புரிதல் ஏற்பட்டதும் ஏற்பட்ட மகிழ்ச்சி அருமையானது. கெட்ட கனவின் முடி வில் ஏற்படும் மகிழ்ச்சி எத்தகையது? நல்லவேளை, இது வெறும் கனவு என்ற புரிதல் தரும் மகிழ்ச்சி மட்டும்தானா? எனக்கு அதையும் தாண்டி ஏதோ ஒன்று இருப்பது போலவே தோன்றுகிறது.

ஓர் உண்மையான திகில் அனுபவத்தை எந்த  இழப்பும்இல் லாமல் அனுபவித்த உணர்வுதான் அது என்று தோன்று கிறது!

கதை!

வலையோசை

கதை சொல்வது என்பது மிகச் சிறந்த கலை. அது எல்லா ருக்கும் வாய்க்காது. எங்கள் அப்பா ஒரு மிகச் சிறந்த கதை சொல்லி. மின்சாரம் போன இரவுகள் எல்லாம் எங்களுக்கு மிகச் சிறந்த இரவுகளாகும். காரணம், நிச்சயம் அந்த இரவு களில் எங்கள் அப்பா கதை சொல்வார். கதை கேட்பதற்கு எங்கள் அக்கம் பக்கம் குடியிருக்கும் அத்தனைச் சிறுவர் சிறுமிகளும் கூடிவிடுவார்கள்.

கதை சொல்வதற்கு மிகச் சிறப்பான கற்பனா சக்தி இருக்க வேண்டும். அது என் அப்பாவுக்கு நிறையவே இருந்தது. அவர் கதையை எப்படியோ ஆரம்பித்து எங்கயோ சென்று முடிப் பார். அது கடைசியில் மூலக் கதையில் இருந்து மிகவும் மாறுபட்டதாக இருக்கும். அதுவும் அற்புதமாகவே இருக்கும். கதை கேட்பது என்பதும்  மிகச் சிறந்த அனுபவம்தான். அந்த அனுபவம் அனைவருக்கும் கிடைப்பது இல்லை. சிறுவர்கள் எப்போதும் கதை கேட்பதற்குத் தயாராகவே உள்ளார்கள். ஆனால், இந்தக் காலத்தில் கதை சொல்லத்தான் ஆட்கள் இல்லாமல் போவிட்டது பெரியவர்கள் தொலைக்காட்சிக்கு அடிமையாகிவிட்ட இந்த நாட்களில் சிறுவர்கள் என்ன செய் வார்கள்?

என் பிள்ளைகளும் இன்றைய நாகரிக உலகத்துடன் சேர்ந்து கதை கேட்காமல் போய்விடுவார்களோ என்கிற பயம் எனக்கு ஏற்படுகிறது. என்னாலும் சிறப்பாகக் கதை சொல்லத் தெரி யாது. இந்த நேரத்தில்தான் எங்கள் அப்பா எங்களுடன் இல்லாத வேதனை எனக்குப் புரிகிறது. நான் என் அப்பாவை இழந்து வாடும் வேதனையைவிட என் பிள்ளைகள் ஒரு மிகச் சிறந்த கதைசொல்லியை இழந்துவிட்டார்களே என்கிற வேதனையே என்னை அதிகம் வாட்டுகிறது. என் அப்பா இப் போது  இருந்தால் அவர் மிகச் சிறந்த மகனாகவும், மிகச் சிறந்த கணவனாகவும், மிகச் சிறந்த தகப்பனாகவும், இருப் பதோடு அல்லாமல் ஒரு மிகச் சிறந்த தாத்தாவாகவும் இருந்திருப்பார்!

வலையோசை
அடுத்த கட்டுரைக்கு