Election bannerElection banner
Published:Updated:

''நமக்கு அப்பா அந்தக் கடவுள்தான்!''

''நமக்கு அப்பா அந்தக் கடவுள்தான்!''

##~##

குழந்தைகளுக்கு வாய்ப்புகள் கொட்   டிக்கிடக்கும் உலகம் இது. நடுத் தரக் குடும்பத்தில்கூட தங்கள் குழந்தைகளுக்கு இருக்கும் திறமைகளைக் கண்டுபிடித்துபெற் றோர்கள் ஊக்கம் தந்து, இலக்கை நோக்கி ஓடவைக்கிறார்கள். ஆனால், ஆதரவற்ற குழந்தைகளுக்கு? 

சென்னையைச் சுற்றி உள்ள 22 இல்லங் களில் இருந்து 950 ஆதரவற்ற குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து, பலவகையானப் பயிற்சிகள் கொடுத்து, போட்டிகள் நடத்தி அவர்களின் திறமைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறது 'பூமி’ என்ற அமைப்பு.

அந்த அமைப்பு நடத்திய முகாமில், ''என்ன மாமா சௌக்கியமா?'' என்றுமேடை யில் தன்னுடைய  நடிப்பால் அசரவைத்துக்கொண்டு இருந்தார் ஒரு மாணவி. அடுத்து வந்தவர் சூப்பர் ஸ்டார் வேடம் போட்டு இருந்த குட்டிக் கண்ணன். 'கண்ணா, எங்களுக்குச் சொல்லிக்கச் சொந்தம்கிடை யாதுதான். ஆனா, பெயர் தெரியாத இந்த மக்கள்எல் லாரும் எங்களுக்குச் சொந்தம்தான்'' என்று ரஜினி ஸ்டைலில் அவன் மிமிக்ரி செய்ய, கைதட்டல்கள் அரங்கை அதிரவைத்தன. இரண்டாவது படிக்கும் பத்மினி மாறுவேடப் போட்டிக்காகத் தனியாக மரத் தடியில் நின்றுகொண்டு, தனக்குத்தானே மேக்கப் போட்டுக்கொண்டு இருந்தாள். ''போன வருஷம் எங்க ஸ்கூல்ல தேவதை வேஷம் போட்டேன். பரிசு கிடைக்கலை. அதனால, இந்த வருஷம் பேய் வேஷம் போட்டு எல்லாரையும் பயமுறுத்தப்போறேன்'' என்று மழலை மொழியில் பயம் காட்டினாள். தொடர்ந்து பாட்டு, பேச்சு, கட்டுரை,  பெயின்டிங், ஃபேஸ் பெயின்டிங் எனப் பல போட்டிகளுக்காக மேடை ஏறினார்கள் குழந்தைகள்.

''நமக்கு அப்பா அந்தக் கடவுள்தான்!''

''இந்தப் புள்ளைங்களுக்கு அம்மா, அப்பா, சொந்தம்னு சொல்லிக்க யாரும் கிடையாதுங்க. இவங்களுக்கு மத்தக் குழந்தைகள்தான் உறவு, நட்பு எல்லாமே. எல்லா விசேஷங்களும் ஹாஸ்டலுக்குள் மட்டும்தான். எல்லோருமே சந்தோஷமா இருப்பாங்க. ஆனாலும், ஒவ்வொருத்தருக்குள்ள  ஒரு இனம் புரியாத சோகம் இருக்கும். என்னதான் அந்த மாண வர்களுக்குப் பிடிச்சதை வாங்கிக் கொடுத்து, சந்தோஷமா வெச்சிருந்தாலும் அவர்களுக்குள் இருக்கும் வாட்டத்தை மட்டும் போக்க முடியலை.

''நமக்கு அப்பா அந்தக் கடவுள்தான்!''
''நமக்கு அப்பா அந்தக் கடவுள்தான்!''

இந்த மாணவர்கள் ஸ்கூல் முடிஞ்சா ஹாஸ் டல், ஹாஸ்டல் விட்டா ஸ்கூல்னு ஒரு குறுகிய வட்டத்துக்குள் வாழ்றாங்க. இது மாதிரியான நிகழ்ச்சிகள் அவங்களுக்கு நிச்சயம் வழிகாட்டு தலா, நல்ல அனுபவங்களா இருக்கும்'' என்கிறார் வார்டனாகப் பணிபுரியும் பார்வதி.  

''நமக்கு அப்பா அந்தக் கடவுள்தான்!''

எக்மோர் ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ரயிலில் இருந்து அந்தப் பெண் குழந்தை மீட்கப்பட்டு இருக்கிறது. போலீஸார் அந்தக் குழந்தையை ஆதரவற்றோர் இல்லத்தில் ஒப்படைத்துள்ளார்கள். தற்போது ஏழாம் வகுப்புப் படிக்கும் அந்த மாணவி வித விதமான பெயின்டிங் வரைந்து அசத்திக்கொண்டு இருக்கிறாள். ''எங்க அம்மா யாரு? நான் எப்படி இங்கே வந்தேன்?'' என்று அவள் கேட்கும்கேள்விக் குப் பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார் இருக்கிறார் வார்டன்.

பூமி அமைப்பின் நிர்வாகியான பிரகலாதன், ''கடந்த ஆறு வருஷமா ஆதரவற்ற மாணவர் களுக்காகப் பல்வேறு விதமான போட்டிகளை நடத்திட்டு இருக்கோம். இந்த நிகழ்ச்சியை நடத்த சமூக அக்கறை உள்ள பல நண்பர்கள்பல் வேறு வகையில் உதவி செய்றாங்க. மாணவர் களுக்குள் இருக்கும் திறமையைக்  கண்டுபிடித்து, அவர்களை உற்சாகப்படுத்துவதுதான் எங்க ளுடைய நோக்கம். 'அப்பா, அம்மா இல்லைனு கவலைப்படாதீங்க. நம்ம எல்லாருக்கும் அப்பா அந்தக் கடவுள்தான்’னு அவங்ககிட்ட சொல்லிக் கிட்டே இருப்பேன். எதிர்காலத்தில் இந்தக் குழந்தைகள் பெரிய அளவில் சாதனை படைப் பாங்கனு நம்பிக்கை இருக்கு'' என்கிறார் உறுதியான வார்த்தைகளில்.

நல்ல முயற்சி தொடரட்டும்!

- நா.சிபிச்சக்கரவர்த்தி

படங்கள்: வி.செந்தில்குமார்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு