##~##

கிழக்குக் கடற்கரைச் சாலை. சென்னையில் உள்ள டீன் ஏஜர் களின் முதல் என்டர்டெய்ன்மென்ட் சாய்ஸ். மூச்சு முட்டும் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பித்து, அடையாறைத் தாண்டினால் திருவான்மியூரில் ஆரம்பித்து சிதம்பரம் வரை நீளும் இந்தச் சாலையில், எத்தனைக் கொண் டாட்டம்.  

உண்மையில் இங்கு சனிக் கிழமை மதியத்தில் இருந்தே துவங்குகின்றன சந்தோஷ நிமிடங்கள். காற்றுக்குக் கூட இடைவெளிவிடாமல் காத லனைக் கட்டிப் பிடித்துக்கொண்டு செல்லும் பெண்களுடன் விர்ர்... விர்ர் என்று பறக்கின்றன பைக்குகள். மணல் வெளியில் சமைத்துச் சாப்பிட ஸ்டவ், தண்ணீர் கேன் மற்றும் அசைவப் பொருட்களுடன் நிழலான சவுக்குத் தோப்பில் இளைப்பாறிக்கொண்டு இருக்கிறது ஒரு குடும்பம்.

கடற்கரைச் சாலையில் கொண்டாட்டப் பயணம்!

இன்னொரு பக்கம் கார் மற்றும் பைக்குகளில் பீரைப் பீய்ச்சி அடித்தபடி உற்சாகத் திருவிழா நடத்திக்கொண்டு இருக்கிறது இளசுகளின் கூட்டம். இவர்களைக் குறிப்பிட்ட இடத்தில் வசமாக மடக்குகிறார்கள் காக்கிகள். சில நிமி டங்கள்தான்... என்ன டீலிங்கோ தெரியவில்லை. வாய் நிறையச் சிரிப்புடன் பாக்கெட்டில் எதையோ திணித்துக்கொண்டே காக்கிகளே இவர்களைக் கை அசைத்து அனுப்பிவைக்கி றார்கள்.

கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள் இங்கு உள்ள மருந்தீஸ்வரர் கோயிலுக்குச் சென்று சாமியைப் பார்த்துக் கன்னத் தில் போட்டுக்கொண்டு கிளம்புவது நலம்.

அடுத்து, ஈஞ்சம்பாக்கத்தில் 'பிரார்த்தனா’ டிரைவ்-இன் தியேட்டர்.இந்தியா வின் முதல் திறந்தவெளித் திரை அரங் கம்  என்ற பெயர் பெற்றது. 'பிரார்த் தனா’வுக்குப் படம் பார்க்கத் தனியாகச் செல்வது வீண். காதலி அல்லது கேர்ள் ஃப்ரெண்ட்... அட்லீஸ்ட் நல்ல நண்பன் உடன் இருப்பது நன்று. அருகில் கோரமண்டல் கலைக் கிராமம் உள்ளது. சிறந்த கலைஞர்களின் சிற்ப படைப்புகள், கைவினைப் பொருட்கள்  பார் வைக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டு உள்ளன.

கடற்கரைச் சாலையில் கொண்டாட்டப் பயணம்!

அடுத்து, வி.ஜி.பி. கோல்டன் பீச். பர்ஸ் பலமாக இருப்பவர்கள் என்ஜாய் செய்யலாம். அடுத்து கானாத்தூரில் 'மாயாஜால்’ இருக்கிறது. 14 தியேட்டர்கள் பிரமாண்டமாக வரவேற்கின்றன. ஜோடி இல்லாமல் போனால்தான் சந்தேகமாகப் பார்ப்பார்கள். உள்ளேயே உணவகங்களும்உண்டு. இன்னும் கொஞ்சம் தூரம் பயணம் செய்தால் முட்டுக்காடு. இங்கு எம்.ஜி.எம். பீச் ரிசார்ட் மற்றும் டி.ஸி வேர்ல்டு உல்லாசப் பொழுதுபோக்கு பூங்கா உள்ளன.  ராட்சத ராட்டினம், சுழல் சக்கர ராட்டினம் என்று நம்மைப் பிரமிக்க வைக்கும் சாகஸங்கள் இங்கே.

ஈ.சி.ஆர்.ரோட்டின் ஹைலைட்டே முட்டுக் காடு படகுத் துறைதான். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் 28 மோட்டார் படகுகள், 10 துடுப்பு படகுகள், ஒன்பது பெடல் படகுகள் உள்ளன. கரையோரம் பசுமையான மரங்களையும் அதில் பூத்துக்கிடக்கும்  மஞ்சள் கொன்றை மலர்களையும் 'கியாங்...’ என்று கூவிக்கொண்டே பறக்கும் கடற் பறவைகளையும் ரசித்துக்கொண்டே படகில் பயணம் செல்வது சுகமான அனுபவம். காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை மட்டுமே அனுமதி.

கடற்கரைச் சாலையில் கொண்டாட்டப் பயணம்!

கோவளம் பீச் கேவலமாக இருக்கிறது.  வட நெம்மேலியில் முதலைப் பண்ணையையும் பாம்புப் பண்ணையும்  தவறவிட வேண்டாம். நுழைவுக் கட்டணமும் குறைவுதான். அடுத்து, சூளேரிக்காட்டுக் குப்பத்தில் டால்ஃபின் சிட்டி பொழுதுபோக்கு பூங்காவில் கடல் சீல்களைக் கண்டு களித்துக் கடந்தால், சாலவான்குப்பத்தில் பல்லவர் காலத்தில் அமைக்கப்பட்ட திறந்தவெளி அரங்கத்தையும் புலிக் குகையையும் பார்க்கலாம். சுனாமியின்போது இங்கு பூமிக்குள் புதைத்து இருந்த பழங்கால முருகன் கோயில் வெளியே வந்த ஆச்சர்யமும் உள்ளது. அடுத்து மாமல்லபுரம். கடற்கரைக் கோயில், ஐந்து ரதம் சிற்பம் என இங்கு பார்த்துக் களிக்க ஏராளம் உள்ளன.

இங்கு இருந்து 37 கி.மீ. பயணம் செய்தால் முதலியார் குப்பம் படகுத் துறை தென்படுகிறது. துடுப்பு படகு, மோட்டார் படகு இருந்தாலும் இங்கு வாட்டர் ஸ்கூட்டர்தான் பிரபலம். படகில் பயணித்துவிட்டு அருகில் கடப்பாக்கத்தில் இருக்கும் ஆலம்பாறைக் கோட்டையை அவசி யம் பார்த்துவிட்டு வரவும். அப்போதுதான் கிழக்குக் கடற்கரைச் சாலைப் பயணம் முழுமை அடையும்!

- டி.எல்.சஞ்சீவிகுமார்

படங்கள்: செ.நாகராஜன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு