Published:Updated:

மிஸ்டு கால்

பாரதி தம்பிஓவியங்கள் : ஹரன்

மிஸ்டு கால்

பாரதி தம்பிஓவியங்கள் : ஹரன்

Published:Updated:
##~##

னிதனின் இரண்டாவது இதயமாகிவிட்டது செல்போன். இப்போதெல்லாம் யாரும் காலிங் பெல் அடிப்பது இல்லை. மிஸ்டு கால் மட்டுமே. இப்படி காலிங் பெல், அலாரம் டைம்பீஸ், காலண்டர், கைக்கடிகாரம், மடிக் கணினி எனப் பல பொருட்களை மறக்கடித்த செல்போனின் அருமை பெருமை... துன்ப, துயரங்களையும் அவசிய, அநாவசியங்களையும் பகிர்ந்துகொள்வோம் இங்கே...    

• அவன் ஓர் உதவி இயக்குநன். அவனுடைய அப்பா இரண்டு செல்போன்கள் வைத்திருக்கிறாராம். அந்த நம்பர்களை இவன் தன் செல்போனில் பதிந்துவைத்திருக்கிறான் இப்படி... அப்பா-1, அப்பா-2.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• ஒரு பெண்ணின் (ஆமாம்... அழகிய பெண்தான்!) செல்போன் எண்ணை வாங்க பையன்கள் நடத்தும் சேஸிங்கில் பல மசாலா படங்களுக்கான ஸ்க்ரிப்ட் ஒளிந் திருக்கிறது. அந்தப் பெண்ணின் தோழிக்குத் தோழியை நட்பு பிடித்து, அதற்கு என ஐஸ்க்ரீமுக்கும் கே.எஃப்.சி. சிக்கனுக்கும் கார்டு தேய்த்து, அவள் கொடுக்கும் பில்டப்பு களையும் மொக்கைகளையும் பொறுத்துக்கொண்டு நம்பரை வாங்குவதற்குள்

மிஸ்டு கால்

தாவு தீர்ந்துவிடும். அதிலும்,இந்தப் பெண் கள் நம் முகத்தைப் பார்த்துக்கொண்டே விரல்களால் ஒரு கைதேர்ந்த டைப்பிஸ்ட்போல, அத்தனை வேகமாக டைப் செய்வதைப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.

• லேட்டஸ்ட் மாடல் செல்போன் வாங்காமல் இருப்பது ஒரு குற்றமா? இதற்காக நமது பழைய செல்போனை எந்தெந்த வழியில் அழித்தொழிக்கலாம் எனத் தினந்தோறும் டி.வி. விளம்பரங்களில் சொல்லித்தருகிறார்கள். 'உங்ககிட்ட ஸ்மார்ட் போன் இல்லையா அங்கிள்?’ என்று 30 வயது இளைஞனை அங்கிள் ஆக்குகின்றனர். இதற்கு நடுவில் சினேகாவும் பிரசன்னாவும் செல்போன் விளம்பரத்துக்காக அடிக்கும் 'ஆடி மாதப் பிரிவு’க் கூத்து தாங்க முடியாத துன்பியல் துயரம்.

• ராமநாதபுரம் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய விஜயகாந்த், செல்போன் கேமராவில் படம் பிடிக்கும் தொண்டர்களைப் பார்த்துச் சொன்னது, ''யாரும் நான் பேசுறதைச் செல்லுல பதிவு பண்ணாதீங்க. ஏன்னா, நீங்க ப்ளூடூத்தை ஆன் பண்ணிவெச்சிருந்தீங்கன்னா, அதைச் சில பேரு வேற படத்தை மிக்ஸ் பண்ணித் தப்பான தகவலைப் பரவவிட்ருவாங்க.''

மக்களே... உங்களுக்கு 'இஷ்க்... இஷ்க்’ என்று கேட்க வில்லையா?

• JOIN CTP என்று டைப் செய்து 092195 92195 என்ற நம்பருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினால், சென்னை டிராஃபிக் நெரிசல்பற்றிய அப்டேட்ஸ் எஸ்.எம்.எஸ்-களாக வந்துகொண்டே இருக்கின்றன. சாலை மறியல், பஸ்பிரேக் டவுன், மெட்ரோ ரயில் வேலைகள் எனக் காரணத்தையும் அனுப்பிவைக்கிறார்கள். என்ன ஒன்று, நீங்கள் மவுன்ட் ரோட்டில் இருந்தால், மண்ணடியில் டிராஃபிக் ஜாம் ஆனதையும் மண்ணடியில் இருந்தால் மடிப்பாக்கத்தில் மழை தேங்கி நிற்பதையும் தெரிந்துகொண்டேயாக வேண்டும்.

• அதிகாலை 4 மணிக்கு 'கேப்’ பிடிக்கும் ஐ.டி. நண்பன் ஒருவன் மேன்ஷனில் தங்கியிருந்தான். அவனை 3.50-க்கு போன் அடித்து எழுப்பிவிடும் அலாரமாக இருந்தாள் அவன் காதலி. வேலை முடித்து மதியம் மேன்ஷன் திரும்பி, கொஞ்சம் தூங்கி எழுந்து மாலையில் பேச ஆரம்பித்தால், இரவு தூங்கப்போகும் வரை பேசிக்கொண்டே இருப்பான். அதன் பிறகும் நான்கு தடவை 'ஐ மிஸ் யூ’ அனுப்பினால்தான் அவன் மனசு ஆறும்.

• காதல் சண்டையின் புதிய பரிமாணங்களை செல்போன் தான் தோற்றுவித்தது. ''நைட் 11 மணிக்கு கால் வெயிட்டிங். அவ யாரு?'' என ஆரம்பித்தால், அந்தச் சண்டை முடிய எப்படியும் 1 மணி ஆகும். ''ஃப்ரெண்டும்மா... சும்மா பேசிக்கிட்டு இருந்தான்.'' சமாதானங்கள் எதுவும் எடுபடு வது இல்லை. ''உன் ஃப்ரெண்டுங்க எல்லாம் குடிச்சுட்டு நைட்டு 12 மணிக்குத்தான் பேசுவானுங்க. அப்புறம் எதுக்கு என்கூ

மிஸ்டு கால்

டப் பேசுற? அவன்கூடவே பேசு.'' என்னத்தப் பேச?!

• 'கிருஷ்ணா டாவின்சி இறந்துவிட்டார்’ என்ற செய்தி தெரிந்து அரை மணி நேரம் கழித்து என் செல்போன் அடித்தது. எடுத்தால், 'கிருஷ்ணா டாவின்சி காலிங்.’ ஒரு கணம், கிருஷ்ணா இறக்கவில்லை, இருக்கிறார் என நான் நம்ப விரும்பினேன். ''கிருஷ்ணா தவறிட்டார்'' என அவருடைய மனைவியின் சகோதரி சொன்னார்.

• உதவி இயக்குநராகப் போராடி ஒரு படம் இயக்கும் தருணத்தில் இறந்துபோன தாயுமானவன், மருத்துவமனை யில் என் கரம்பற்றி, 'ஒரு லைன் இருக்கு சார்...’ என்றபடி சொன்ன 'ஏழேழு ஜென்ம’க் கதையை இந்த ஜென்மத்தில் மறக்க முடியாது. மரணத்தின் வாசலில் நின்றுகொண்டு, தன் கற்பனையை உலகத்துக்குச் சொல்ல விரும்பிய ஒரு கலைஞனின் பூப்பெய்தாத கனவு அது. அவருடைய நம்பரை அவர் பெயரில்தான் இப்போதும் சேமித்து வைத்திருக் கிறேன். அவரது மனைவி பேசுவார்... 'தாயுமானவன் காலிங்’.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism