Published:Updated:

பேயோன் பக்கம்!

பேயோன் பக்கம்!

பேயோன் பக்கம்!

பேயோன் பக்கம்!

Published:Updated:
பேயோன் பக்கம்!
##~##

ன் பெயர் பேயோன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆமாம். பேயோன். கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? இல்லையா? சரி, இனி வரும் வரிகளில் அந்தக் குறை தீரட்டும். நான் ஒரு பிரபல தமிழ் எழுத்தாளன். இலக்கியம் எனது துறை. 'சீன இலக்கிய வரலாறு’ முதல் '50 வகை பஜ்ஜிகள்’ வரை பல தலைப்புகளில் நூற்றுக்கணக்கில் புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். படிக்க நன்றாக இருக்கும். நான் கடைசியாக எழுதிய 'ஈமு வளர்ப்பும் குழந்தை வளர்ப்பும்: ஓர் ஒப்பாய்வு’ என்ற நூல் பல பிரதிகள் விற்றது.

பெற்ற விருதுகளுக்கும் பஞ்சமில்லை. ஒருவன் தொடர்ந்து அற்புதமாக எழுதிக்கொண்டு இருந் தால், உலகம் அவனை விருதுபடுத்தாமல் விடுமா? கடைசியாக வாங்கியது ஊரப்பாக்கம் நான்காவது குறுக்குத் தெரு வாசகர் வட்ட இலக்கிய விருது (1,000 ரூபாய் 'அவுட்ஸ்டேஷன் செக்’ கொடுத்தார்கள்)!

பேயோன் பக்கம்!

நான் வசிப்பது வடபழனியில் உள்ள ஒரு சொந்த வீட்டில். எனக்குத் திருமணமாகி அதன் தவிர்க்க முடியாத விளைவாக, ஒரு மனைவியும் 15 வயதுக்கார மகன் ஒருவனும் இருக்கிறார்கள். மனைவியுடன் அடிக்கடி பிரச்னைகள் வரும். மகன் கொஞ்சம் பரவாயில்லை. உண்மையில் குடும்ப உறுப்பினர்களைவிட ரசிகர்களே எனக்கு அதிகம். ஃபேஸ்புக்கில் உள்ள 'ரைட்டர் பேயோன் பேரவை’ ஒன்று போதும் உதாரணத்துக்கு. என்னைப் பற்றிச் சொல்ல இவ்வளவுதான் இருக்கிறது. என் ஆளுமைக்கு வருவோம்...

நான் உலக சினிமாவின் தீராத பக்கங்களை எச்சில் தொட்டுப் புரட்டுகிறவன். எத்தனை புத்தகங்கள் எழுதுகிறேனோ, அத்தனை படங் களைப் பார்த்துவிடுவேன். எனது ஒரு கண்ணைப் புத்தகமாகவும் இன்னொரு கண்ணை உலக சினிமா டி.வி.டி-யாகவும் கற்பனை செய்து பாருங்கள். இதுதான் என் முகம். புகைப்படத்தில் கொஞ்சம் வேறு மாதிரி தெரிவேன்.

பேயோன் பக்கம்!

திரைப்படங்களுக்குத் திரைக்கதை, வசனம் எழுதுவது என் பொழுதுபோக்கு. ஆனால், கடைசியாக நான் வசனம் எழுதிய எட்டு படங்கள் ஓடாநிலை எய்தியதால் தற்போதெல்லாம் பட வாய்ப்புகள் குறைவாகவே வருகின்றன.

அப்புறம் இயற்கை! எனக்குப் பூக்களைப் பிடிக்கும். எல்லோருக்கும்தானே அப்படி ஆகும் என்கிறீர்களா? ஆனால், பூக்களுக்கும் என்னைப் பிடிக்குமே.

பேயோன் பக்கம்!

பூக்களின் சிநேகம்தான் எனக்குப் பட்டாம் பூச்சிகளின் நட்பைச் சம்பாதித்துக் கொடுத்தது. அண்ணா நகர் கோபுரப் பூங்காவில் கொசு அதிகம் இல்லாத ஒரு மூலையில் கையில் புத்தகத்துடன் அமரும்போது, என் தோளில் உரிமையோடு வந்து உட்காருவது பட்டாம்பூச்சிகளே. குறிப்பாக, நான் பூப்போட்ட சட்டை அணியும் நாட்களில்!

நான் விகடனுக்கு எழுத ஆரம்பித்ததே ஒரு சுவாரஸ்யமான கதை. விகடன் பத்திகளைப் படித்து, அது மாதிரி எழுதிப் பார்த்திருக்கிறேன். ஆனால், சாட்சாத் விகடன் பத்தியே எழுதுவது இதுதான் முதல் முறை. இலக்கியத் துறைமார்கள் பலர் விகடனில் எழுதுகிறார்கள். நான் மட்டும் எழுதாதிருந்தால் என்னை இலக்கியவாதியாக மதிக்க மாட்டார்கள் என்று போன வாரம் கவலை தொற்றியது.

கார்ட்டூன் பார்ப்பீர்களா? அதுபோல அடுத்த நொடி விகடன் ஆபீஸில் இருந்தேன். ஆசிரியர் குழுவிடம் என் உள்ளக் கிடப்பைச் சொன்னேன். 'உங்களைப் பற்றி விசாரித்தோம். எழுத்தாளர் என்று உறுதிப்படுத்தினார்கள். இரண்டு வாரம் எழுதுங்கள். என்ன ஆகிறதென்று பார்ப்போம்!’ என்றார் ஆசிரியர். அடுத்து என்ன, ஒப்பந்தக் கடிதத்தில் ஆட்டோகிராஃப் போட்டுவிட்டு இதை எழுத ஆரம்பித்துவிட்டேன். கொஞ்ச நேரத்தில் முடித்து அனுப்பிவிடுவேன்.

- புரட்டுவோம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism