Published:Updated:

இதுதான்.. இதற்குத்தான்.. இப்படித்தான்!

ஆன்லைனில் ரேஷன் கார்டு?!

இதுதான்.. இதற்குத்தான்.. இப்படித்தான்!

ஆன்லைனில் ரேஷன் கார்டு?!

Published:Updated:
##~##

எம்.சீனிவாசன், சிந்தல்பாடி.

''நான் கிராமப்புறத்தில் இருந்து வந்தவன். சென்னையில் இருக்கும் பொறியியல் கல்லூரியில் படிக்கிறேன். நான் சரியாக ஆங்கிலம் பேசவில்லை, மாடர்னாக இல்லை என்று என்னுடன் படிப்பவர்கள் கிண்டல் செய்கிறார்கள். இதனால் எனக்குத் தாழ்வுமனப்பான்மை அதிகமாகிவிட்டது. நான் மாடர்னாக என்ன செய்ய வேண்டும்?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''இந்த உலகத்தில் யாரும் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு வருவது இல்லை சீனிவாசன். மிக நன்றாக ஆங்கிலம் பேசுகிறவர்கள்கூட ஆரம்பத்தில் தட்டுத்தடுமாறித்தான் பேசியிருப்பார்கள். நன்றாக வகுப்பு எடுக்கும் ஆசிரியர்கூட முதல்முறையாகப் பாடம் நடத்தும்போது சொதப்பித்தான் இருப்பார். இவை எல்லாம் இயல்புதான். அதற்காகப் போட்டியில் கலந்துகொள்ளாமலேயே, தோற்றுவிட்டதாக முடிவு எடுக்கக் கூடாது. ஆங்கிலம் என்பது அறிவு அல்ல; அது ஒரு மொழிதான். ஆங்கில மொழியில்

இதுதான்.. இதற்குத்தான்.. இப்படித்தான்!

உங்களுக்கு என்ன மாதிரி பிரச்னைகள் வருகின்றன என்று சோதித்துப் பாருங்கள். படிப்பது, எழுதுவது, கவனிப்பது, இலக்கணம் போன்றவற்றில் எதில் குறை இருக்கிறதோ, அதைச் சரிசெய்துகொள்ளுங்கள். சில கஷ்டங்கள் வரும்போது அவமானமோ, வெட்கமோ வந்தால் சோர்ந்துபோய்விடாதீர்கள்.

நீங்கள் உங்களை முழுமையாக நம்புங்கள். மாடர்னாக இல்லை என்று மற்றவர் கள் சொல்வது இருக்கட்டும். நீங்களே அப்படி நினைப்பதுதான் உங்களின் தாழ்வு மனப்பான்மை. யாருடனும் உங்களை ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். நீங்கள் நீங்க ளாகவே இருங்கள். மற்றவர்களைப் போல இருக்க வேண்டும் என்று முயற்சி செய்யாதீர்கள். 10 ரூபாய்க்கும் காபி கிடைக்கிறது. 100 ரூபாய்க்கும் காபி கிடைக்கிறது. 100 ரூபாய்க்குக் காபி குடித்தால், அதற்குப் பெயர் வசதி. மாடர்ன் இல்லை. அதை நினைத்து நீங்கள் குழம்ப வேண்டாம். ஆசைகள், கனவுகள், லட்சியங்கள் உங்களுக்காகவே காத்திருக்கின்றன. அவற்றை எட்டிப்பிடிக்க முயற்சி செய்யுங்கள். முயற்சி செய்யாமலேயே ஆசைப்பட்டது கிடைக்கவில்லை என்று வருந்தாதீர்கள். நம்பிக்கையோடு செயல்படுங்கள். படிப்பும் உழைப்பும் நிச்சயம் உங்களை உயர்த்தும். வாழ்த்துகள்!''

கே.கணேஷ், சென்னை-18.

''சென்னையில் அதிகம் பொதுக் கழிப்பறைகளே இல்லை. தேவை இருந்தும் அதைச் செய்து முடிக்காத மாநகராட்சி மீது வழக்கு போட முடியுமா?''

''தாராளமாக வழக்கு போடலாம் கணேஷ். நீங்கள் எந்தப் பகுதியில் வசிக்கிறீர்களோ... அந்தப் பகுதியில்

இதுதான்.. இதற்குத்தான்.. இப்படித்தான்!

எத்தனை கழிப்பறைகள் இருக்கின்றன. இன்னும் எத்தனை கழிப்பறைகள் அமைத்தால் போதுமானதாக இருக்கும் என்று விவரக் குறிப்புகள் தயாரிக்க வேண்டும். எந்தப் பகுதியில் கழிப்பறைகள் கட்டினால் மக்கள் பயன் பாட்டுக்கு வசதியாக இருக்கும் என்ற தகவலும் தேவை. இந்தத் தகவல்களைச் சேகரித்ததும் பொது நல வழக்கு போடலாம். ஆனால், வழக்கு போடும் நபர் பொது நல நோக்கத்துக்காக மட்டுமே வழக்கு போட வேண்டும். விளம்பர நோக்கத்துக்காகவோ, பொறுப்பில், பதவியில் இருக்கும் சிலரைக் காயப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அவருக்கு எதிராகச் செயல்பட வேண்டும் என்பதற்காகவோ வழக்கு போடக் கூடாது. பொது நல வழக்கு போடும் நபர் அதற்குத் தகுதி உடையவராகவும் நியாயமானவராகவும் இருக்க வேண்டும். மக்கள்தொகை, இருக்கும் கழிப்பறைகள் எண்ணிக்கை, தேவைப்படும் கழிப்பறைகளின் எண்ணிக்கை, கழிப்பறைகள் எங்கெல்லாம் இல்லை என்று ஆய்வு செய்த தகவல்களைக்கொண்டு வழக்கறிஞரைச் சந்திக்கலாம். இதுகுறித்து ஏதேனும் புகார் கொடுத்திருந்தால், அதன் நகலை இணைத்துத் தரலாம். அது வழக்குக்கு இன்னும் கொஞ்சம் வலிமை சேர்க்கும்!''

வி.ப்ரியா, கரூர்.

''நான் ஒரு கல்லூரி மாணவி. என் சீனியர் ஒருவரைக் காதலிக்கிறேன். அவர் எல்லாப் பெண்களுடனும் இயல்பாகப் பேசுகிறார். ஆனால், இதை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை. என்னிடம் மட்டுமே நீங்கள் பேச வேண்டும் என்று அவருடன் வாக்குவாதம் செய்கிறேன். 'இவ்வளவு பொசசிவ்னெஸ் தப்பு. இப்படியே இருந்தால் நம் காதலை முறித்துக்கொள்ளலாம்’ என்கிறார் அவர். காதலர் மேல் உயிராக இருப்பதைத் தப்பாக எடுத்துக்கொள்கிறாரே? பொசசிவ்வாக இருப்பது அவ்வளவு தப்பா?''

இதுதான்.. இதற்குத்தான்.. இப்படித்தான்!

''அளவுக்கு அதிகமான ஈர்ப்பும் அன்பும் பிரச்னைகளுக்குத்தான் வழிவகுக்கும் ப்ரியா. எந்தப் பொருளும் நமக்கு மட்டுமே சொந்தம் என்று வாதாட முடியாது. இப்போதைய சமூகச் சூழலில் பலருடன் பேசுவதும் பழகுவதும் தவிர்க்க முடியாதது. இதை நீங்கள் கண்டிப்பாகப் புரிந்துகொள்ள வேண்டும். உங்கள் காதலர் உங்களுடன் சரியாக நடந்துகொள்கிறாரா என்று பாருங்கள். அதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். இப்படி நீங்கள் பொசசிவ்வாக இருப்பதற்கு உங்கள் அடிப்படை மனநிலை மட்டுமே காரணம். 'எனக்கு மட்டுமே சொந்தம்’ என்று உரிமை கொண்டாடுவது தவறு இல்லை. அது உங்கள் அதீத அன்பின் அடையாளம்தான். ஆனால், அந்த அதீத அன்பு எந்த விதத்திலும் பிறரைப் பாதிக்கவோ, காயப்படுத்தவோ கூடாது. உங்களை நீங்கள் மாற்றிக்கொண்டால் உங்கள் இருவரின் எதிர்காலமும் சிறப்பாக அமையும்.''

செ.திவான், திருச்சி-2.

''குடும்ப அட்டைக்கு இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என்று சொல்கிறார்களே... எப்படி விண்ணப்பிப்பது?''

இதுதான்.. இதற்குத்தான்.. இப்படித்தான்!

''குடும்ப அட்டைக்கு இணையத்தில் விண்ணப்பிக்க முடியாது. ஆனால், விண்ணப்பப் படிவத்தை இணையத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். படிவத்தை நிரப்பி, அதனுடன் இருப்பிட முகவரிக்கான சான்றிதழ் நகலை இணைத்துச் சமர்ப்பிக்க வேண்டும். மாநகரங்களில் உணவுப் பொருள் வழங்கல் உதவி ஆணையர் அலுவலகத்திலும் மாவட்டங்களில் வட்டாட்சியர் அலுவலகத்திலும் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பித்த 60 நாட்களுக்குள் குடும்ப அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த நடவடிக்கைகளுக்கு ஐந்து ரூபாய் மட்டுமே கட்டணம். நான் ரேஷன் கடையில் எந்தப் பொருளும் வாங்கப்போவது இல்லை; இருப்பிட அடையாளத்துக்காக மட்டுமே குடும்ப அட்டைக்காக விண்ணப்பிக்கிறேன் என்று சொல்பவர்கள், தட்கல் முறையில் விண்ணப்பித்தால், 10 நாட்களில் 'நோ கமாடிட்டி ரேஷன் கார்டு’ பெற்றுக்கொள்ளலாம். இதற்கு 100 ரூபாய் கட்டணம். விண்ணப்பப் படிவத்தை www.consumer.tn.gov.in என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism