Published:Updated:

இதுதான்... இதற்குத்தான்... இப்படித்தான்!

பிரித்துவிடுமா ஃபேஸ்புக்?

இதுதான்... இதற்குத்தான்... இப்படித்தான்!

பிரித்துவிடுமா ஃபேஸ்புக்?

Published:Updated:
##~##

பெயர் வேண்டாமே... ப்ளீஸ்.

 ''எனக்குத் திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகின்றன. நானும் என் கணவரும் எந்த விஷயமானாலும் தினமும் பகிர்ந்துகொள்ளாமல் தூங்கச் செல்ல மாட்டோம். எங்களுக்குள் அப்படி ஒரு புரிதல் இருந்தது. ஆனால், சமீப காலமாக என்னவர் இரவில் தனியாக செல்போனில் ரொம்ப நேரம் பேசுகிறார். ஃபேஸ்புக்கில் நள்ளிரவு வரை சாட்டிங் செய்கிறார். என்னால் சந்தேகப்படவும் முடியவில்லை. அதே சமயம், கேட்காமலும் இருக்க முடியவில்லை. இப்போது நான் என்ன செய்ய வேண்டும். என் குழப்பத்துக்கு விடை கூறுங்கள்!''

''எப்போது மனைவிக்குத் தெரிய வேண்டாம் என்று உங்கள் கணவர் விஷயங்களை மறைக் கிறாரோ, அப்போதே ஏதோ ஒரு தவறு இருக் கிறது என்று அர்த்தம். இப்படி ஒரு சந்தேகம் எழுந்துவிட்டால், அதைக்

இதுதான்... இதற்குத்தான்... இப்படித்தான்!

கேட்பதா வேண்டாமா என்று குழம்ப வேண்டாம். கேட்பதன் மூலம் தான் சந்தேகத்தைப் போக்கிக்கொள்ள முடியும். 'நீங்கள் இப்போதெல்லாம் என்னிடம் எதையும் பகிர்ந்துகொள்வது இல்லை. எனக்குக் கஷ்டமாக இருக்கிறது!’ என்று மனம் திறந்து கேளுங்கள். மென்மையாகப் பேசுங்கள். பேசுவதுதான் எல்லாப் பிரச்னைகளையும் தீர்க்கும். அவர் சொல்லும் பதிலில் இருந்து, அவர் எந்த நிலை யில் இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். தனிமையில் அதிக நேரம் செலவழிக்கிறார் என்றால் அவருக்கு ஏதோ ஒரு கிக் கிடைத்திருக்கும். அது என்னவென்று கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு அவரின் செயல் பிடிக்கவில்லை என்பதை உணர்த்துங்கள். சந்தேகத் துக்கு உரிய உறவு இருந்தால், அதை முளையிலேயே கிள்ளி எறியுங்கள். எதுவாக இருந்தாலும் உங்கள் கணவரை எதிர்க்காதீர்கள். பிரச்னையை எப்படி எதிர் கொள்வது என்று மட்டும் பாருங்கள். தேவைப்பட்டால் கவுன்சிலிங் செய்பவர்களைத் தொடர்புகொள்ளுங்கள்!''

கே.செல்வமணி, சேலம்-4

''என் குழந்தையைப் பள்ளியில் சேர்க்கும்போது சாதிப் பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை. அதற்குச் சட்டத்தில் இடம் இருக்கிறதா?''

இதுதான்... இதற்குத்தான்... இப்படித்தான்!

''பள்ளிகளில் சாதிப் பெயரைக் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. அதற்குச் சட்டத் தில் அனுமதியும் உண்டு. சாதியும் இல்லை. மதமும் இல்லை என்று தாராளமாக விண்ணப் பத்தில் குறிப்பிடலாம். எந்த மாநிலத்தை / நாட்டைச் சார்ந்தவர் என்பதில் மட்டும் தமிழன், இந்தியன் என்று நீங்கள் குறிப்பிட்டால் போதுமானது. பள்ளி நிர்வாகம் உங்கள் சாதிப் பெயரைக் கேட்டால்கூட, நீங்கள் சொல்லாமல் இருக்கலாம். பொதுவாக, சாதிப் பெயரைக் குறிப்பிடுவது ஸ்காலர்ஷிப், கட்டணம் போன்ற சலுகை களுக்காகவே பயன்படும். சாதி இல்லை என்று குறிப்பிடும்போது, உங்களுக்கு சாதிக்கு உரிய சலுகைகள் கிடைக்காது. நீங்கள் பொதுப் பிரிவினராகக் கருதப்படுவீர்கள். இப்போது எல்லாம் பலர் இப்படி சாதியின் பெயரைக் குறிப்பிடாமல் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அந்தப் பட்டிய லில் நீங்களும் இணைவதற்கு வாழ்த்துகள் செல்வமணி!''

சா.கோபி, சித்தூர்.

''20 வயது ஆன பிறகும் எனக்கு பேபி சோப் பயன்படுத்தவே பிடிக்கிறது. அப்படிப் பயன்படுத்தலாமா?''

இதுதான்... இதற்குத்தான்... இப்படித்தான்!

''பேபி சோப் பயன்படுத்துவது தவறு என்று சொல்ல முடியாது. தோலில் ஈரப்பதத்தைத் தக்கவைக்க பேபி சோப்பில் கிளிசரின் இருக்கும். பொதுவாக, இளம் ஆண்களுக்கு எண்ணெய் சுரக்கும் தன்மை அதிகம் இருக்கும். சில பேபி சோப்புகள் தோலில் இருக்கும் எண்ணெய்த் தன்மையைக் குறைக்காது. மேலும் சூரிய ஒளி, செயற்கை விளக்குகள், கம்ப்யூட்டர், டி.வி. போன்றவற்றில் இருந்து புற ஊதாக்கதிர்கள் வெளிப்படும். கிளிசரின் கொண்ட பேபி சோப்புகள் இவற்றை உறிஞ்சும் தன்மை கொண்டவை. இதனால் தோல் சற்று கறுப்பாகும். சில பேருக்கு வெயிலால் ஒவ்வாமைகூட ஏற்படலாம். எனவே, உங்கள் சருமத்துக்கு கிளிசரின், மஞ்சள், சந்தனம், எலுமிச்சை இல்லாத, அதீத நறுமணம் இல்லாத சோப்பைப் பயன்படுத்துவதே சிறந்தது!''

எம்.பி.சித்ரா, காவேரிப்பாக்கம்.

''நண்பர்களும் தோழிகளும் 'உனக்கு நல்ல குரல் வளம் இருக்கிறது. டி.வி., சினிமாவில் டப்பிங் பேசு’ என்கிறார்கள். எனக்கும் டப்பிங் பேச ஆசைதான். இதற்கு என்ன செய்ய வேண்டும்?''

இதுதான்... இதற்குத்தான்... இப்படித்தான்!

''எல்லோருக்கும் இனிமையான குரல் வாய்ப்பது இல்லை. உங்களுக்கு நல்ல குரல் வளம் இருப்பது இனிய வரம். ஆனால், குரலின் இனிமை மட்டும் டப்பிங் பேசப் போதுமானது அல்ல. டப்பிங் பேச பேச்சுத்திறன் மிக முக்கியம். அதாவது, ஏற்ற இறக்கங்க ளோடு பேசுவதும் உச்சரிப்புப் பிழை இல்லாமலும் பேச வேண்டும். ல, ள, ழ, ர, ற போன்ற எழுத்துகளைச் சரியாக உச்சரிக்கப் பழகிக்கொள்ளுங்கள். சில இடங்களில் டப்பிங் பேசும்போது எமோஷன் அதிகம் தேவைப்படும். இதைப் பழக்கத்தின் அடிப்படையிலோ அல்லது கிரியேட்டிவிட்டியிலோ கொண்டுவந்துவிடலாம். உங்களுக்கு முழு ஈடுபாடு இருந்தால் இவற்றை எளிதில் கற்றுக்கொள்ளலாம். நீங்கள் உடனடியாக டப்பிங் யூனியனில் உறுப்பினராகச் சேருங்கள். 75 ஆயிரம் ரூபாய் பணம் கட்ட வேண்டி இருக்கும். உறுப்பினர் ஆன பிறகு, வாய்ப்புகளைத் தேட ஆரம்பியுங்கள். யூனியனில் டப்பிங் வாய்ப்பு தேடுபவர் களை சில பிரதிநிதிகளைப் பார்க்கச் சொல்வார்கள். அவர்களைச் சந்தித்தால், நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும். ஆரம்பத்தில் பத்து பேருடன் கூட்டமாகச் சேர்ந்து நின்று பேசுவதைப் போல வாய்ப்பு கிடைக்கும். அதற்காகச் சோர்ந்து போகாமல் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். விக்ரம்கூட டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்தவர்தான். டப்பிங்கை நீங்கள் பகுதி நேரப் பணி யாகவோ, முழு நேரப் பணியாகவோ கூடச் செய்யலாம். தொலைக்காட்சிகளில்கூட வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன. வாழ்த்துகள்!''