இலக்கியப் பேச்சாளர், அரசியல் சொற்பொழிவாளர் எனப் பல பரிமாணங்களைக்கொண்ட நெல்லை கண்ணன் தன்னுடைய சொந்த ஊரான திருநெல்வேலியின் நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்.

''ஒரு தடவை, நெல்லையப்பர் கோயில் பட்டர் ஒருத்தர் கோயில்ல நெல்லைக் காயப்போட்டுட்டு ஊருக்குப் போய் இருக்கார். அந்த நேரம் பார்த்து மழை வந்திடுச்சு. பட்டர் பதறிப்போய்வந்து பார்த்தா, நெல்லைக் காயப்போட்டு இருந்த இடத்தில் மட்டும் மழை பெய்யலை. 'நெல்’லை வேலியிட்டு காத்ததால திரு'நெல்வேலி’னு பெயர்க் காரணம் வந்ததா சொல்வாங்க. திருநெல்வேலி டவுனைச் சுத்தி நயினார்குளம் ரோடு, வாகையடி முக்கு, தொண்டர் சன்னதி, சந்திப் பிள்ளையார் கோயில், காட்சி மண்டபம்னு சின்னச் சின்ன ஊர்கள் இருந்தன. நாலு பக்கமும் நெல் விளையும் வயல்களால் சூழப்பட்டு இருந்ததாலயும் திருநெல்வேலினு பேரு வந்துச்சுனு சொல்வாங்க.

பிறந்து, வளர்ந்து இங்கேயேதான் வாழ்ந்துட்டும் இருக்கேன். அப்போ திருநெல்வேலியில், எங்க தளவாய் அரண்மனை, கள்ளபிரான், பிள்ளை வீடுனு இந்த மூணு வீடுங்கதான் பெரிசா இருக்கும். அதனால, எங்களைப் 'பெரிய வீட்டுப் பிள்ளை’னு கூப்பிடுவாங்க. பால்யத்துல என்னோட நேரத்தை அதிகமா செலவு செஞ்சது குறுக்குத் துறை தாமிரபரணி ஆற்றுக் கரையிலேயும் நெல்லையப்பர் கோயில்லேயும்தான். தாமிரபரணி ஆற்றுக்குப் போற வழியில மருதமரம், ஆலமரம், வேப்பமரம்னு மரங்களா இருக்கும். ஆத்துல வட்டப்பாறைனு ஒரு இடம் உண்டு. கரையில் இருந்து வட்டப்பாறைக்கு நீச்சல் அடிச்சுப் போறது ரொம்பக் கஷ்டம். ஏன்னா, வட்டப்பாறையைச் சுத்தித் தண்ணி சுழல் மாதிரி இழுக்கும். ரெண்டு, மூணு மாசம் நீச்சல் பழகி, வட்டபாறை வரைக்கும் போனாலே பெரிய சாதனைதான். வருஷத்துக்கு ரெண்டு தடவை வெள்ளம் வரும். அந்தச் சமயம் ஆத்து நடுவில உள்ள கோயில்ல இருக்கிற முருகன்சிலை தண்ணிக்குள்ள முங்கிடும்.

நெல்லையப்பர் கோயிலை அழகா, கலைநயத்தோட கட்டி இருப்பாங்க. அங்கே பூஜை பண்றவர் பேரு அமாவாசை சாமியார். அவர் குளிக்க மாட்டார். காலையில எழுந்திரிச்சு வெயில்ல போய்க் கொஞ்சநேரம் படுத்துட்டு துணி மாத்திட்டுவந்து பூஜை பண்ணுவார். கோயிலின் உள்ளே பொற்றாமரைக்குளம், கருமாரி தீர்த்தம்னு ரெண்டு குளங்கள் உண்டு. அங்கேதான் நீச்சல் பழகினேன். அந்தக் கோயில்ல ஆனிமாசம் தேர்த் திருவிழாவும் ஐப்பசியில் திருக்கல்யாணமும் நடக்கும். தேர் இழுத்து நிலைக்குக்கொண்டுவர 15 நாட்கள் ஆகும். ஏன்னா, அப்போ சரியான ரோடு வசதிக் கிடையாது.

ஊர்ல பேலஸ், ராயல், வேல்ஸ், பாப்புலர்னு நாலு தியேட்டர்கள் உண்டு. நான் படம் பார்க்கப்போனா வீட்டுல வேலை பார்க்கிறவங்களைக் கூடவே அனுப்பி வெப்பாங்க. திருநெல்வேலியில முதன் முதலா சப்பாத்தியை அறிமுகப்படுத்தியது 'காந்திமதி லஞ்ச் ஹோம்’. அப்புறமா 'சப்பாத்திக் கடை’னே பேர் மாறிடுச்சு.

வெளியூரில் இருந்து சொக்கம்பட்டிக்குவந்து, அப்புறம் டவுனுக்கு உள்ளேயே வெளிச்சம் இல்லாத இடத்துல ஆரம்பிச்சதுதான் 'இருட்டுக் கடை அல்வா’. இப்போ அந்தக் கடைக்கு எவ்ளோ வருமானம் வந்தாலும் அதே பழைய மரக் கல்லாப்பெட்டியும் அதுக்கு மேலே ஒரு குண்டு பல்பும்தான் எரிஞ்சுட்டு இருக்கு. ஆனாலும் போலீஸ் பாதுகாப்போட வியாபாரம் நடந்துட்டுதான் இருக்கு.

அப்போது எல்லாம் ராத்திரி ஆச்சுன்னா முக்குக்கு முக்கு உட்கார்ந்து விடிகாலை மூணு மணி வரைக்கும் ஊர்க்கதையில் இருந்து உலகக்கதை வரைக்கும் பேசுவாங்க. அப்போ எஸ்.எஸ்.எல்.சி. படிச்சாலே எம்.ஏ. படிச்ச அளவுக்கு மதிப்பு உண்டு. இருந்தாலும், வெளியூருக்கு யாரும் வேலைக்குப் போக மாட்டாங்க. 'ஏலேய் படிச்சு முடிச்சாச்சு... வேலைக்குப் போகலையா?’னு கேட்டா, 'என்னத்தையோ ஒரு வேலை பார்த்து வயித்தைக் கழுவிட்டு இங்கேயே கெடக்க வேண்டியதுதான். எங்க போனாலும் நம்ம ஊரு மாதிரி வருமா’னு எதிர்க் கேள்வி கேட்பாங்க.

புதன், சனிக்கிழமைனா ஊர்ல எல்லோரும் எண்ணெய் தேய்ச்சுக் குளிச்சு, களி உருண்டை, உளுந்த வடை செஞ்சு சாப்பிடுவாங்க. எஸ்.எஸ்.எல்.சி. வரை பேச்சுப்போட்டியில நான்தான் முதல் பரிசு வாங்கினேன். அதுக்குக் காரணம் பாஸ்கர் வாத்தியார்தான். இப்போ திருநெல்வேலியைச் சுத்தி இருந்த மரங்கள், வயல்கள் எல்லாத்தையும் அழிச்சுட்டுக் கட்டடங்களா கட்டிட்டாங்க. தாமிரபரணியில தண்ணி எடுத்துக் குடிச்ச நாங்க இப்போ மினரல் வாட்டர் குடிக்கிறோம். 'நீ வெளியூருக்குப் போனால்தான் உனக்கு இருக்கிற திறமைக்குப் பெரிய ஆளா வர முடியும்’னு எல்லோரும் சொன்னாங்க. ஆனாலும் நான் பிடிவாதமா இங்கேயே இருந்துட்டேன். இன்னைக்கு எத்தனையோ மீடியாக்கள், நிறுவனங்கள் பெரிய வாய்ப்புத் தர்றோம்னு சென்னைக்குக் கூப்பிடுறாங்க. ஆனால், எனக்கு என்னோட ஊர்ல இருக்கிறதுதான் சந்தோஷமா இருக்கு!''

- ஆ.கோமதிநாயகம்

படங்கள்: எல்.ராஜேந்திரன்

அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து, யோகா செய்துவிட்டு காலை 7.30 வரை நாளிதழ்கள், வார, மாத இதழ்கள் வாசிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

தினமும் இவருடைய 'tamizhkadal blogspot.com' என்ற வலைப்பூவில் தமிழ்மொழிக் குறித்த கட்டுரைகள் எழுதிவருகிறார்.

வீட்டுக்குவரும் அனைவருக்கும் இருட்டுக்கடை அல்வா வழங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இவருடைய காரிலும் அல்வா எப்போதும் ஸ்டாக் இருக்கும்.

ஷாலு, ராஜா என இரண்டு நாய்கள் வளர்க்கிறார். தினமும் பயிற்சி அளிக்க பயிற்சியாளர் ஒருவர் உள்ளார்.

வீட்டைச்சுற்றி நிறைய மரங்கள் இருப்பதால் இவர் வீட்டில் குருவிகளின் சத்தம் எப்போதும் இருக்கும்.