காதல் கவிதைகள்

தண்டவாள இணை போல்
இடைவெளிவிட்டு நடப்பவள்
விளக்கெரியாத தெருவில்
என்னோடு ஒட்டி என் கையை
இறுகப் பிடித்து நடக்கிறாய்.
இருட்டு என்றால் உனக்கு
என் மீது அவ்வளவு பிரியமா?

உன்னைப் பிரிந்து தவிக்கும்
வேதனையின் சுகத்தை
அறியவாவது நீ
நான் ஆக வேண்டும்.

திருமணத்திற்குப் பின்பு
உனக்கு இரண்டு குழந்தைகள்
வேண்டும் என
உத்தரவிடுகிறாய்
ஏன், இப்போதே
கொடுக்கிறேனே
என்றால், எப்படியும்
ஒன்பது மாதம் ஆகும் என்கிறாய்.

நெற்றியில் கூந்தல் கற்றை
அழகாய் விழக் குனிந்து
நம் வீடென்று நீ கட்டிய
மணல் மேட்டை
மிதித்து ஓடும் சிறுவன்
என் சாயல்தான். ஆனால்,
அவன் அம்மாவை எனக்கு
சத்தியமாகத் தெரியாது.

தாவணி வயதிலும்
பென்சில் சீவும்போது
எனக்கான உன் இதழ்களிடை
நாக்கு வெளிவரும்
அழகு அற்புதம்!
தற்செயல் ஸ்பரிசங்களால்
பரவசமூட்டும் உன்
மென்விரல்களை
அரை பிளேடு லேசாய்க் கீற
என்னைச் சந்திக்கும் ஆவலில்
எட்டிப் பார்க்கிறது உன் ரத்தம்!

உன்னைப் பிரிந்த பின்னரும்
நாம் சந்தித்த தேதியையும்
பிரிந்த தேதியையும்
மறக்க முடியவில்லை
இப்போது எந்தத் தேதி
எதற்கு என நினைவில்லை.

'என்னை அழை’ என
குறுஞ்செய்தி அனுப்புகிறாய்
என்னவென்று அழைக்க?
அதை மட்டும் என்
தலையில் கட்டிவிட்டாய்.

நம்மை யாரும் பிரிக்க முடியாது
என்று பல முறை சொல்வாய்
இன்று நீயே நம்மைப் பிரித்தாய்
யாரும் என்பதில் நீயும் நானும்
சேர்த்தியில்லை என உணர்த்தி.

சீரியல் உணர்ச்சி

'சாமந்தி’ சீரியலில் உருக்கமான ஒரு காட்சி பார்த்தேன். ஒரு பெண்ணும் அவள் மகனும் பேசுகிறார்கள்:

'அம்மா, பாட்டி செத்தப்ப ஏன்மா அப்பா மட்டும் அழுதாரு? நீ ஏன் அழல?'

'என்னவோ அழல...'

'அதான் ஏன்னு கேக்குறேன்.'

'அழுகை வர்லடா.'

'ஏன் வர்ல?'

இங்கே அம்மா திணறுகிறாள். பிறகு அழுகை குமுறி வெடிக்கச் சொல்கிறாள்: 'எனக்குப் பாட்டியப் புடிக்காதுடா!'

அம்மாவும் மகனும் கட்டிக்கொண்டு அழுகிறார்கள். மனதைத் தொட்ட காட்சி. இதற்குத்தான் சீரியல் பார்ப்பது.

வாசகர்களுக்கு அறிவுரை

முக்கால் உடல் சோபாவுக்கு வெளியே சரிந்த நிலையில் மகன் டி.வி. பார்த்துக்கொண்டிருந்தான். நான் அந்தப் பக்கம் வந்தவுடன் சட்டென்று ஒழுங்காக நிமிர்ந்து உட்கார்ந்தான். நான் சொன்னேன், 'என்னைப் பார்த்தவுடன் நிமிர்ந்து உட்காராதே. பொதுவாகவே நிமிர்ந்து உட்காரு.’ இதையேதான் என் வாசகர்களுக்கும் சொல்கிறேன். என்னைப் படிக்கும்போது மட்டும் சந்தோஷமாக இருக்காதீர்கள். பொதுவாகவே சந்தோஷமாக இருங்கள்.

வாசகி கடிதமும் எனது பதிலும்

ஐயா,

நீங்கள் பல விஷயங்களைக் குறித்து அழகாக எழுதுகிறீர்கள். ஆனால் உங்கள் பல படைப்புகளில் காணப்படும் ஆணாதிக்க உணர்வு எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. உங்கள் மீதிருந்த மரியாதையை இழந்துவிட்டேன். இனிமேலாவது உங்களை மாற்றுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

எஸ்.மல்லிகா,
வணிகவியல் 3ஆம் ஆண்டு,
அரசு கலைக் கல்லூரி.

பிரிய மல்லிகா,

உங்கள் கடிதம் உருக்கமாக இருந்தது. என்னைப் போன்ற படித்த எழுத்தாளர்களிடம்கூட இப்படி ஆணாதிக்கப் போக்கு நிலவுவது வருத்தமளிக்கிறது. குறிப்பாக என்னைப் போன்றவர்கள் பெண் ஆதரவு நிலை எடுப்பதுபோல் வேடமணிந்து சொந்த வாழ்க்கையில் பெண்களைக் கிள்ளுக் கீரையாக நடத்துகிறார்கள். பெண்களை இழிவுபடுத்திக் கதை எழுதுகிறார்கள். நீங்கள் நம்பிக்கை இழந்துவிடாதீர்கள். இந்த நிலை மாறும். அது உங்களைப் போன்ற அழகிய இளம் கல்லூரி மாணவிகளிடம்தான் உள்ளது. பார்த்துச் செய்யுங் கள்.

பேயோன்

கெட்ட கனவு...

நள்ளிரவில் என் வீட்டு வாசலில் பல நூறு பேர் க்யூவில் நிற்கிறார்கள். இதில் குழந்தைகளும் அடக்கம். தெருவில் ஆங்காங்கே போலீஸ். தெருக் கோடியில் தரையில் 100 மீட்டர் என்று வெள்ளை பெயின்ட்டால் எழுதியிருக்கிறது. ஒரே தேர்தல் வாடை. க்யூவில் நிற்கும் எல்லோர் கைகளிலும் என் புத்தகங்கள். வரிசை யாக வந்து திருப்பிக் கொடுத்துவிட்டுப் போகிறார்கள். அதற்குச் சிகரம் வைத்தாற்போல் அவற்றில் அவர்களுடைய ஆட்டோகிராஃபுடன். அவமானம்! அதற்குப் பிறகும் தூங்கிக்கொண்டிருக்க நான் என்ன மடையனா? 'எல்லாரும் வீட்டுக்குப் போங்கய்யா!’ என்று கத்திவிட்டு விழித்துக்கொண்டேன்.

- புரட்டுவோம்...