கே.ஸ்டாலின், கிணத்துக்கடவு.

''புது மொபைல் வாங்கவிருக்கிறேன். நண்பர்கள் ஆண்ட்ராய்டு மொபைல் வாங்கச் சொல்கிறார்கள். ஆண்ட்ராய்டு மொபைலில் என்னவெல்லாம் வசதிகள் இருக்கும்?''

''ஆண்ட்ராய்டு என்பது ஒரு அப்ளிகேஷன். அந்த வசதியை சப்போர்ட் செய்யும் மொபைல் களை ஆண்ட்ராய்டு மொபைல் என்பார்கள். இந்த ஆண்ட்ராய்டு மென்பொருள் பெரும்பாலும் இலவசமாகக் கிடைப்பதுதான் அதன் பயன் பாட்டை அதிகரிக்கிறது. ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் மூலம் பல வசதிகள் எளிமையாகும்.

உங்கள் வங்கிக் கணக்கை மொபைல் மூலமே பாதுகாப்பாக இயக்கலாம். பல சேவைகளுக்கான கட்டணங்களைச் செலுத் தலாம். டீமேட் கணக்கு வரவு - செலவுகளைப் பராமரிக்கலாம். விண்வெளியை மையமாகக்கொண்டு வடிவமைத்த விளை யாட்டு, புகைப்படத்தையோ, வீடியோவையோ ரகசியமாக மறைத்துவைக்க உதவும் வசதி என ஏகப்பட்ட வசதிகள் குவிந்துகிடக்கின்றன ஆண்ட்ராய்டு மொபைல்களில். ஜெட் வீடியோ மூலம் யூ டியூப் வீடியோக்களை அதிவேகத்தில் பார்க்கலாம். இதுபோல, திசைகாட்டி பார்த்தல், தமிழ்ப் புத்தகங்கள் படித்தல் எனக் கணக்கில் அடங்கா வசதிகள்கொண்ட ஆண்ட்ராய்டு மொபைல்கள் 7,000 ரூபாயில் இருந்தே கிடைக்கின்றன!''

வெ.தயாநிதி, பாளையங்கோட்டை.

''எனக்கு 18 வயது. இதுவரை நான் யாரையும் காதலிக்கவில்லை. ஆனால், இதையே காரணமாக வைத்து நண்பர்கள் என்னைக் கலாய்க்கிறார்கள். எனக்கு அவமானமாக உள்ளது. எல்லா மனிதர்களும் காதலித்தேதான் ஆக வேண்டுமா?''

''பதின்பருவங்களில் காதல் வசப்படுவது இயல்புதான். மனசுக்குப் பிடித்த சாயலோடு இருக்கும் எவரைப் பார்த்தாலும் உடனே காதல் பூத்துவிடும். அதைத் தைரியமாக எதிராளியிடம் சொல்பவர்களுக்குக் காதல் கைகூடவும் செய்யும். இது இயல்புதான். அதே சமயம் இந்தப் பருவத்தில் தோன்றும் காதலின் பலவீனமான அம்சம் என்னஎன்றால், இன்று தான் காதலிக்கும் ஆண் அல்லது பெண்ணைவிடச் சிறப்பான தகுதிகளுடன் இன்னொருவரைப் பார்த்தால், காதல் அப்படியே இடம் மாறுவதற்கான சாத்தியங்கள் அதிகம். தனது தகுதிகளை மனசில் அலசி ஆராயாமல், எதிராளியின் தகுதியை மட்டுமே பார்ப்பார்கள். இது டீனேஜ் காதலின் மறு பக்கம். அதே சமயம், இந்தப் பருவத்தில் காதல் தோன்றாதது ஒன்றும் கொலைக் குற்றம் இல்லை. அதுவும் மிக இயல்பான ஒரு சமாசாரமே. காதல் என்பது உன்னதமான உறவுக்கான அடையாளம். அது திட்டமிட்டு எல்லாம் வராது. காதலிக்க வாய்ப்புகளைத் தேடி அலையாதீர்கள். ஒரு வாரம் முழுக்க நண்பர்களின் கிண்டலைக் கண்டுகொள்ளாதீர்கள். மறுவாரமே அவர்கள் உங்களை மறந்து இன்னொருவரைத் தேடிச் செல்வார்கள்!''

கு.ராஜேஷ், சென்னை-18

''உடல் தானம், உடல் உறுப்பு தானம்... என்ன வித்தியாசம்? என் இறப்புக்குப் பிறகு என் உடலைத் தானம் செய்ய விரும்புகிறேன். என்ன செய்ய வேண்டும்?''

''உடல் தானம் என்பது ஒருவர் இயற்கை மரணம் அடைந்த பிறகு அவரது உடலை மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்காகத் தானமாக அளிப்பது. இயற்கையாக மரணிப்பவர் களின் கண்களை மட்டும் நான்கு மணி நேரத்துக்குள் எடுத்துப் பிறருக்குப் பொருத்தலாம். மற்ற உடல் உறுப்புகளைப் பயன்படுத்த முடியாது.

விபத்துகளில் மூளைச் சாவு ஏற்படுபவர் உடலில் இருந்து உறுப்புகளை எடுத்து மற்றவர்களுக்குப் பொருத்துவது உறுப்பு தானம் எனப்படும். தமிழக அரசின் உறுப்பு தானத் திட்டத்தோடு 53 மருத்துவமனைகள் இணைந்து இருக்கின்றன. அந்த மருத்துவமனைகளில் மூளைச் சாவு அடைந்தவரின் உறவினர்களின் சம்மதத்தோடு இதயம், கண், சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல் போன்ற உறுப்புகளைத் தானமாகப் பெற்றுக்கொள்வோம். இதுவே வித்தியாசம். மற்றபடி யாரும் உடல் தானம் செய்யலாம்.

இதுபற்றிய மேல் விவரங்களுக்கும் விண்ணப்பப் படிவத் தரவிறக்கத்துக்கும் www.dmhrs.org தளத்தை க்ளிக்குங்கள். இரண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள், சாட்சிக் கையெழுத்துக்கு இரு நபர்களோடு சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையின் டவர் பிளாக்-1ல் ஆறாவது தளம், அறை எண்: 165 ஏ-வுக்கு நேரிலும் வருகை தரலாம். உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், உங்களுக்கு ஓர் அடையாள அட்டை வழங்குவார்கள். அதை எப்போதும் வைத்திருக்க வேண்டும். உங்கள் உறவினர்களிடமும் உங்கள் உடல்தான விருப்பத்தைத் தெரிவிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044-25305638 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.''

எஸ்.சிவா, மணவை.

''ஒரு குழந்தையைத் தத்தெடுக்க எனக்கு ஆசை. என்ன நடைமுறைகள் அதற்கு?''

''இந்து தத்தெடுத்தல் மற்றும் பாதுகாத்தல்-1956 சட்டப்படி திருமண மானவர்களே குழந்தையைத் தத்தெடுக்க முடியும். திருமணமாகிக் குழந்தை இல்லாதவர்கள் எந்தக் குழந்தையையும் தத்தெடுக்கலாம். திருமணமாகி ஏற்கெனவே ஆண் குழந்தை இருந்தால், பெண் குழந்தையை மட்டுமே தத்தெடுக்க முடியும். இதில் குழந்தையைத் தத்தெடுக்கும், தத்துக்கொடுக்கும் கணவன், மனைவியின் முழுச் சம்மதம் இருக்க வேண்டும். காப்பகங் களில் குழந்தையைத் தத்தெடுப்பதற்கு, அரசால் அங்கீகாரம் பெற்ற தன்னார்வ நிறுவனம் ஒன்றில் உங்களது எண்ணம்குறித்துப் பதிவுசெய்ய வேண்டும்.உங்களுடைய திருமணச் சான்றிதழ், வருவாய்ச் சான்றிதழ், உங்கள் குடும்பத்தாரின் ஒப்புதல் கடிதம் போன்றவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். கணவன் - மனைவிக்கு இடையிலான ஆரோக்கிய உறவு, குடும்பச் சூழ்நிலை, வசதி போன்றவற்றை நீதிமன்றம் ஆராய்ந்து தத்தெடுக்க ஒப்புதல் அளிக்கும்.''