உ.அருண்குமார், கன்னியாகுமரி.

''தி.மு.க., அ.தி.மு.க. என்ன பெரிய வித்தியாசத்தைக் கண்டிருக்கிறீர்கள்?''

''பெரியார் விரும்பியபடி, தி.மு.க. பார்ப்பனர் அல்லாத தலைமையைப் பெற்று இருக்கிறது!''

என்.ஆர்.கே.மாரிமுத்து, தூத்துக்குடி.

''சாதியை ஓட்டு அரசியலுக்குப் பயன்படுத் தும் அரசியல்வாதிகளும் சாதி ஒழியாமல் இருக்க ஒரு காரணம்தானே?''

''உங்கள் கருத்தில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. அரசியல்வாதிக்கு எப்போதும் வெற்றி மட்டுமே இலக்கு. அதற்கு எது தேவையோ, அதைப் பயன்படுத்துவான். சாதியோ, மதமோ, இனமோ, பணமோ...

இவற்றில் எது பொருத்தமானதோ... அதைப் பயன்படுத்துவதுதான் அரசியல்வாதியின் உத்தி.

சாதி பார்த்து ஓட்டு போடும் மனநிலை மக்களுக்கு இருக்கும் வரையில், அதைப் பயன்படுத்தி சாதி அடிப்படையில் ஓட்டு பொறுக்கு வதுதான் அரசியல்வாதியின் செயலாக இருக்கும். அதேவேளையில், வெறும் ஓட்டு அரசியலை மட்டும் கொள்கையாகக்கொள்ளாமல் சாதி ஒழிப்பைக் கொள்கையாகக்கொண்டவர் கள் மக்களையும் சாதி ஒழிப்புக்காகத் தயார்படுத்துவார்கள்.''

எ.அருள் ஆல்பர்ட் வில்லியம், கூடங்குளம்.

''தமிழ்நாட்டில் தலித் ஒருவர் முதல்வர் ஆக முடியுமா? முடியாது எனில் அதற்கு என்ன காரணம்?''

''ஊராட்சி மன்றத் தலைவராகக்கூட நாற்காலியில் அமர முடியாது எனும் நிலை தமிழகத்தில் இன்னும் இருக்கத்தானே செய்கிறது? மேலவளவு முருகேசன் தலையை வெட்டிக் கால்பந்தாடிய கேவலம் இந்த மண்ணில் தானே அரங்கேறி இருக்கிறது?

ஆளும் கட்சியைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தாலும்கூட, இந்திய சுதந்திரக் கொடியை ஏற்றக் கூடாது என்று, காட்டாற்றி ஊராட்சித் தலைவர் ஜெயந்தி பொது இடத்தில் அவமானப்படுத்தப்பட்டு இருக்கிறார். இத்தகைய மனநிலைகொண்ட தமிழ்நாட்டில் தலித் வகுப் பைச் சேர்ந்த ஒருவரை முதலமைச்சராக ஏற்க உடன்படுவார்களா என்று துணிந்து கூற இயலவில்லை.

பெரியார் பிறக்காத உத்தரப்பிரதேச மண் ணில் நான்கு முறை ஒரு தலித் பெண்மணி முதலமைச்சராக முடிந்து இருக்கிறது. ஆனால், பெரியார் பிறந்த தமிழ்நாட்டில் தலித் ஒருவரை மற்ற தலைவர்களைப் போல ஒரு தலைவராக அங்கீகரிக்கும் நிலைக்கே போராட வேண்டிஇருக்கிறது. சமூகத்தில் நிலவும் சாதிய இறுக்கமும் சாதியத்தைப் பயன்படுத்தி சுரண்டிக் கொழுக்கும் ஆளும் கும்பலின் ஆதிக்கமும்தான் இதற்குக் காரணம்.''

ந.க.முத்து, வத்திராயிருப்பு.

''சினிமா பார்ப்பது உண்டா? கடைசியாகப் பார்த்த படம் எது?''

''எப்போதாவது பார்ப்பது உண்டு. கடைசியாகப் பார்த்தது, சாந்தி திரையரங்கில் 'போராளி’ திரைப்படம்.''

வே.மதிமாறன், திருத்தணி.

''நீங்கள் என்னதான் நியாயம் தர்மம் பேசினாலும், உங்கள் கட்சியினர் பரவலாகவே கட்டப்பஞ்சாயத்து செய்து சம்பாதிக்கிறார்கள் என்று ஒரு பேச்சு நிலவுகிறதே?''

''இப்படி ஆதாரம் இல்லாமல் 'அட்டாக்’ செய்வதற்கு என்றே சிலர் அவதாரம் எடுத்து இருக்கிறீர்களோ?''

கு.சரவணன், ராணிப்பேட்டை.

''மனதைத் தொட்டு மன சுத்தியுடன் சொல்லுங்கள்... இன்றைய தேதிக்கு நியாயமான, நேர்மையான, அரசியல்வாதி தமிழகத்தில் யார்?''

''நீங்கள் இன்னும் அரசியல்வாதி ஆகவில்லையா? இப்படி அப்பாவித்தனமாகக் கேள்வி கேட்கிறீர்களே!''

பி.எஸ்.பார்த்திபன், லால்குடி.

''உங்கள் கட்சி மாநாடு அல்லது பொதுக்கூட்டங்களின்போது வழிநெடுக உங்கள் கட் அவுட்களைப் பார்த்து இருக்கிறேன். புலிப் படை வீரர், மீசை முறுக்குவது, சம்மணம் போட்டு அமர்ந்துகொண்டு எழுதுவது, படிப்பது, பாட்டியை அணைப்பது என விதவிதமான பேனர்கள் வைத்து அசத்துகிறார்கள் உங்கள் தொண்டர்கள். அவற்றை எல்லாம் பார்க்கும்போது உங்களுக்கு என்ன உணர்வு ஏற்படும்?''

''உங்களைப் போன்றவர்கள் இதை எல்லாம் பார்க்கிறபோது, என்னென்ன நினைப்பீர்களோ என்ற எண்ணம்தான் எனக்கு ஏற்படும்.''

கே.தயாநிதி, கிந்தல்பாடி.

''திருமணமும் செய்துகொள்ளவில்லை; குடும்பத்தினருடனும் இல்லை. சாருக்கு தினசரி சாப்பாடு எல்லாம் எப்படி?''

''அப்பாடா... நீங்கள் ஒருவராவது என் நிலையைப் புரிந்து என்னைப் பற்றி கவலைப்படுகிறீர்களே? உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை!''

கே.வள்ளியப்பன், விழுப்புரம்.

''உங்களிடம் இருக்கும் கெட்ட பழக்கம்... நல்ல பழக்கம்?''

'எந்நேரமும் இயக்கத் தோழர்களோடும் மக்களோடும் இருப் பது நல்ல பழக்கம். ஆனால், எனக்கு என்று உடற்பயிற்சிக்குக்கூட நேரம் ஒதுக்கிக்கொள்ளாதது கெட்ட பழக்கம்.''

எஸ்.திருமலைவாசன், பின்னல்வாடி.

''கருணாநிதி நல்லவரா... கெட்டவரா?''

'' 'நாயகன்’ படக் குழந்தைபோலவே கேட்கிறீர்களே! அந்தப் படத்தை சமீபத்தில்தான் பார்த்தீர்களோ?''

பி.குணசேகரன், சேலம்-4.

'' 'தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு, கன்னடம் பேசும் சாதியினர் தமிழர்கள் இல்லை’ என்று முன்வைக்கப்படும் கருத்துகள் குறித்து..?''

''ஆனாலும் அவர்கள் தமிழக மக்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. உலகமயமாதலில் புலம்பெயர்தல் என்பது வெகுவாக அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் 500 ஆண்டுகளுக்கு மேலான வர லாற்றுப் பின்னணியுடன், இந்த மண்ணோடும் மரபுகளோடும் இணைந்தும் பிணைந்தும் ஒன்றி வாழும் மக்களை அந்நியப்படுத் திப் பார்ப்பது வரலாற்றுப் பிழையாகவே மாறும்.''

எல்.விஜயகுமார், நாமக்கல்.

''இத்தனை ஆண்டு கால தலித் அரசியலில் குறிப்பிடத்தக்க தலித் பெண் தலைவர்கள் ஏன் உருவாகவில்லை?''

''தலைவர்களில் ஆண் தலைவர், பெண் தலைவர் என்று வகைப்படுத்திப் பார்க்கும் அளவுக்கு இன்னும் இங்கே தலித் அரசியல் ஏற்கப்படவில்லை. ஆணோ, பெண்ணோ தலித் சமூகத்தில் இருந்து தலைவர்கள் உருவாவதையே இன்னும் இந்தச் சாதிய சமூகம் அங்கீகரிக்கவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.''

கே.கோபெருந்தேவி, பவானி.

''தி.மு.க-வின் அடுத்த தலை மைக்குப் பொருத்தமானவர் யார்.... ஸ்டாலினா... அழகிரியா?''

''தமிழகத்தில் சிலர் கலைஞரின் குடும்பத்தில் குழப்பத்தை உருவாக்க வியூகம் வகுத்து யூகம் வளர்க்கிறார்கள். நீங்களும் அவர்களுடன் ஏன் கைகோக்கிறீர்கள்?''

எஸ்.குமரன், ராமநாதபுரம்.

''2011 விடுதலைச் சிறுத்தைகள் ஆண்டு என்றெல்லாம் அறிவித்து இருந்தீர்களே?''

''கட்சியின் கட்டமைப்பை வலிமைப்படுத்துவதும் விரிவுபடுத்துவதும் சட்டப் பேரவைத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை வென்றெடுப்பதும் விடுதலைச் சிறுத்தைகளின் செயல் திட்டமாக அறிவிக்கப்பட்டது. அதனை நிறைவேற்றுவதற்கு 2011-ம் ஆண்டினை ஒரு கால வரம்பாகத் தீர்மானித்தோம். அதாவது, 2011-ல் உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்துவதும் கிளைகளின் எண்ணிக்கை யைப் பெருக்குவதும் அனைத்து மட்டங்களிலும் நிர்வாகக் கட்ட மைப்பு வசதிகளை வலுப்படுத்து வதும் தலித் அல்லாத சமூகங் களைச் சார்ந்த ஜனநாயக சக்தி களை கட்சியில் உள்வாங்கு வதும் 2011-ம் ஆண்டுக்கான செயல் திட்டத்தின் அடிப்படை.

அத்துடன் அந்த ஆண்டில் சட்டப் பேரவைத் தேர்தலையும் எதிர்கொள்ள வேண்டி இருந்ததால், குறைந்தது ஏழு இடங்களில் வெற்றி பெற்று தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெறுவது என்பதும் செயல்திட்டத்தில் இணைத்துக்கொள் ளப்பட்டது.

இவற்றில் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதில் வெற்றி பெற இயலவில்லை. எனினும், கட்சியின் கட்டமைப்பை வலிமைப்படுத்துவதிலும் விரிவுபடுத்துவதிலும் குறிப்பிடத்தக்க அளவில் சாதித்து இருக்கிறோம். குறிப் பாக, தமிழகம் தழுவிய அளவில் 45 லட்சம் பேரை உறுப்பினர்களாகச் சேர்த்திருக்கிறோம். அதில் 17 லட்சம் பேர் தலா 10 ரூபாய் கட்டணம் செலுத்தி தம்மைத் தீவிர உறுப்பினர்களாகப் பதிவுசெய்து இருக்கி றார்கள். தலித் அல்லாத சமூகத்தினரும் - குறிப்பாக இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரும் - கணிசமான அளவில் கட்சியில் இணைந்துள்ளனர். ஆகவே, 2011 சிறுத்தைகளின் ஆண்டாகவே அமைந்தது.''

- இன்னும் பேசுவோம்...

அடுத்த வாரம்

''ஜெயலலிதாவிடம் உங்களுக்குப் பிடித்தது... பிடிக்காதது?''

''நடிகை குஷ்பு தி.மு.க-வில் முக்கிய இடம்பிடித்து விட்டாரா? அவருடன் அரசியல்ரீதியாக சமீபத்தில் எதுவும் பேசினீர்களா?''

''அகவை 50... திருமணம் எப்போது?''