Published:Updated:

முகம்

மு.கருணாநிதிதி.மு.க தலைவர்

முகம்

மு.கருணாநிதிதி.மு.க தலைவர்

Published:Updated:
முகம்

தி.மு.க-வின் முகம்... மு.க!

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• முதல்வராக இருந்தபோதைக் காட்டிலும் இப்போது இன்னும் தீவிரமாக இயங்கிக் கொண்டு இருக்கிறார் மு.கருணாநிதி. அறிக்கை, கடிதம், கேள்வி-பதில் என ஏதாவது ஒரு வடிவத்தில் தனது எண்ணங்களை எழுதி 'முரசொலி’க்குத் தினமும் காலை 11.30 மணிக்குள் அனுப்பிவிட்டுத்தான் அடுத்த வேலைகள் தொடங்கும்.

• காலையில் தயிர் தொட்டு இட்லி சாப்பிடுகிறார். இரவு உணவும் இதுதான். மிக்ஸியில் அடித்த சாம்பார் சாதம் அல்லது தயிர் சாதம்... இது மதிய உணவு. மீன் குழம்பும் சிக்கன் துண்டும் மிகவும் பிடித்த அசைவ வகைகள். ஆனால், அவற்றுக்கு விடை கொடுத்துவிட்டார். ஒருகாலத் தில் சாம்பாரைக் கண்டாலே பிடிக்காது. இன்று வேறு வழி இல்லை என்பார்.

• இளமைக் காலம் முதல் அதிகாலை நடைப்பயிற்சியைத் தவறவிடாதவருக்கு, இப்போது அது இயலாத காரியமாகிவிட்டது. எனவே, தினமும் காலையில் எண்ணெய் போட்டு கை, கால்களை உருவிவிட்டு மசாஜ் செய்கிறார் கள். ஃபிரஷர், ஷ§கர் என இரண்டு பெரிய அவஸ்தைகளும் அவருக்கு இல்லை. எனவே, கம்பீரம் குன்றாமல் இருக்கிறார்.

• இ

முகம்

ப்போதும் மிகத் தாமதமாகத்தான் படுக்கைக்குச் செல்கிறார். முன்பெல்லாம் படிப்பதில் நேரம் கழியும். இப்போது டி.வி. நிகழ்ச்சிகளுக்கும் நேரம் ஒதுக்குகிறார். 'கலைஞர் டி.வி.’ அலுவலகத்துக்கோ... பொறுப்பாளர்களுக்கோ கருணாநிதியிடம் இருந்து நள்ளிரவு நேரங்களில் போன் வருகிறது. நிகழ்ச்சிகளுக்கான பாராட்டாகவோ, விமர்சனமாகவோ அது இருக்கும்.

• கருணாநிதியின் சமீபத்திய கவலை... மனைவி தயாளு அம்மாள் உடல் நலமில்லாமல் இருப்பது. பெங்களூரில் மகள் செல்வி வீட்டில் ஓய்வில் இருக்கிறார் தயாளு. காலையும் இரவும் அவரோடு தவறாமல் பேசி நலம் விசாரிக்கிறார் கருணாநிதி.

• மேடைகளில் அதிக நேரம் உட்கார்ந்தால், கால் லேசாக வீங்குகிறது என்பதால் பொதுக்கூட்டங்களைத் தவிர்க்க வேண்டும் என்பது மருத்துவர்கள் கட்டளை. மாதத்துக்கு இரண்டு கூட்டம் பேசினால் போதும் என்பது இப்போதைய முடிவு.

• கருணாநிதி அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய கட்டுரைகள், புத்தகங்களாக இருந்தால் பேராசிரியர் நாகநாதன் கொடுத்து அனுப்புகிறார். கருணாநிதி படிக்க நினைக்கும் ஆங்கிலக் கட்டுரைகளை ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜமாணிக்கம் மொழிபெயர்த்துத் தருகிறார்.

'

• முரசொலி’யின் 'ஃபர்ஸ்ட் மெஷின் காப்பி’ இன்றைக்கும் கருணாநிதியின் பார்வைக்கு வந்துவிடுகிறது. அவர் செய்யும் திருத்தங்களுடன்தான் சென்னைப் பதிப்பு தயார் ஆகும்.

• கருணாநிதி ஏதாவது ஆலோசனை செய்ய வேண்டுமானால் உடனடியாக அழைப்பது அன்பழகனையும் ஆற்காடு வீராசாமியையும். அவர்கள் இருவரும் ஆக்டிவ்வாக இயங்க முடியாததில் மனதளவில் கருணாநிதிக்குப் பெரிய வருத்தம்.

• திருவொற்றியூருக்குக் கூட்டம் பேசப் போனார் கனிமொழி. பேசி முடித்துவிட்டு அவர் வீட்டுக்கு வரும் வரை தூங்காமல் விழித்திருந்த கருணாநிதி, 'என்ன பேசுன... கூட்டம் எப்படி இருந்தது?’ என்று நெடுநேரம் விசாரித்துவிட்டுத்தான் படுக்கைக்குச் சென்றிருக்கிறார். அந்த அளவுக்கு எல்லாவற்றின் மீதும் அதீத ஆர்வம்.

• டீ, காபி குடிப்பதில் முன்பு அதிக ஆசை. இப்போது மாலை நேரத்தில் காம்ப்ளான் பருகுகிறார்.

• தமிழ் - ஆங்கில நாளிதழ்களை காலை ஐந்து முதல் ஏழு மணிக்குள் படித்து முடித்துவிடுகிறார். கட்சியைப் பற்றி வந்துள்ள விமர்சனங்களைச் சம்பந்தப்பட்டவர்களிடம் எட்டு மணிக்குள் கேட்டு முடித்துவிடுகிறார்.

• பெரிய குடும்பம், மகன் - மகள்கள், பேரன், பேத்திகள் நிறைய இருந்தாலும் எப்போதும் கருணாநிதியின் நிழலாக நின்று காப்பது நித்தியானந்தன். தொண்டர் அணியில் இருந்து அறிவாலயம் கவனித்தவரின் இன்றைய ஒரே வேலை அறிவாலயத்தை உருவாக்கியவரைக் காப்பது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism