Published:Updated:

பேயோன் பக்கம்!

பேயோன் பக்கம்!

பேயோன் பக்கம்!

பேயோன் பக்கம்!

Published:Updated:
பேயோன் பக்கம்!

மீண்டும் கடிதம், மீண்டும் பதில்

வணக்கம் சார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் கட்டுரை ஒன்றில் புதுதில்லியில் ஆக்ரா இருப்பதாக எழுதியுள்ளீர்கள். இது தவறு. ஆக்ரா தனியாக வேறொரு இடத்தில் இருக்கிறது. எழுதும்போது தகவல்களைச் சரிபார்த்து எழுதுங்கள். இல்லாவிடில் உங்களைத் தொடர்ந்து படிக்கும் என்போன்ற வாசகர்கள் பிழைகளை நம்பிவிடுவோம்.

- ராமசெல்வா, சென்னை-4.

அன்பின் ராமசெல்வா,

பேயோன் பக்கம்!

இந்த மாதிரி தகவல்கள், எழுதுவதற்கு முன்பே அல்லது எழுதும்போதே கிடைக்க வேண்டும். எழுதிய பின் கிடைத்து ஒரு பயனும் இல்லை. உலகம் சுருங்கிக்கொண்டிருக்கிறது. எனவே, இந்நேரம் ஆக்ரா, செங்கோட்டைக்குள் இருந் தாலும் ஆச்சரியம் இல்லை. முதலில் உங்கள் தகவல்களைச் சரிபாருங்கள். நேற்றைக்கு வேறு தேதி, இன்றைக்கு வேறு தேதி.

- பேயோன்

நானெழுதுதல்

பேயோன் பக்கம்!

நான் வாசிக்கத் தொடங்கிய புதிதில் தன்மையில் (first person) எழுதப்பட்ட படைப்புகளைப் படிக்கும்போது 'இதையெல்லாம் ஏன் நம்மிடம் சொல்கிறார்கள்?’ என்ற கேள்வி எழும். அதுவும் பெரும்பாலான நாவல்களில் தான் இன்னார் என்ற அறிமுகம் இருக்காது. மொட்டையாக ஆரம்பிக்கும். பெயர்கூட இருக்காது. 'நான் செய்யாத குற்றத்திற்காக நாளை என்னைத் தூக்கிலிடப்போகிறார்கள்!’ 'அது உன் பிரச்னை. முதலில் நீ யார்? உன் குலம், கோமியம் என்ன? அதைச் சொல்லு’ என்று தோன்றும். இப்போது தோன்றுவதில்லை. ஏனென்றால் நானே குலம், கோமியம் இல்லாமல் எழுதுகிறேன்.

பேயோன் பக்கம்!

நிலம் பிடிக்கும், ஆனால்
புதைய மாட்டேன்

நீர் பிடிக்கும், ஆனால்
கரைய மாட்டேன்

வான் பிடிக்கும், ஆனால்
பறக்க மாட்டேன்

நெருப்பு பிடிக்கும், ஆனால்
எரிய மாட்டேன்

காற்று பிடிக்கும், ஆனால்
மிதக்க மாட்டேன்

சாப்பாடு பிடிக்கும், ஆனால்
ஃபுல் கட்டு கட்டுவேன்.

கலி முற்றியது

ஸுமார் நூறு வருஷங்களுக்கு முன்பு எழுதப்பட்ட சில லிபிகளை இடைவிடாமல் பத்து நாள் வாஸித்தேன். வேண்டாத வினை. அதிலிருந்து சகலமும் சமஸ்கிருதமாகத் தெரிகிறது. இன்று தினசரியை எடுத்துப் பார்த்தால் 'நகைக் கடையில் திமிலோகம்! கல்லாப்பெட்டி ஸம்ஹாரம்!’ என்று அலறியது ஒரு தலைப்புச் செய்தி. 'சொர்ண கிரயம் 2% அதீதம்’ என்றது இன்னொன்று. 'விக்கி ஸ்கலிதங்கள் அசான்ஜ் ஸிக்குவாரா?’ என்பதைப் பார்த்தபோதுதான் இது நிச்சயமாக வைத்தியர் விவகாரம் என்று பட்டது. நான் பேசினால் எவருக்கும் புரியவில்லை. மனைவி என்னை மணிப்பிரவாளத்தில் தூஷிப்பதைவிடப் பெரிய ஹாஸ்யத்தை நான் கண்டதில்லை. அடக்கவொட்டாமல் 'ஹாஹா’காரம் செய்தபடியே ஒரு மனோதத்துவ வைத்தியரை ஆலோசித்தேன். 'இந்த தேவ உபாதையிலிருந்து மோக்ஷம் கிடையாதா ஸ்வாமி?’ என்றேன். அவர் சொன்ன யோசனை: 'உமது நாக்கில் தர்ப்பையைப் போட்டுப் பொசுக்கும் ஓய்!’ அங்ஙனமே செய்தேன். நவ் அயம் ஹாப்பி.

திட்டாதீர்கள்

க்கத்துத் தெருவினர் என் வீட்டிற்கு அருகில் குப்பை கொட்டுகிறார்கள். ஈக்களும் நாற்றமும் தாங்கவில்லை. சொல்லிப் பயனில்லை. தெருவாந்திரம் (என்றால் மினியேச்சர் தேசாந்திரம்) போகும்போது ஒரு தெருச் சுவரில் 'ஏய் நாயே!! இங்கு சிறுநீர் கழிக்காதே!!!!!’ என்று எழுதியிருந்தது. அந்த இடம் சுத்தமாக இருந்தது. இன்னொரு தெருவில் 'முட்டாள்கள் மட்டும் குப்பை கொட்டும் இடம்’ என இருந்தது. அவ்விடமும் கன சுத்தம். இதுதான் நமக்குத் தீர்வு என்று நானும் என் வீட்டுப் பக்கத்துச் சுவரில் ஒன்று எழுதினேன்: 'சக மனிதர்களின் சௌகரிய அசௌகரியங்களின்பால் இம்மியளவும் ஈடுபாடுகொள்ளாத எருமைப்பாட்டுப் பயனிலி களே, இங்கு சிறுநீர் கழிக்காதீர்கள்!’ இரவோடிரவாய் இதை எழுதிவிட்டு மறுநாள் காலையில் பார்த்தால், நான் எழுதியதற்குக் கீழே நிறையக் கிறுக்கியிருந்தது. 'அப்படிப் போடு தல!!’, 'பகிர்வுக்கு நன்றி!!’, 'எங்கள் தெரு சுவரையும் பார்த்து உங்கள் மேலான கருத்தைக் கூறவும்’ இந்த ரீதியில். ஆனால், அங்கு இது வரை இல்லாத மூத்திர வாடை அறிமுகமாகியிருந்தது. என் தப்பு. நான் 'குப்பை கொட்டாதே’ என்றுதான் எழுதியிருக்க வேண்டும்.

இயற்கைச் சென்னை

பேயோன் பக்கம்!

ற்போது சென்னை வானிலை பெங்களூர் கிளைமேட்டும் சென்னை வானிலையும் கலந்த மாதிரி இருக்கிறது. இருக்கிற தண்ணீரையெல்லாம் கொட்டித் தீர்க்கப்போவது போல் மேகங்கள் ஒரேயடியாகக் கருத்து மூண்டிருக்கின்றன. அதே சமயத்தில் வாட்டி யெடுக்கும் வெயில் ஊரையே மஞ்சள் பாரித்திருக் கிறது. புறாக்கள் வெயிலில் வறுபட்டுக் காக்கைகளாக அலைந்துகொண்டிருக்கின்றன. ஊரை அடித்து உலையில் போட வேண்டாம். ஊரே உலை போலத்தான் உள்ளது. குடை இல்லாமல் வெளியே போனால் மழை நிச்சயம். மழைப் பற்றாக் குறையால் இம்முறை தண்ணீர்ப் பஞ்சம் வருமென மந்திரிகள் எச்சரித் தார்கள். அவர்கள் அப்படிச் சொன்னதுதான் தாமதம், இரண்டே மாதங்களுக்குப் பின் இரண்டு நாட்கள் பெய்து பொழிந்துவிட்டது மழை. அதற்குப் பிறகு எங்கு பார்த்தாலும் போர் விமானங்கள் போல் அந்தரத்தில் கொசுக்கள் நடமாட்டம். குண்டு வீச்சு எச்சரிக்கைதான் பாக்கி. மேகங்கள் தம்மைக் கசக்கிப் பிழிந்துகொண்டு நமக்குத் தண்ணீர் வார்க்கும் என்று நாம் எதிர் பார்த்தது வீண். டெங்கு, காலரா மற்றும் தண்ணீர் லாரிகளைக் கிளப்பி விடத்தான் இத்தனை முஸ்தீபு களும். இயற்கை அன்னையா, கொக்கா?

-புரட்டுவோம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism