Published:Updated:

மிஸ்டு கால்

பாரதி தம்பி

மிஸ்டு கால்

பாரதி தம்பி

Published:Updated:
##~##

ரு நம்பர் மாற்றி அழுத்தியதால், வேறு எண்ணுக்குத் தவறுதலாக டாப்-அப் செய்துவிட்டேன். அந்த நம்பருக்கு போன் போட்டு, 'சார், தெரியாம நம்பர் மாத்திப் பண்ணிட்டேன். கொஞ்சம் எனக்கு டாப்-அப் பண்ணிவிட்டுர்றீங்களா?’ என்று கேட்டதும், அது வரை தமிழில் பேசியவன், 'கியாஜி... ஆவோஜி...’ என்று வாயில் வாழைக்காய் பஜ்ஜி போட ஆரம்பித்தான்.

செல்போன்களால் சிட்டுக்குருவிகள் அழிந்து போவதைப் பற்றித்தான் நாம் பேசிக்கொண்டு இருக்கிறோம். ஆனால், உலகின் பல நாடுகளில் தேனீக்கள் மிக வேகமாக அழிந்துவருகின்றன. ஆஸ்திரேலியா, ஜெர்மனி, நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் 2010-ம் ஆண்டு கணக்கெடுப்பில் தேனீக்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துவிட்டது. அமெரிக்காவின் சில பகுதிகளில் 80 சதவிகிதம் தேனீக்களைக் காணவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிஸ்டு கால்

பொதுவாக, தேனீக்கள் தேன்கூட்டில் இருந்து 5 கி.மீ. சுற்றளவு வரை பறந்து சென்று, பூக்களில் தேனைச் சேகரித்துக் கூடு திரும்பும். லட்சக்கணக்கில் தேனீக்கள் பறந்தாலும் அந்தந்தத் தேனீ, அதனதன் கூட்டுக்குத் திரும்பக் காரணம், பூமியின் மின் காந்த அலைகள்தான். அந்த அலைகளை உணர்வதன் வழியாகத்தான் ஒரு தேனீ, சரியாகக் கூட்டை அடைகிறது. ஆனால், செல்போன் கோபுரங்களின் அலைவீச்சு இந்த மின் காந்த அலைகளைச் சிதறடிக்கிறது. இதனால் தேனீக்களால் சென்ற வழியில் கூடு திரும்ப முடியவில்லை. கூட்டம் கூட்டமாகச் செத்து மடிகின்றன. இதற்கு 'காலனி கொலாப்ஸ் டிசார்டர்’ (Colony collapse disorder) என்று பெயரிட்டு இருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

'அட... தம்தூண்டு தேனீதானே’ என்று நினைக்க வேண்டாம். இந்த உலகில் சுமார் இரண்டு லட்சம் பூக்கும் வகைத் தாவரங்கள் இருக்கின்றன. இவற்றின் உற்பத்தி அயல் மகரந்தச் சேர்க்கை மூலமாகவே நடைபெறுகின்றன. இந்த அயல் மகரந்தச் சேர்க்கை பெரும்பாலும் தேனீக்கள் மூலமே நிகழ்கிறது. 'தேனீக்கள் அழிந்தால் மகரந்தச் சேர்க்கை இல்லை, தாவரங்கள் இல்லை, உணவு இல்லை, பிறகு மனித குலமே இல்லை’ என்று சொல்லி இருப்பவர் யார் தெரியுமா? விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ''தேனீக்கள் இந்த உலகில் இருந்து முற்றிலுமாக அழிந்தால், தாவர இனமே அழியும். அதில் இருந்து ஐந்து ஆண்டுகளில் மனித இனமும் அழிந்துபோகும்'' என்றும் எச்சரித்துச் சென்றிருக்கிறார் அவர். என்ன செய்யப்போகிறோம்? குறைந்தபட்சம், இதைப் பற்றி செல்போன் உரையாடல்களில் விவாதிக்காமலேனும் இருப்போமே!

சுத்

மிஸ்டு கால்

தமே செய்யப்படாமல் ஒரு பொருளை வருடக்கணக்கில் பயன்படுத்துகிறோம் என்றால், அது செல்போனாகத்தான் இருக்கும். நாள் ஒன்றுக்குப் பல மணி நேரம் செல்போனைப் பயன்படுத்துகிறோம். வாய்க்கு அருகில் வைத்துப் பேசிக்கொண்டே இருக்கிறோம். எவ்வளவு அழுக்காக இருந்தாலும் செல்போனை உபயோகிக்கத் தயங்குவது இல்லை. அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழகத்தின் மைக்ரோபயாலஜி துறை பேராசிரியர் சார்லஸ் கெர்பா என்பவர் நம் சுற்றுப்புறச் சூழலில் வசிக்கும் கிருமிகள்குறித்து ஆய்வு நடத்தினார். முடிவாக அவர் கண்டறிந்த உண்மை... நம் கழிப்பறைகளைவிட செல்போன்களில்தான் அதிகக் கிருமிகள் இருக்கின்றன!

''கிளம்பிட்டேன் நண்பா... கோயம்பேட்ல இருக்கேன். பஸ்ல ஜன்னல் சீட்!'' என்று அண்ணா சாலையில் நின்றபடி முருகன் யாரிடமோ போனில் சொல்லும்போது, மணி மாலை 5. நானும்தான் அருகில் இருந்தேன். வேலை முடிந்ததும் நான்தான் பாண்டிச்சேரி பேருந்தில் ஏற்றிவிட்டேன். அப்போது மணி இரவு 9. அடுத்த நாள் மாலை அவன் சென்னைக்குத் திரும்புவதாகத் திட்டம். மறுநாள் மாலை 6 மணிக்கு போன் போட்டு, ''கிளம்பிட்டியா?'' என்றால், ''கிளம்பிட்டேன் மச்சான்'' என்கிறான். ''உண்மையாக் கிளம்பிட்டியா?'' என்றதற்கு சத்தியம் எல்லாம் செய்தவன், வந்து சேர்ந்தபோது இரண்டு நாட்கள் கடந்திருந்தன.

மிஸ்டு கால்

'இந்தப் பாட்டை உங்களுக்குப் பிடிச் சிருந்தா, உடனே இரண்டை அமுக்குங்க’னு சொன்னது அந்த போன் குரல். எனக்கும் அந்த பாட்டைப் பிடிச்சுத்தான் இருந்துச்சு. ரெண்டை அமுக்கினேன். உடனே குறுந்தகவல் வந்துச்சு... 'உங்க பேலன்ஸ்ல இருந்து ரூபாய் முப்பது பிடிச்சிருக்கோம்’னு!

  - செ.சரவணக்குமார், சாத்தூர்.

முன்பெல்லாம் 'காலணிகளை வெளியே விடவும்’ என்று சில இடங்களில் எழுதியிருப்பார்கள். அத்துடன் சேர்த்து இப்போது, 'உங்கள் செல்போன்களை சுவிட்ச் ஆஃப் செய்யவும்’ என்றும் எழுதி இருக்கிறார்கள்!

- எம்.ஆர்.சத்தியா, ராமநாதபுரம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism