Published:Updated:

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

அண்டன் பிரகாஷ்

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

அண்டன் பிரகாஷ்

Published:Updated:
##~##

'ஐ போன் 5’ பற்றிய அறிவிப்புகள் பற்றி இந்த வாரம் எழுதுவீர்கள் என நினைக்கிறேன்!’ என்று ட்வீட்டிய தாய்நேசன்... உங்கள் நினைப்பு மிகச் சரி!

 தங்களது நுகர்வோர் தொழில்நுட்பங்களைப் படுநேர்த்தியாகவும் திட்டமிட்டும் வெளியிடுவதில் மிகத் திறமையான நிறுவனம் 'ஆப்பிள்’. சென்ற வருடம் மறைந்துபோன அதன் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் இதில் கில்லாடி. அறிவிக்கப்படும் தொழில்நுட்பங்களை மிகவும் ரகசியமாக வைத்துவிட்டு, எதிர்பார்ப்பை அதிகரித்து வெளியிட்டுப் பேசுவார் ஸ்டீவ். குறிப்பிட்ட தொழில்நுட்பச் சாதனத்தின் மிக முக்கியமான வசதியைக் கடைசி நேரத்தில் 'ஒன் மோர் திங்’ என்றபடி கூலாகச் சொல்லிவிட்டுப் பேச்சை முடித்துக்கொள்வார். ஆப்பிள் ஐபோன் வெளியீடுகள் இதுவரை ரஜினி பட ரிலீஸ் அளவில் கொண்டாடப்பட்டது உண்மை என்றாலும், 'ஐபோன் 5’ வெளியீட்டை அடக்கி வாசிக்கிறது ஆப்பிள். இதுவரை இருந்த ஐபோன்களைவிடச் சற்றே மெலிவாகவும் பரப் பளவில் கொஞ்சம் பெரியதாகவும் ,திரைத்தெளிவு அதிகமாகவும் இருக்கப்போகிறது என்பதைவிடப் பெரிதான மாற்றங்கள் இருப்பதாகத் தெரிய வில்லை. என்றாலும், 'ஐபோன் 5’ அலைபேசி மில்லியன் கணக்கில் வாங்கப்பட்டு 'ஆப்பிள்’ நிறுவனத்துக்குப் பணம் காய்க்கும் மரமாக இருக்கப்போவது நிச்சயம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

வெற்றியில் தொடர்ந்து திளைத்தபடி 'ஆப்பிள்’ இருக்க, சில வாரங்களாக இந்தக் கட்டுரையில் இடம் பெறாத 'ஃபேஸ்புக்’ எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்கலாம். 'ஃபேஸ்புக்’ எதிர்கொள்ளும் மிகப் பெரிய பிரச்னை அலைபேசிகளில் 'ஃபேஸ்புக்’கைப் பயன்படுத்துபவர்களுக்கு எப்படி விளம்பரங்களைக் காட்டி அவர்களது பயனீட்டைப் பணமாக மாற்றுவது எப்படி என்பதைக் கண்டறிந்து அவற்றைச் செயல்படுத்துவதில் ஏக தடுமாற்றம். அதுவும், இப்போது பங்குச்சந்தையில் இருப்பதால், 'ஃபேஸ்புக்’கின் செயல்பாடுகளை முதலீட்டாளர்களும் சந்தை நிபுணர்களும் கண்ணில் எண்ணெய்விட்டுப் பார்த்தபடி இருப்பதால், அதிக அழுத்தத்தில் இருக்கிறது 'ஃபேஸ்புக்’.

வெகுவாகச் சரிந்தும் அவ்வப்போது லேசான வளர்ச்சி எனப் புயலில் தடுமாறும் பாய்மரக் கப்பலாகக் கடந்த சில மாதங்களாக மாற்றி விட்டன 'ஃபேஸ்புக்’கின் பங்குகள். பங்குச்சந்தை நிகழ்வுகளை மேலெழுந்தவாரியாகக் கவனிப்பவர் களுக்கும் தெரிந்த ஒன்று. பங்குச்சந்தையில் நுழையும் புதிய

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

நிறுவனங்கள் பொதுவான இடங்களில் பங்கு மதிப்புபற்றி நேரடியாகவோ, மறைமுகமாகவோ குறிப்பிட்ட காலம் வரை பேசக் கூடாது என்பது விதிமுறை என்பதால், 'ஃபேஸ்புக்’ என்ன செய்யத் திட்டமிட்டு உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ளவும் முடியவில்லை. அந்தக் குறிப்பிட்ட காலம் சென்ற வாரத்தோடு முடிந்துவிட்டது என்பதால், இந்தப் பரிதாப பங்குச்சந்தை பெர்ஃபார்மன்ஸ்பற்றி 'ஃபேஸ்புக்’ என்ன சொல்லப்போகிறது என்பதைப் பற்றி இருந்த ஆர்வத்தை, இந்த வாரம் சான்ஃபிரான்சிஸ் கோவில் நடந்த டெக் மாநாடு ஒன்றில் பேசியதன் மூலம் தீர்த்துவைத்தார் 'ஃபேஸ்புக்’கின் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க். அவரது பேச்சின் சாராம்சத்தை இப்படிக் கொடுக்கலாம்...

''தப்பு பண்ணிட்டோம். அலைபேசிக்குப் பயனீடு நிரந்தரமாகச் சென்றுவிட்டது என்பதைத் தெரிந்திருந்தாலும், அதற்கு இணையான வேகத்தில் 'ஃபேஸ்புக்’ தொழில்நுட்பத்தைக் கொண்டுசெல்லவில்லை. அதற்கு முக்கியக் காரணம் 'ஹெச்டிஎம்எல்5’ மீது அதிக நம்பிக்கை வைத்ததுதான். 'ஃபேஸ்புக்’ போன்ற பிரமாண்ட சேவையைக் கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்தும் வகையில் 'ஹெச்டிஎம்எல்5’க்குத் திறன் (Scalability) இல்லை. இனி 'ஆப்பிள்’, 'ஆண்ட்ராயிட்’  இன்னபிற அலைபேசி இயங்கு மென்பொருட் களில் நேரடியாக இயங்கும் வகையில் 'ஃபேஸ்புக்’ மென்பொருளை மாற்றப்போகிறோம்!''

அவரது அறிவிப்புக்குக் காரணம் இருக்கிறது. நேரடி முறையில் இப்படித் தயாரிக்கப்படும் மென்பொருள்கள் வேகமாக இயங்கும். எனவே,  பயனீட்டாளர் கள், அதிக நேரம் பயன்படுத்துவார்கள். ஆனாலும், கணினித் திரையைவிட மிகக் குறுகலாக இருக்கும் அலைபேசியில் நேரடி விளம்பரங்கள் மூலம் பணமீட்டுவது சுலபம் அல்ல. இந்தச் சவாலை எதிர் கொண்டு 'ஃபேஸ்புக்’ என்னவித சேவைகளைக் கொண்டுவரப்போகிறது? பொதுவாக, அக்டோபர் மாதத்தில் புதுமையாக ஏதாவது ஒன்றை அறிமுகப் படுத்துவதை வழக்கமாகக்கொண்டு இருக்கிறது 'ஃபேஸ்புக்’. இந்த அக்டோபர் இது சம்பந்தமான அறிவிப்பு ஏதாவது இருக்கலாம்.

Log Off

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism