Published:Updated:

மிஸ்டு கால்

பாரதி தம்பி !

மிஸ்டு கால்

பாரதி தம்பி !

Published:Updated:
##~##

திருமணத் துக்கு முன் மணிக்கணக் காக 'செல்’ பேசி காதல் வளர்த்த யாரும் திருமணத்துக்குப் பிறகு அப்படிப் பேசுவது இல்லை. இது மனைவிகளின் நிரந்தரப் புகார். 'இது என்னங்க அநியாயமா இருக்கு. காதலிக்கும்போது ரெண்டு, மூணு நாளைக்கு ஒரு தடவைதான் பார்க்கவே முடியும். தினமுமே பார்த்துக்கிட்டாலும் சாயங்காலம் கிளம்பி ரெண்டு பேரும் அவங்கவங்க வீட்டுக்குப் போய் ஆகணும். இப்போ அப்படி இல்லையே... வேலை முடிஞ்சதும் வீட்டுக்குத்தானே வரப்போறோம். வீட்டுலயேதான் இருக்கப்போறோம். அதுக்குப் பிறகும் ஏன் போன்ல பேசலன்னா, என்னது இது?’ என்பது கணவர்களின் வாதம்!             

  'நைட்டு நான் எதுவும் தப்பாப் பேசிட்டனா?’ என்று போதை கலைந்ததும் காலையில் போன் போடுபவர்களை நேரில் வரச்சொல்லி பொடனியிலேயே போடுங்கள். வர வரக் குடித்துவிட்டு நட்ட நடு ராத்திரியில் போன் செய்பவர்களின் தொல்லை தாங்க முடியவில்லை. அந்த நேரத்தில்தான்

மிஸ்டு கால்

அவர்களுக்கு அன்பு பீறிடும். புரட்சி வெடிக்கும். அநியாயம் கண்டு ரத்தம் கொதிக்கும். இன்னும் சிலர் குடித்துவிட்டு, வண்டியை ஓட்டிச் சென்று டிராஃபிக் போலீஸிடம் மாட்டிக்கொண்டு, 'என் ஃப்ரெண்டு யாரு தெரியும்ல?’ என்று குழறுவாயுடன் நமக்கு போன் போடுவார்கள். 'ராங் நம்பர்’ என்று சொல்லி கட் செய்யுங்கள்.    

காற்றலைகள் நம் குரலைச் சுருதி குறையாமல் எதிர்முனைக்கு எடுத்துச் செல்வது சாத்தியமாகும்போது, செல்போனில் கொடுக்கப்படும் முத்தங்கள் மட்டும் காதலிக்குச் சென்று சேராமலா போய்விடும்?!  

ளுந்தூர்பேட்டையில் உலகநாதன் என்ற பெயரில் யாரேனும் இருந்தால், அதுவும் ஜோசியராக இருந்தால் அவருக்குக் கடந்த மூன்று வருடங்களாக ராகுகாலமாகத்தான் இருக்க வேண்டும்.

மிஸ்டு கால்

உளுந்தூர்பேட்டை உலகநாதன் என்ற பெயரில் மூன்று வருடங்களாக செல்போனில் சுற்றிவரும் குரல் பதிவை நீங்களும் கேட்டிருக்கக்கூடும். 'சார், உங்க அருமையான பேரைச் சொல்லுங்க சார்’ என்று பணிவாகத் துவங்கும் குரல், இறுதியில் கெட்ட வார்த்தைகளால் மிரட்டி எடுக்கும். (இந்த ஜோசியர் பேரை 'ஓ.கே. ஓ.கே’ படத்தில் ஒரு சாமியார் கேரக்டருக்குப் பெயராகவும் வைத்திருந்தார்கள்). பகுத்தறிவைப் பரப்ப பயபுள்ளைங்க, எப்படிஎல்லாம் யோசிக்குது?!

மிஸ்டு கால்

'அந்த டவர்ல ஒருத்தன் ஏறி உக்கார்ந்துக் கிட்டு எனக்கு வர்ற போனை எல்லாம் திருப்பிவிடுறான். அவனை இறக்கிவிடுங்க’ என்று கஸ்டமர் கேருக்குப் பேசும் இன்னொரு குரல் பதிவு, காமெடியின் உச்சம்.

தொலைதூரப் பயணத்தில் பேருந்திலோ, ரயிலிலோ அமர்ந்துகொண்டு மிட்நைட் விஞ்ஞானிகளாக மாறி, ரிங்டோன்களை டெஸ்ட் செய்பவர்களுக்குக் கருட புராணத்தில் என்ன தண்டனை என்று ஷங்கரிடம் கேட்க வேண்டும்!

செல்போன் மோகம் ஒரு மனிதனை எந்த எல்லைக்கும் கொண்டுசெல்லும் என்பதற்கு இந்தச் செய்தி ஒரு பொருத்தமான உதாரணம். சீனாவில் 17 வயதான வாங் என்ற பள்ளிக்கூட மாணவருக்கு 'ஆப்பிள்’ ஐ போன் மீது தீராக் காதல். ஆனால், வாங்குவதற்குக் கையில் காசு இல்லை. என்ன செய்யலாம்? வாங்,

மிஸ்டு கால்

ஒரு டாக்டரைப் பிடித்து தனது கிட்னியில் ஒன்றை விற்று, அதில் கிடைத்த 2,500 அமெரிக்க டாலர் பணத்தில் ஒரு ஐ போனும், ஐ பேடும் வாங்கிஇருக்கிறார். திடீரென்று தன் மகனிடம் இருந்த புத்தம் புதிய ஐ போன், ஐ பேடைப் பார்த்த அவனது அம்மா சந்தேகப்பட்டு விசாரிக்க... உண்மை தெரிந்திருக்கிறது. பிறகு, செய்தி வெளியே கசிந்து, அந்த டாக்டர் உள்பட ஐந்து பேர் கைது

மிஸ்டு கால்

செய்யப்பட்டனர். இது ஒரு பக்கம் இருக்க... சீனா முழுக்கவே இப்படி உடல் உறுப்புகளை விற்று எலெக்ட்ரானிக் சாதனங்களை வாங்கிக் குவிப்பது அதிகரிக்கிறது என்று அதிர்ச்சிக் கட்டுரைகள் வெளியிட்டிருக்கின்றன சீன ஊடகங்கள்!

பி.எஸ்.என்.எல். ப்ரீபெய்டில் உள்ள சில பிளான்களின் பெயர்கள், 'அன்பு ஜோடி’, 'பியாரி ஜோடி’, 'நேசம்’, 'வசந்தம்’. இளவட்டங்களை உசுப்பேற்ற இப்படி எல்லாம் பெயர் வைப்பது தேவையா? 'அன்பு ஜோடி’யை ரீ-சார்ஜ் பண்ணுங்க, 'பியாரி ஜோடி’யை டாப்-அப் பண்ணுங்க’ என்று சொல்வது நல்லாவா இருக்கு?

- என்.சாந்தினி, மதுரை.

மிஸ்டு கால்

ன் நண்பனுக்கு முழு சம்மதம் இல்லாமல் அவனுடைய பெற்றோர், உறவுமுறை பெண்ணைத் திருமணம் செய்துவைத்துவிட்டனர். கோபத்தில் தன் மனைவிக்கு வாங்கிக்கொடுத்த செல்போனில் அவன் வைத்திருக்கும் ரிங்டோன், 'லூஸுப் பெண்ணே... லூஸுப் பெண்ணே... உன்மேலதான் லூஸா சுத்துறேன்’. உள்குத்து புரியாமல் அவன் மனைவி இதைப் பற்றி எல்லோரிடமும் பெருமையாகச் சொல்வதுதான் காமெடி!

- ஆர்.நாகராஜன், சென்னை-61  

ன் நண்பனைக் காட்டு. உன்னைப் பற்றிச் சொல்கிறேன் - பழமொழி. உன் மொபைலைக் கொடு, உன்னைப் பற்றி சொல்கிறேன்! - புதுமொழி.

இவ்வளவு திட்டின பிறகும், எப்படிம்மா 'எங்க சேவை உங்களுக்குத் திருப்தியா இருந்ததா?’னு கேக்குறீங்க... நீங்க வைகைப் புயலையே மிஞ்சிட்டீங்க!

- சுரேஷ் கிருஷ்ணா, மயிலாடுதுறை.

உங்கள் கவனத்துக்கு... வாசகர்களே, இப்படி செல்போன் தொடர்பான ஜாலி கேலி சந்தோஷ தருணங்களையோ, உருக்கமான நினைவுகளையோ பகிர்ந்துகொள்ள விருப்பமா? 'மிஸ்டு கால்’ என்று தலைப்பிட்டு ஆனந்த விகடன்,  757, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்கோ av@vikatan.com என்ற இ மெயில் ஐடி-க்கோ உங்கள் எண்ணங்களை அனுப்புங்கள். பிரசுரமாகும் கருத்துக்களுக்கு சன்மானம் உண்டு!

மிஸ்டு கால்