Published:Updated:

இதுதான்... இதற்குத்தான்... இப்படித்தான்!

மாற்றுத் திறனாளி சான்றிதழ் ?!

இதுதான்... இதற்குத்தான்... இப்படித்தான்!

மாற்றுத் திறனாளி சான்றிதழ் ?!

Published:Updated:

இக்ஸானுல்லா, விருதுநகர்.

இதுதான்... இதற்குத்தான்... இப்படித்தான்!

''என் நண்பன் பார்வைத்திறன் அற்றவன். அவனுக்கு மாற்றுத்திறனாளிச் சான்றிதழ் இல்லாததால், அரசு அளிக்கும் சலுகைகளைப் பெற முடியவில்லை; சான்றிதழ் பெற என்ன செய்ய வேண்டும்?''

''உங்கள் மாவட்டத்தில் இருக்கும் அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவக் குழுவை அணுகுங்கள். உங்கள் நண்பருக்கு பார்வைக் குறைபாடா அல்லது பார்வையே இல்லையா என்பதைச் சில பரிசோதனைகள் செய்து சொல்வார்கள். பிறகு, சான்றிதழ் அளிப்பார்கள். சான்றிதழ் பெறுவதில் அலைச்சலோ, சிரமமோ  ஏற்பட்டால், மாவட்ட மாற்றுத் திறனாளி மறுவாழ்வு அலுவலரைத் தொடர்புகொண்டு புகார் கூறுங்கள். மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழ் பெற்றால், அரசிடம் இருந்து பல சலுகைகள் கிடைக்கும். உங்கள் நண்பர் வசிக்கும் மாவட்டத்தில் 100 கி.மீ. தொலைவுக்குப் பயணம் செய்யும் அளவுக்கு இலவச பஸ் பாஸ் அளிக்கப்படும். ரயில் பயணம் செய்யக் கட்டணச் சலுகை வழங்கப்படும். 100 கி.மீட்டருக்கு மேல் பயணம் செய்தால், அவருடன் ஒரு நபரையும் பாதுகாப்புக்கு அழைத்துச் செல்லலாம். மாணவராக இருந்தால், கல்வி உதவித்தொகை, உயர் கல்வியில் ஒதுக்கீடு போன்ற சலுகைகள் கிடைக்கும். படித்து முடித்து வேலை இல்லாதவர்களுக்கும், வேலை தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கும் பராமரிப்புத் தொகையாக மாதம் 1,000 ரூபாய் கிடைக்கும். வேலைசெய்து சம்பளம் பெறுபவர்களுக்கு வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப் படும்.''

அரசு, கரூர்.

இதுதான்... இதற்குத்தான்... இப்படித்தான்!

''என் தம்பிக்கு 19 வயது. கல்லூரி மாணவன். சமீபகாலமாக அவன் யாருடனும் சரியாகப் பேசுவது இல்லை. எது கேட்டாலும் ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்லிவிட்டுக் கதவைச் சாத்திக்கொள் கிறான். கலகலவெனப் பேசும் அவன் இப்படி மாறிப்போனது அதிர்ச்சியாக இருக்கிறது. இது மனநலப் பிரச்னையா?''

''பிடிக்காத கோர்ஸில் சேர்த்துவிட்டீர்களா, பாடங்கள் கஷ்டமாக இருப்பதாக ஃபீல் பண்ணுகிறாரா, தேர்வு பயமா, காதல் பிரச்னையா என்று முதலில் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் தம்பியிடமே இதுபற்றித் தொடர்ந்து பேசாதீர்கள். தம்பியின் நண்பர்களிடம் அக்கறையோடு விசாரியுங் கள். உங்களுக்கும் உங்கள் தம்பிக்கும் நெருக்கமாக இருக்கும் குடும்ப நண்பரிடம் இதுகுறித்துக் கலந்து பேசி, தம்பியின் பிரச்னையைத் தீர்க்கப்பாருங்கள். முக்கியமாக, உங்கள் தம்பி சாப்பிடுகிறாரா, தூங்குகிறாரா என்று கண்காணியுங்கள். எந்த அளவுக்குப் பாதுகாப்பாக இருக்கிறார் என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். இது தீவிரமான மனச் சிதைவின் முன்னோட்டமாகக்கூட இருக்கலாம். உடனடியாகத் தக்க மருத்துவ கவுன்சிலரை அணுகுங்கள்!''

இதுதான்... இதற்குத்தான்... இப்படித்தான்!

சசி, வேலூர்.

இதுதான்... இதற்குத்தான்... இப்படித்தான்!

''நாள் முழுக்க என்னால் உற்சாகமாகவும் புத்துணர்வோடும் இருக்க முடியவில்லை. டல்லாக உணர்கிறேன். என்ன செய்யலாம்?''

''உங்களுடைய பழக்கவழக்கங்கள் - முக்கியமாக உணவு முறையை  மாற்றுங்கள். ரத்தசோகை இருந்தாலும் இந்தப் பிரச்னை ஏற்படலாம். அளவுக்கு மீறி உடல் எடையும் காரணமாக இருக்கலாம். அதிகாலையில் எழுவது, மூச்சுப்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகா, நல்ல சத்துமிக்க அளவான உணவு, நிறைய காய்-கனிகள்... இப்படி உங்கள் பழக்கங்களை மாற்றிக்கொள்ளுங்கள். அதேபோல, உங்களுக்கு என தினமும் ஒரு மணி நேரமேனும் ஒதுக்கிக்கொள்ளுங்கள். சந்தோஷமாக இருங்கள். ஒரு மாதம் இப்படி எல்லாம் இருந்தும் பிரச்னை நீடித்தால், மருத்துவரை அணுகுங்கள்.''

சித்ரா, மயிலாப்பூர்.  

''என் மகனுக்கு நான்கு வயது. அவனுக்கு டான்சில்ஸ் (தொண்டைச் சதைப் பிரச்னை) இருக்கிறது. இதற்கு என்ன தீர்வு?''

''டான்சில்ஸ் என்பது தொண்டையில் உள்ள ஒரு பகுதி. இது எல்லாக் குழந்தை களுக்குமே இருக்கக் கூடியது. இன்னும் சொல்லப்போனால், நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கக் கூடியது. எனவே, பிரச்னை சதை இல்லை. நாம் குழந்தைகளிடம் உருவாக்கும் தவறான உணவுப் பழக்கமே உண்மையில் பிரச்னை.

இதுதான்... இதற்குத்தான்... இப்படித்தான்!

குழந்தைகளுக்கு குளிர்பானங்கள், ஐஸ்க்ரீம், சாக்லேட்டுகள், பிஸ்கட்டுகள் என்று நாம் ஆசையாக வாங்கிக் கொடுக்கும் பொருட்கள்தான் பெரும்பாலும் சதையில் நோய்த்தொற்று ஏற்படக் காரணமாக அமைந்துவிடுகிறது. பொதுவாக, இந்த மாதிரியான பொருட்கள் வாயில் கடித்துத் தின்ன வாய்ப்பு தராதவை; சப்பிச் சாப்பிட ஏற்றவை. இதனால், அவை வாயில் ஒட்டிக்கொள்ளும். சரியாக வாய் கழுவாமல், பல் துலக்காமல், சுத்தம் செய்யா மல் விடும்போது, குழந்தைக்கு நோய்த்தொற்று ஏற்படும். இதுதான் பிரச்னைக்கு வழிவகுப்பதாக அமைகிறது.

டான்சில்ஸ் உள்ள குழந்தைக்கு நல்ல சத்துமிக்க ஆகாரமாக அளியுங்கள். தின்பண்டங்கள் தருவதைத் தவிருங்கள். பழங்கள் நிறையக் கொடுங்கள். சாப்பிட்ட உடன் வாய் கொப்பளிக்கச் செய்வதுடன் படுக்கச் செல்லும் முன் உப்பு போட்டுக் கொப்பளிக் கச் செய்யுங்கள். சளி பிடிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஒருவேளை தொண்டைச் சதையில் தொற்று ஏற்பட்டு சளித் தொல்லை வந்தால், நல்ல மருந்துகள் பலன் அளிக்கும். 12 வயதாகும்போது டான்சில்ஸ் பிரச்னை தானாகவே போய்விடும்!''

ஹேர்பின் முதல் ஹேக்கிங் வரை... ஆரோக்கியம் முதல் அரசாங்க நடைமுறைகள் வரை... எதைப் பற்றிய உங்கள் சந்தேகங்களையும் 044-66802910 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பதிவு செய்யுங்கள். உங்களுக்கு உதவக் காத்திருக்கிறோம்!