ப்யூஸ் மானுஸ். இயற்கை பாதுகாவலர், சமூகப் போராளி, பிறப்பால் வட இந்தியராக இருந்தாலும் தமிழின் மீதும், தமிழர்கள் மீதும் பற்றுகொண்டவர். காவிரியை மாசுபடுத்தும் பன்னாட்டு நிறுவனம் மால்கோவுக்கு எதிராகத் தொடர் போராட்டங்களை நடத்துபவர். இவர் தான் வாழும் சேலம் நினைவுகளை இங்கே பகிர்ந்து கொள்கிறார்.

''மலைகளும் ஓடைகளும் நிறைந்த பகுதி சேலம். சேலம் நகரில் இருந்து அஞ்சு கிலோ மீட்டர் தூரம் எந்தத் திசையில் பயணிச்சாலும் மலை அடிவாரம் வந்திடும். என் சின்ன வயசுல ராஜாராம் நகரில் குடி இருந்தோம். அந்த இடம்தான் என் வாழ்க்கையில் மறக்க முடியாத இடம். ஏன்னா, அந்தப் பகுதியில்தான் நாங்கள் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்துவந்தோம். ஒருமுறை வீட்டில் அம்மாவுக்கு உடம்பு சரி இல்லாமல் போய்விட்டது. டாக்டர்வந்து பார்த்துவிட்டு, வட இந்திய உணவு முறையை மாத்தி, தமிழ்க் கலாசார உணவு வகைகளான தானிய உணவுகளைச் சேர்த்துக்கொள்ளச் சொன்னார். அப்போது இருந்து, இன்றுவரைக்கும் எங்க குடும்பத்தில் பழந் தமிழர் உணவு வகைகளான கேழ்வரகுக் களி, தினை மாவு தோசை, கம்பு ரொட்டி இவைகளைத்தான் சாப்பிடுகிறோம்.

அம்மாபேட்டையில் உள்ள ஹோலி கிராஸ் ஸ்கூல்லதான் ப்ளஸ் டூ வரைக்கும் படிச்சேன். அந்தப் பள்ளியில் ஃப்ரான்ஸ் கென்னடியன் பிரதர் ஆசிரியராக இருந்தார். அவருக்கு ஜனநாயகத்தின்மீது நம்பிக்கையும் பற்றும் அதிகம். தினமும் இந்திய ஜனநாயகத்தைப்பற்றி பாடம் எடுப்பாங்க. பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் ஓட்டு எடுப்பு நடத்தித்தான் வகுப்புத் தலைவரைத் தேர்ந்து எடுப்பாங்க. எங்க தாத்தா காலத்தில், சேலத்தில் கோடைகாலம் தவிர்த்து, மற்ற நாட்களில் மாலை ஆறு மணிக்குமேல் பனிமழை பொழியுமாம். ஊட்டி, கொடைக்கானல் மாதிரி குளிரும், மழையும் அடிக்கடி இருக்குமாம். பொதுவாவே எல்லோரும் அப்போ ஸ்வெட்டர் போட்டுட்டுத்தான் இருப்பாங்களாம். ஆனால், அப்படி இருந்த சேலம் இப்போ வெயில் தகிக்கும் ஊராகிடுச்சு.

சேர்வராயன் மலை, கல்வராயன் மலை, நாம மலை, ஊத்து மலை ஆகிய மலைகளில் இருந்து வழிந்தோடும் சிற்றோடைகள் ஊரைச் சுத்தி ஓடிச்சு. குமரகிரி ஏரி, கன்னங்குறிச்சி முக்கன் ஏரி, பள்ளப் பட்டி ஏரினு ஊருக்குள்ளே ஏராளமான ஏரிகள் நிரம்பி வழிந்த ஊர் இது. இன்னைக்குப் பல ஏரிகள் அழிஞ்சுபோச்சு. குமரகிரி ஏரியும் கன்னங்குறிச்சி முக்கன் ஏரியும்தான் ஓரளவு அழியாம இருக்கு.

எனக்கு சுற்றுச்சூழல் மீதும் இயற்கை மீதும் ஆர்வமும் அக்கறையும் அதிகம். அதனால், சேலத்தை மீண்டும் பழையபடி இயற்கைச்சூழலுக்குக்கொண்டு வரணும்னு நினைச்சேன். பாழ்பட்டுப் போன ஏரிகளையும் கட்டடங்களால் புதையுண்டுபோன ஓடைகளையும் மீட்கணும்னு ஆசைப்பட்டேன். நான் சுற்றித் திரிந்த கந்தாஸ்ரமம், நாகமலை, பெருமாள் கரடு, ஏற்காடு, கருமந்துறை, வெள்ளிமலை எனப் பல இடங்களில் மரங்கள் நடத்தொடங்கினேன். இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மரக் கன்றுகளை நட்டு இருக்கிறேன். அதில் பாதிக்கும் அதிகமான மரங்கள் மிகப் பிரமாண்டமாக வளர்ந்து நிற்கின்றன.

புதர்மண்டிப் போய், பாழடைந்துகிடந்த கன்னங்குறிச்சி ஏரியை தூர்வாரி சுத்தப்படுத்தினேன். அப்போது கலெக்டராக இருந்த சந்திரகுமார் என்னை கூப்பிட்டு அந்த ஏரியைத் தத்து எடுத்துப் பாதுகாத்து, பராமரிக்கச் சொன்னார். அரசிடம் முறையாக அனுமதி வாங்கி 58 ஏக்கர் பரப்பளவுள்ள ஏரியைத் தத்து எடுத்தோம். கடலுக்கு நடுவில் இருக்கிற தீவுகளைப்போல ஏரியில 45 மண் திட்டுகளை உருவாக்கி, அங்கு பல்வேறு மரங்களை நட்டோம். இப்போ ஏரியில இருந்து அந்தத் தீவு, காடுகளைப் பார்க்கிறது கண்கொள்ளா காட்சியா இருக்கு. இப்போ ஆயிரக்கணக்கான பறவைகள் கூடுகட்டி இனப் பெருக்கம் பண்ணுதுங்க. சேலத்தில் இதுபோல எட்டு ஏரிகளை தூர்வாரி அழகுபடுத்தி, பாதுகாத்து இருக்கிறோம். சேலத்தில் உள்ள ஒவ்வொரு இடமும் என் உடலின் உறுப்புகள்போல. நம் உடலை நோய்வராமல் பாதுகாப்பது நம் கடமை. அதேபோல் நாம் வாழும் ஊரின் இயற்கையைக் காத்து, அழிவில் இருந்து பாதுகாப்பதும் நம்முடைய கடமையே. என்னைப்போலவே ஒவ்வொரு சேலம்வாசியும் தங்கள் சொந்த மண்ணை பேணிக் காத்தால் உலகுக்கே முன்னோடியாகும் என் ஊர்!''

சந்திப்பு: வீ.கே.ரமேஷ்

படங்கள்: எம்.விஜயகுமார்