'' 'நாமக்கல் கவிஞர்’ போன்ற பெரிய கவிஞர்கள் பிறந்த ஊர் நாமக்கல். இந்த ஊரில் பிறந்துவிட்டு கவிதை எழுதவில்லை என்றால், பிறந்து என்ன பயன்?'' சிரித்தபடியே பேச ஆரம்பித்தார் கவிஞர் ஜெய்கணேஷ். நாமக்கல் மாவட்டம், நல்லபாளையம் கிராமத்தைச் சேர்ந்த இவருடைய சமீபத்திய கவிதைத் தொகுப்பான 'காதல்வாசிகள்’ புத்தகத்தை அரசு, அனைத்து நூலகங்களிலும் இடம் பெறச் செய்திருக்கிறது.அவரிடம் பேசினேன்.

''திருமணத்துக்கு முன்பு, நிறைய கவிதைகள் எழுதி வீட்டில் வைத்துஇருந்தேன். திருமணம் ஆனவுடன் அந்தக் கவிதைகளைப் படித்த என் மனைவி, ' தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிடுங்களேன்’ என்றார். அந்த ஆலோசனைதான் தற்போது என்னை கவிஞன் என்று அடையாளப்படுத்தியுள்ளது. மனைவி கூறியபிறகு, ஒரு வருஷம் எல்லா பதிப்பகத்திலும் ஏறி இறங்கினேன். ஆனால், புதியவன் என்பதால் யாரும் என் படைப்பை அங்கீகரிக்கவில்லை. என் கவிதைத் தொகுப்பைப் படித்த கோவை விஜயா பதிப்பகத்தினர், தொகுப்பை வெளியிட்டனர். அதற்குக் கவிஞர் பா.விஜய் அணிந்துரை எழுதிக் கொடுத்தார். என்னுடைய மூன்று கவிதைத் தொகுப்புக்கும் பா.விஜய்தான் அணிந்துரை எழுதித் தந்தார். 'காதல்வாசிகள்’ தொகுப்புக்குப் பிறகு, என்னுடைய இரண்டாவது தொகுப்பான, 'நட்பின் முகவரி’ என்னை மேலும் செதுக்கியது. இந்தத் தொகுப்பைச் சிறந்த கவிதைத் தொகுப்பாக நாமக்கல் கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை தேர்வு செய்தது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியராக சகாயம் இருந்தபோது மரம் வளர்க்கும் விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் 'உன் வாழ்நாளில் நீ நட்டு வளர்க்கும் ஒவ்வொரு மரமும் உனக்கு போதி மரமே’ என்று ஒரு கவிதை எழுதிக்காட்டினேன். அந்த வரிகளைப் பாராட்டிய சகாயம், 'இதையே மரம் வளர்க்கும் விழிப்பு உணர்வு வாசகமாகப் பயன்படுத்தலாம்’ என்றார்.

என்னுடைய முதல் தொகுப்பான 'காதல்வாசிகள்’ ஆயிரக்கணக்கான பிரதிகள் விற்று தற்போது இரண்டாம் பதிப்பாக விற்பனையாகிக்கொண்டு இருக்கிறது. ஒரு சிறந்த திரைப்பட பாடலாசிரியராக வருவதே என் லட்சியம்'' என்றார் நம்பிக்கையுடன்!

- ம.சபரி

படங்கள்: மகா.தமிழ்ப்பிரபாகரன்