சமீபத்தில் எக்கோ ஃப்ரி சோலார் ரிக் ஷாவை அறிமுகப்படுத்திய சிவராஜை என் விகடனில் படித்து இருப்பீர்கள். அடுத்ததாக சிவராஜ் புதியதாகக் கண்டுபிடித்து, செயல்படுத்திவரும் புதிய கான்செப்ட், 'ஹாங்க்வெர்டைசிங்’ (Hangvertising). அதென்ன ஹாங்க்வெர்டைசிங்... வாயில் நுழையாத பெயராக இருக்கிறதே... அவரிடமே பேசினேன்.

''புதுசு புதுசா, அதுவும் சுற்றுச்சூழல் பாதிப்பு அடையாத வகையில் ஏதாவது கண்டுபிடிச்சுக்கிட்டே இருக்கணும்கிறதுதான் என் ஆசை. அதுதான் இப்படி வித்தியாசமான கான்செப்ட்டாக முயற்சி பண்றேன். 'ஹாங்க்வெர்டைசிங்’ என்கிற கான்செப்டை முதன்முதலில் அறிமுகப்படுத்துவது நான்தான். இது ஒருவகையான நேரடி மார்க்கெட்டிங் உத்தி.

சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில் இருக்கிற சலவையகங்கள்தான் எங்கள் இலக்கு. இங்கே இருக்கிற கார்ப்பரேட் கம்பெனிகளில் வேலை பார்க்கிற பலரும் சலவையகங்களில்தான் தங்களோட ஆடைகளைக் கொடுக்கிறாங்க. நாங்க அந்த சலவையகங்களுக்கு ஹேங்கர் மற்றும் அந்த ஹேங்கரில் மாட்டப்பட்ட விளம்பர அட்டைகளை சப்ளை பண்ணிடுவோம். (பார்க்க படம்) சலவையகங்கள் தங்களோட வாடிக்கையாளருக்குத் துவைத்து, இஸ்திரிசெய்த ஆடையை டெலிவரி செய்யும்போது எங்களோட ஹேங்கர் மற்றும் விளம்பர அட்டைகளோட டெலிவரி செய்வாங்க. விளம்பர கம்பெனிகள் எங்களுக்குப் பணம் கொடுத்துடுவாங்க. அதில் குறிப்பிட்ட சதவிகிதத்தைச் சலவையகங்களுக்குக் கொடுக்கிறோம்.

இந்த விளம்பர அட்டைகளை, 'கப்பா போர்டு’ என்கிற ரசாயனக் கலப்பு இல்லாத எக்கோ ஃப்ரீ அட்டை மற்றும் பிரின்டிங்கில் அழகாக வடிவமைத்து இருக்கிறோம். இதன் மூலம் விளம்பரம் நேரடியாக வாடிக்கையாளர்களின் இல்லங்களைச் சென்றடையும். அவர்கள் அதைப் பார்க்கும்போது எல்லாம் அந்த விளம்பரம் எளிதில் மனதில் பதியும். இந்த கப்பா அட்டை தடிமனானது. எளிதில் கிழிக்கமுடியாது. மறு சுழற்சிக்கு உட்பட்டது. பெங்களூருவில் இந்தத் திட்டம் தற்போது வெற்றிகரமாகச் செயல்பட்டுவருகிறது. நிறைய கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களோட விளம்பரங்களை எங்களிடம் அச்சடிக்க ஆர்வம் காட்டுறாங்க!'' என்கிறார்!

சபாஷ் சிவராஜ்!

- கி. விக்னேஷ்வரி