கி.குரு, சென்னை-34.

''திரையரங்குகளில் ஸ்நாக்ஸ், தண்ணீர் எடுத் துச் செல்லத் தடை விதிக்கிறார்கள். அங்கு கேன்டீனில் விலையும் பல மடங்கு அதிகம். தவிர, ஃபுட் கார்டு என்ற பெயரிலும் கொள்ளை அடிக்கிறார்கள். இதற்கு விமோசனமே கிடையாதா?''

''திரையரங்க கேன்டீன்கள் என்பவை உணவகங்கள் அல்ல; அவை கடைகள் மட்டுமே. அதனால், ஒரு பொருளில் அதிகபட்ச சில்லறை விலையாக என்ன குறிப்பிட்டு இருக்கிறார்களோ, அந்த விலைக்குத்தான் விற்க வேண்டும். உட்காரவைத்துப் பரிமாறும் சேவை இருந்தால் மட்டுமே குறிப்பிட்ட சதவிகிதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம். பெரிய மால்களில் உள்ள திரையரங்குகளில் 'ஃபுட் கோர்ட்’ பகுதிக்குச் செல்லவே நுழைவுக் கட்டணம்போல 'ஃபுட் கார்டு’ என்ற பெயரில் 20 ரூபாய் வசூலிக்கிறார்கள். இப்படிப்பட்ட இடங்களில் பெரும்பாலும் 200 ரூபாய் கொடுத்து ஸ்நாக்ஸ் வாங்கினால், மீதி 30 ரூபாய் இருந்தால், அதைத் தருவது இல்லை; மறுமுறை வரும்போது அதைக் கழித்துக்கொள்ளச் சொல்கிறார்கள். இதுவும் சட்டத் துக்குப் புறம்பான வணிகம்தான். திரை யரங்க மேலாளர் அல்லது உரிமையாள ரிடம் சுட்டிக்காட்டுங்கள். அவர்கள் அலட்சியம் செய்தால், நுகர்வோர் பாதுகாப்புத் துறையில் புகார் அளியுங்கள்; நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடருங்கள்!''

எஸ்.தீபா, திருச்சி-5.

''நான் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கிறேன். எனக்கு சுமார் 20 ஆண் நண்பர்கள் இருக்கிறார்கள். இதனால், என் தோழிகள் என்னைத் தவறாக நினைக்கிறார்கள். ஒரு பெண்ணுக்கு நிறைய ஆண் நண்பர்கள் இருப்பது தவறா?''

''ஆண் நண்பர்கள் இருப்பது தவறு இல்லை. அந்த நட்பு எல்லை மீறினால்தான் தவறு. நட்பிலும் பொசஸிவ்னெஸ் வரும். அது வந்தால், உங்கள் நட்பைப் பார்க்கும் உங்கள் தோழியின் பார்வை வேறு மாதிரியாக இருக்கும். அதுவேகூட உங்கள் தோழிகளை இப்படிப் பேசவைக்கலாம். ஆனால், நீங்கள் சுமார் 20 நண்பர்கள் என்று கூறுவதில் இருந்து பெரிய குரூப்பாக இருப்பது தெரிகிறது. இது ஆரோக்கியமானது இல்லை; பெரும்பாலும் ஆபத்தானதாக அமையலாம். எனவே, பழகும் முறையை வரையறுத்துக்கொண்டு, எச்சரிக்கையுடன் உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்!''

எல்.கணேசன், திருப்பூர்.

''நான் 25 வயது இளைஞன். என் மாத வருமா னம் ரூ.18,000. மாதம் 5,000 ரூபாய் சேமிக்க முடியும். நான் எந்த வழியில் சேமிப்பது?''

''ஒருவர் வாழ்க்கையில் செய்ய வேண்டிய முதல் சேமிப்பு, காப்பீடு. ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடு பாலிசிகளை எடுத்துக்கொள்ளுங்கள். இது சேமிப்பு அல்ல; முக்கியமானப் பாதுகாப்பு. இவை இரண்டையும் செய்த பிறகு, மிஞ்சும் தொகையை மூன்றாகப் பிரித்துக்கொள்ளுங்கள். முதல் தொகை எப்போது வேண்டுமானாலும், பணத்தை எடுக்கத்தக்க வகையிலான சேமிப்புக் கணக் கில் இருக்கட்டும். அதாவது, வங்கியிலோ, அஞ்சலகத் திலோ. இரண்டாவது தொகை நம்பகமான இடங்களில் சீட்டுத் திட்டத் திலோ, பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டத்திலோ இருக்கட்டும். மூன்றாவது தொகை தங்கத்திலோ, மனை வாங்கு வதற்கான சேமிப்பிலோ இருக்கட்டும்!''

ம.மாரிமுத்து, தூத்துக்குடி.

''நான் ப்ளஸ் டூ படிக்கி றேன். தமிழ் இலக்கியம் படிக்கலாம் என்று இருக்கி றேன். ஆனால், 'வீட்டில் பொறியியல் படி; தமிழ் இலக் கியம் படித்தால் நிச்சயம் வேலைவாய்ப்பு இல்லை’ என்கிறார்கள். உண்மையா?''

''ஒரே விஷயத்தை மன தில் வைத்துக்கொள்ளுங் கள். நீங்கள் எந்தப் படிப் பைத் தேர்ந்தெடுத்தாலும் சரி; அதை முழுமையாகப் படித்தால், பணி வாய்ப்புகள் உங்கள் காலடியில். இன்றைய சூழலில், தமிழில் நாலு வரிகள்கூடப் பிழை இன்றி எழுதத் தெரியாதவர்களாலேயே நம் சமூகம் நிரம்பி இருக்கிறது. இத்தகைய சூழலில், எதிர்காலத்தில் தமிழில் நல்ல ஆளுமை உள்ளவர்களுக்குப் பெரிய மரியாதை கிடைக்கும். தவிர, ஆசிரியர், பேராசிரியர் பணிகள், பத்திரிகைத் துறையில் நிருபர், பிழை திருத்துநர், உதவி ஆசிரியர் பணிகள், தொல்லியல், ஓலைச் சுவடியியல் என்று நிறைய துறைகளில் ஏற்கெனவே தமிழ் படித் தோருக்குப் பிரகாசமான வாய்ப்புகள் இருக் கின்றன. தமிழில் படித்தவர்களுக்கு அரசுத் துறை வேலைவாய்ப்பிலும் 20 சதவிகிதம் முன்னுரிமை உண்டு. ஆகையால், நன்றாகப் படித்தால், தமிழ் உங்களை உயர்த்தும்!''