21-ம் நூற்றாண்டின் இலக்கிய ஆளுமைகளில் முக்கியமானவர். எழுத்தாளர்களின் எழுத்தாளர். தமிழ் சமூகத்தை அடுத்த தளத்துக்குக் கொண்டு போன அபூர்வ கலைஞன், அழகு கர்வன் ஜெயகாந்தனின் பெர்சனல் முகம் இங்கே...

சங்கீதத்தில் ஜே.கே-வுக்கு ரொம்ப இஷ்டம். கர்னாடக இசைக்கு இணையாக மேற்கத்திய இசையையும் விரும்புவார். ஏகாந்தத் தருணங்களில் குரலெடுத்துப் பாடுவதும் உண்டு.

நீச்சல் நிறையப் பிடிக்கும். சில ஆண்டு காலம் முன்பு வரைகூட அடிக்கடி நீந்தினார்.

அசைவ உணவுகளை ரசித்து, விரும்பிச் சாப்பிட்ட காலம் இருந்தது. குறிப்பாக, தலைக் கறியும் முருங்கைக் கீரையும் கலந்த க்ரேவி. இப்போது எல்லாவற்றையுமே குறைத்துக்கொண்டார். ஆனால், எப்போதுமே குறைவாக உணவு சாப்பிடுவதே அவருக்குப் பிடித்தமானது.

உடற்பயிற்சியில் ஆர்வம் உண்டு. யோகாசனமும் அத்துப்படி. உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வார். நோஞ்சான் நண்பர்களின் முதுகில் பலமாகச் சாத்தி, தனது ஆர்ம்ஸ் காட்டி ஆரோக்கியத்தை வலியுறுத்துவார்.

நண்பர்கள் அதிகம். நட்பைப் போற்றுவதில் அக்கறை அதிகம். அவருடைய பிறந்த நாளைக்கூட நண்பர்கள்தான் விரும்பி வீட்டுக்கு வந்து கொண்டாடுவார்கள். தயங்கினாலும் அவர்களின் அன்புக்காகக் கட்டுப்படுவார் ஜே.கே.

சிபாரிசு, அலட்சியம், ஊதாரித்தனம், கடன் கொடுக்கல் - வாங்கல், மிகை அலங்காரம்... இவை சிங்கம் முகம் சிவக்கும் விஷயங்கள்.

நமக்கு ஜெயகாந்தனாக அறிமுகமாவதற்கு முன் அவர் பார்க்காத வேலை கிடையாது. எழுதிக்கொண்டே இருந்தால் பட்டியல் நீளும். மளிகை கடைப் பையன் தொடங்கி ஜட்கா வண்டிக்காரரிடம் உதவியாளர் வரை இருந்து, பின்னர் பத்திரிகை புரூஃப் ரீடர் வேலை பார்த்து, கடைசியில் முழு நேர எழுத்தாளர் ஆனவர்.

ஜே.கே-வுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். காதம்பரி, ஆசிரியை. தீபா, கணினித் துறையில் இருக்கிறார். மகன் ஜெயசிம்மன், செய்தியாளர்.

ஜெயகாந்தன் முகநூலில் இல்லை. ஆனால், அவருடைய அகம் அறிந்த அரிய நண்பர்கள் அவர் பெயரில் இயங்குகிறார்கள். ஜே.கே-யின் படைப்புகள்பற்றிய பார்வை அதில் வருவது உண்டு.

உடைகளில் ஜெயகாந்தன் அதிக கவனம் செலுத்துவார். பொருந்தா உடை பிடிக்காது. இளமையில் இருந்து தொடரும் பழக்கம் இது.

ஜெயகாந்தன் பிறந்த ஊர் கடலூர். இப்போது அவருக்கு வயது 78. அன்று தொடங்கி இன்று வரை ஜே.கே. எந்நேரமும் உணர்வுபூர்வமாகவே இயங்குகிறார். சுகாதாரத்தை மிகவும் விரும்புபவர், வீட்டுக்கு உள்ளும் காலணியுடனே உலவுகிறார்.

சினிமா கிசுகிசு, குற்றங்கள் தொடர்பான செய்திகளைப் படிக்க மாட்டார். அப்படிப்பட்ட செய்திகள் மன அமைப்பைக் கெடுத்துவிடும் என்பார்.

கண்டிப்பானவர்தான். ஆனால், குழந்தைகளிடம் கனிவானவர். குழந்தைகளுடன் பாடியும் ஆடியும் குழந்தையாகிப்போவார். இவர் கண் முன் யாராவது குழந்தையை அடித்துவிட்டால், மனம் வருந்துவார்.

வளர்ப்புப் பிராணிகள் மீது இஷ்டம் இல்லை. யாருடைய சுதந்திரத்தையும் நாம் பறிக்கக் கூடாது என்பார்.

ரஷ்யா, அமெரிக்கா, மலேசியா... இந்தியா வைத் தாண்டி ஜே.கே. கால் பதித்த பாக்கியம் இந்த நாடுகளுக்குத்தான் கிடைத்தது.

'எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன்’ என்கிற ஜெயகாந்தன் குறித்த ஆவணப்படம், கவிஞர் ரவி சுப்ரமணியன் இயக்கத்தில் வெளியானது. இந்தப் படத்துக்கு இசை, தயாரிப்பு இளையராஜா. இந்த ஆவணப்படம் உலகெங்கும் இருக்கிற அமெரிக்க நூலகங்களில் வைக்கப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ரெஃபரன்ஸ் பகுதியிலும் உள்ளது.

ஜே.கே-வின் 'உன்னைப் போல் ஒருவன்’ திரைப்படம் 1964 -ல் குடியரசுத் தலைவர் விருது பெற்றது. அவரிடம் நிருபர்கள் 'இந்தப் படம் 100 நாள் ஓடுமா எனக் கேட்டதற்கு, 'இந்தப் படம் 100 நாள் ஓடுவதற்கு எடுக்கப்பட்ட படம் அல்ல; 100 வருஷம் பேசுவதற்காக எடுக்கப்பட்ட படம்’ என்றார்.