"பறை ஒலியால்
மனம் மகிழும் மாமா

என் பாச ஒலியை
மறுதலிக்கலாமா?

தாள வகையைப் பிரிச்சு
ஆளும் மாமா

என் தாலிக் கொடிக்குக்
காலம் தாழ்த்தலாமா?

பறை ஓசை சத்தம்
என் பாச மாமன் முத்தம்''

- பறை இசையில் காதலும் சாத்தியம் என்கிறது புத்தர் கலைக் குழு!

பறை இசையை எங்கும் பரப்புவதே இவர்களின் வாழ்நாள் நோக்கம். ''பறை, சாவுக்கான கலை இல்லை; அது வாழ்வுக்கான கலை. பறை, ஒரு சாதிக்கான கலை இல்லை. அது ஆதிக்கம் அறுக்க வந்த ஆதிக் கலை. ஆனால், நடைமுறை யில் தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமே பறை இசைக்க வற்புத்தப்படுகின்றனர். ஏன், ஒரு வன்னியர், தேவர், பிள்ளைமார், செட்டியார், ஐயர், நாடார், கவுண்டர், நாயக்கர் இவர்கள் எல்லாம் பறை இசைக்கக் கூடாதா? இந்த ஆதிக் கருவி நம் அனைவருக்கும் சொந்தம். வாருங்கள், சாதி ஒழிப்பின் முதல் அடியைப் பறை முழக்கத்துடன் தொடங்கிவைப்போம்!'' - அழுத்தம் திருத்தமாகப் பேசுகிறார் மணிமாறன். 'புத்தர் கலைக் குழு’வை உருவாக்கி, ஊர் ஊராகத் தன் குழுவினருடன் பறை இசையைப் பரப்பிவருபவர். இவருடைய மனைவி மகிழினி பாடல்கள் பாட, மகன்கள் சமரன், இனியன் பறை முழக்கம் செய்ய... மொத்தக் குடும்பத்தையும் குழுவில் இணைத்துக்கொண்டு, வேடந்தாங்கலில் இருந்து எல்லாத் திசைகளுக்கும் பறக்கிறது இந்தக் குழு!

''சென்னை கோடம்பாக்கத்தில் பிறந்து, வளர்ந்தேன். நினைவு தெரிந்த நாளில் இருந்து கானா பாட்டுதான் எனக்கு உயிர். 10 வயதிலேயே கானாவுக்கு டோலாக்கு இசைப்பது, பறை அடிப் பது என்று அந்தக் கலைஞர்களுடன் ஒன்றி விட்டேன். இப்போது கானாவில் பிரபலமாக இருக்கும் கானா உலகநாதன், கானா பழனி எல்லோருக்கும் டோலாக்கு வாசித்து இருக்கிறேன். அந்த வயதில் அது உற்சாகமாக இருக்கும். பெரும்பாலும் சாவு வீடுகளில்தான் கானா பாட வேண்டும். சடலத்தை வைத்துக்கொண்டு, அவர் எத்தனை கெட்டவராக இருந்தாலும், அவரைப் போற்றி புகழ்ந்து பாட வேண்டும். இதில் கானாக் குழுக்களுக்கு இடையே போட்டியே நடக்கும். அதில் பழகிப் பழகி... பறை இசைப்பது டன் எனக்குப் பாடல் எழுதுவதும் கைவந்தது.

பிறகு, சிவகங்கையில் அழகர்சாமி வாத்தியாரிடம் பறை இசைப் பயிற்சி எடுக்கப் போனேன். அவர்தான் எனக்கு ஆசான். அவர் அனைத்தையும் சொல்லித் தந்தார். கிளுகிளுப்பை, தமுறு, கால் சலங்கை, தூம்பு, பறை ஆகிய ஐந்தும் சேர்ந்ததுதான் ஒரு முழுமையான பறை இசை. ஒவ்வொரு வட்டாரத்துக்கும் ஓர் ஆட்டம் உண்டு. ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஓர் அடி உண்டு. சென்னையில் சாவுக்கு அடிப்பதை 'ஒத்தையடி’ என்பார்கள். இதைக் கல்யாண வீட்டுக்கோ, கோயில் திருவிழாவுக்கோ அடிக்க முடியாது.

பிறகு சென்னை வந்து சில காலம் கழித்து மெள்ள மெள்ள நானே ஒரு குழுவை அமைக்கும் முயற்சியில் இறங்கினேன். என்னிடம் பறை கற்க வந்த மகிழினிக்கும் எனக்கும் காதல். திருமணமாகி குழந்தைகள் பிறந்த பிறகு குடும் பத்துடன் பல நிகழ்ச்சிகளுக்குப் போவோம். குடும்பம் சகிதமாகப் பறை அடிக்கும் எங்களைப் பலரும் வித்தியாசமாகப் பார்த்தார்கள். ஆனால், நாங்கள் எங்கள் நோக்கத்தில் தெளிவாக இருந் தோம். பிறகு ஆர்வம் உள்ள பலரையும்இணைத்துக் கொண்டு 'புத்தர் கலைக் குழு’வாகச் செயல் படத் தொடங்கினோம்.

இப்போது எங்கள் குழுவில் 25 பேர். அதில் 12 பேர் முழு நேரக் கலைஞர்கள். இதில் பெண்களும் உண்டு. மீதி பேர் வேலை பார்த்துக்கொண்டே பறை இசைக்க வருகின்றனர். எங்களுக்கு என சில விதிமுறைகள் இருக்கின்றன. நாங்கள் ஒருபோதும் - எத்தனை ஆயிரம் ரூபாய் கொட்டிக்கொடுத்தாலும்கூட - சாவுக்குப் பறை அடிக்க மாட்டோம். ஒரு மனிதன் இறந்தால், பறை இசைத்து வழி அனுப்பிவைப்பது மனித குலத் தின் ஆதி மரபுதான். செத்த வனுக்கு உயிரோடு உள்ளவன் பறை அடிக்க வேண்டும், அவ் வளவுதான். ஆனால் நடை முறையில் பறையர், புதிரை வண்ணார், அருந்ததியர் ஆகிய மூன்று சாதி யினர் மட்டும்தான் பறை அடிக்கின்றனர். ஏன் மற்ற சாதியினர் அடித்தால் குடியா மூழ்கிவிடும்? இதனால்தான் நாங்கள் சாவுக்குப் பறை அடிப்பதைத் தவிர்க்கிறோம்.

கோயில் திருவிழாக்களில், குடும்ப நிகழ்ச்சிகளில், கட்சி நிகழ்ச்சிகளில், அரசியல் கூட்டங்களில் பறை இசைக்கிறோம். எந்த மேடையாக இருந்தாலும், 'எமது பறை ஒலி சாவுக்கானது அல்ல; வாழ்வுக்கானது. எமது பறை முழக்கம் சாமிகள் ஆடுவதற்கு அல்ல; ஆதிக்கம் ஆட்டம் காண்பதற்கு. ஓங்கி அடிப்பதில் கிழியட்டும், பறைகள் அல்ல; இந்திய சாதிகள்’ என்றுச் சொன்ன பிறகுதான் நிகழ்ச்சியையே தொடங்குவோம். திருவிழா, கட்சி நிகழ்ச்சிகளில் நாங்கள் உரிமையுடன் பேரம் பேசுகிறோம். 25 ஆயிரம் கேட்டால், '20 ஆயிரத்துக்கு செய்துத் தாருங் கள்’ என்று பேரம் பேசுகிறார்கள். இதை பொரு ளாதாரக் கணக்குக்காக சொல்லவில்லை... இத்தனை ஆண்டு கால பறை இசைக் கலைஞர்களின் வரலாற் றில் பேரம் பேசும் அதிகாரம் எங்க ளிடம் இருந்தது இல்லை. அது ஆதிக்கச் சக்திகளிடம் இருந்தது. ஆண்டைகள் கொடுப்பதைக் குனிந்து வாங்கிக்கொண்டு, ஊத்திக் கொடுப்பதை மறைவாகக் குடித்துவிட்டு, ஆக்ரோஷமாகப் பறை அடித்துவிட்டு வந்தவர்களின் வரலாற்றில் இது திருப்புமுனை. நாங்கள் அனைவரும் படித்து இருக்கிறோம். பட்டப்படிப்பு முடித்த பல கலைஞர்கள் எங்கள் குழுவில் இருக்கிறார்கள். நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை உணர்ந்தே செய்கி றோம்.

இப்படி நிகழ்ச்சிகள் நடத்துவதில் கிடைக்கும் பணத்தின் ஒரு பகுதியைச் சமூகத்துக்காக செலவிடுகிறோம். குறிப்பாக, கிராமத்தின் குடிசைப் பகுதிகளுக்குச் சென்று விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள் நடத்துகிறோம். ஆடல், பாடல், இசை எல்லாம் அதில் இருக்கும். பெரும்பாலும் படிப்பின் அவசியத்தை வலியுறுத்துவதாக அந்த நிகழ்ச்சிகள் அமையும். ஏனெனில், தலித் மக்கள் கல்வியில் பின்தங்கி இருக்கின்றனர். தலித் மக்களை நோக்கி ஏவப்படும் பல்வேறு கீழ்த்தரமான தாக்குதல்களை எதிர்கொள்ள கல்வி உதவும் என்று நம்புகிறோம். ஆகவே, அதற்கு முன்னுரிமை தருகிறோம்.

மேல்மருவத்தூரில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் 'பறை ஞாயிறு’ என்று பறை இசைப் பயிற்சி வகுப்புகள் நடத்தினோம். வட மாவட் டங்களைச் சேர்ந்த பல்வேறு சாதிகளைச் சேர்ந்த மாணவர்களும் அதில் கலந்துகொண்டு பறை இசைக்கக் கற்றுக்கொண்டனர். ஓர் ஆரோக்கியமான மாற்றத்தை கண் முன்னே கண்டோம். சில நடைமுறைப் பிரச்னைகளால் ஆறு மாதங்களுக்கு மேல் வகுப்பைத் தொடர முடியவில்லை. பள்ளித் தேர்வு விடுமுறை நாட் களில் 'பறைப் பள்ளிக்கூடம்’ என்ற பெயரில் மாணவர்களுக்குப் பயிற்சி கொடுக்கிறோம். கடைசியாக நாங்கள் நடத்திய பயிற்சியில் மாநிலம் முழுவதும் இருந்து 62 மாணவர்கள் பங்கேற்றனர். அதிலும் பல சாதிகளைச் சேர்ந்த வர்கள் பயிற்சி பெற்றார்கள். மறுபடியும் மறுபடி யும் பறையைப் பறையர் கையிலும், அருந்ததியர் கையிலும் தராமல், அதை அனைவருக்கும் பொதுவான இசைக் கருவி யாக மாற்ற மெனக்கெடுகிறோம்.

பிப்ரவரி 14-ம் தேதி, காதலர் தினத்தை இந்துத்துவ சக்திகள் எதிர்க்கின்றன. காதல் திருமணம் தான் சாதியைக் கடந்துவர உதவும் என்பதால், நாங்கள் அதை ஆதரிக்கிறோம். அதனால், விருத்தாச்சலத்தில் சாதி வெறியால் கொல்லப்பட்ட காதல் தம்பதி கண்ணகி - முருகேசன் நினைவாக அவர்களின் பெயரில், சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர் களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்குகிறோம். கடந்த ஆண்டு அப்படி எட்டுத் தம்பதிகளுக்கு விருது கொடுத்தோம்.'' - நீண்டுத் தொடரும் தங்கள் வேலைத் திட்டத்தை பட்டியல் இடுகிறார் மணிமாறன்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பறை இசைத்தாலும் திருமண நிகழ்ச்சிகளில் இவர்களின் பறை மிக வும் உற்சாகமாகவே ஒலிக்கிறது. ''பறை ஒரு மங்கள இசை இல்லை என்பது பலருடைய எண்ணம். மனிதன் விலங்குகளை வெற்றிகொண்டதன் அடையாளம் பறை. அது நம் கலை இல்லை என்றால், பரதம் நம்

கலையா? ரசிப்பதை விடுங்கள், தமிழ்நாட்டில் எத்தனை பேருக்கு பரதம் புரியும்? பரதத்தைப் பார்த்து சிலிர்த்து எழ முடியுமா? ஆனால், பறை அடித்தால் ஏழு கோடி தமிழனும் ரசிப்பான். ஆரவாரித்துச் சிலிர்ப்பான். அதுதான் அந்தக் கலையின் ஆற்றல். பறை, பெருமைக்குரிய கருவி. பாரம்பரியக் கருவி. அது இந்திய சாதியச் சாக்கடையில் சிக்கிவிட்டது. அதை மீட்டு எடுக்க வேண்டும். தமிழ்நாட்டின் பிறந்த நாள் விழாக்களில், திருமணங்களில், விழாக்களில், நிகழ்ச்சிகளில், கொண்டாட்டங்களில் பறை இசை முழங்க வேண்டும். அதை நோக்கியே நாங்கள் நகர்கிறோம்!'' - பறை இசையாக ஓங்கி ஒலிக்கிறது மணிமாறனின் குரல்.

மகிழினியின் குரல் திசை எங்கும் எதிரொலிக்கிறது...

''சாதி மறுப்புத் திருமணத்தைப் பண்ணு
அப்பதான் சக்கிலியனும் பாப்பாத்தியும்
ஒண்ணோட ஒண்ணு
தமிழன், தமிழன்னு பீத்துற கண்ணு
தலித்தும் தமிழன்தான்
கல்யாணம் பண்ணு!''